Thursday, December 15, 2022

 

64. அந்தஸ்திற்கு தகுந்த படி கீழ்கண்டவற்றை வரிசைபடுத்துகமூமின், முஹ்சின், முஸ்லிம்,

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்:

  1. முஸ்லிம்,

  2. மூமின்,

  3. முஹ்சின்,

முஸ்லிம்:

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து வாழ்கின்றவர்களை முஸ்லிம்கள் என்பர். இது ஈமானின் முதல் படி. இது மனித நெஞ்சங் களில் குடி கொண்டுள்ளது. இது வலிமையாக இருக்கும் போது சுவர்க்கம் செல்ல வாய்ப்புண்டு.

முஸ்லிம்கள் யார் என்று விளக்கும் வகையில் குர்ஆனில் எண்ணற்ற வசனங்கள் உள்ளன:

நூஹ் (அலை) கூறினார்: "நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) வீட் இப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்" (3:67).

"அதில் முஸ்லிம்களிலிருந்து ஒரு வீட்டாரைத் (லூத் (அலை) வீட்டை) தவிர, ஒருவரையும் நாம் காண வில்லை." (51:36)

சுலைமான் (அலை) ஷீபா இளவரசிற்கு எழுதிய கடித்தில், " நீங்கள் என்னிடம் பெருமையடிக்கா தீர்கள். (இறைவனுக்கு) முற்றிலும் வழிப்பட்ட முஸ்லிம்களாக என்னிடம் வாருங்கள்" (என்றும் எழுதப்பட்டிருக்கிறது). (27:31).

மேலும், "இந்தப் பெண்மணிக்கு முன்பே நாங்கள் ஞானம் கொடுக்கப்பட்டு விட்டோம், நாங்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறோம் (என்றும் சுலைமான் (அலை) கூறினார்). (27:42)

யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது,  நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; "எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?" எனக் கேட்டதற்கு, "உங்கள் நாயனை- உங்கள் மூதாதையர் இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை), இஸ்ஹாக் (அலை) ஆகியோ ரின் நாயனை- ஒரே நாயனையே - வணங்குவோம்; அவனுக்கே (முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்" எனக் கூறினர். (2:133).

ஈஸா (அலை) அவர்களின் சிஷ்யர்களான ஹவா ரிய்யூன்; "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள் ளோம். திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், (3:52).

"வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமை யிலும் நீயே என் பாதுகாவ லன்; முஸ்லீமாக (உனக்கு முற்றிலும் வழி பட்டவ னாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பறறிக் கொள்வாயாக!" என்று யுசுஃப் (அலை) பிரார்த்தித் தார்.(12:101)

ஃபிர்அவனின் சூனியகார்கள், "எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமை யையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க (ள் ஆத்மாக்க) ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" (எனப் பிரார்தித்தனர்.) (7:126).

குர்ஆனில் முஸ்லிம், மூமின் என்ற வார்த்தைகள் அழகாக வரையறுக் கப்பட்டுள்ளன. மூமினாக உள்ளவர் முஸ்லிம் என்று கூறப்படலாம். ஆனால் வெறும் முஸ்லிமாக உள்ளவரை மூமின் என்று அழைக்க முடியாது. இதை அழகான உதாரணத் துடன் குர்ஆன் இப்படி கூறுகின்றது.

"நாங்களும் ஈமான் கொண்டோம்" என்று (நபியே! உம்மிடம்) நாட்டுப் புறத்து அரபிகள் கூறுகிறார்கள், "நீங்கள் ஈமான் கொள்ளவில்லை. எனினும் 'நாங்கள் வழி பட்டோம்' (இஸ்லாத்தைத் தழுவினோம்) என்று (வேண்டுமானால்) கூறுங்கள் (என நபியே! அவர்களிடம்) கூறுவீராக ."ஏனெனில் உங்களுடைய இதயங்களில் (உண்மையான) ஈமான் நுழைய வில்லை மேலும், நீங்கள் அல்லாஹ் வுக்கும்,அவனுடைய தூதருக்கும் வழிப்பட்டு நடப்பீர்களாயின் அவன் உங்களுடைய நற்செய் கைகளில், எதையும் உங்களுக்குக் குறைக்க மாட்டான்" (49:14).

குர்ஆனில் மூமின்கள் குறித்து இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது:

மூமின்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.

அவர்கள் எத்தகையோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச் சத்தோடு இருப்பார்கள்.       

இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய) வற்றை விட்டு விலகியிருப்பார்கள்.

ஜகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.

மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங் களைக் காத்துக் கொள்வார்கள்.

இன்னும், அவர்கள் தங்கள் (இடம் ஒப்படைக்கப் பட்ட) அமானிதப் பொ ருட்களையும், தங்கள் வாக் குறுதிகளையும் காப்பாற்றுவார்கள்.

  மேலும் அவர்கள் தம் தொழுகைகளை (க்குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்.(23:1-9).

மூமின்கள், முஸ்லிம்களை விட ஒருபடி மேல். ஏனெனில் அவர்கள் தங்கள் நெஞ்சங்களிலுள்ள  ஈமானை நடை முறை படுத்துகிறார்கள். ஆகை யால் அவர்கள் சுவர்க்கம் செல்லும் வாய்ப்புகள் அதிகம்.

முஹ்சின்கள் -  உயர் நிலை விசுவாசிகள்:

 அவர்கள் அதிகமாக பிரார்த்தித்து, அல்லாஹ்விற்கு பயந்து தங்கள் செல்வத்தை அவனுக்காக பயன் படுத்தி, கஷ்டப்பட்டு, அல்லாஹ்வினால் வழி நடத்தப்பட்டு, அவனுடைய  அன்பை சம்பாரித்து, இரு உலகிலும் அதற்கான கூலி பெற்று தாங்கள் பிறந்த பயனை அடைகின்றனர். அல்லாஹ் சூரா மாய்தாவில் முஹ்சின்களின் இரண்டு பண்புகளை குறிப்பிடுகின்றான்இறையச்சம்  உடையவர்கள்நற்கருமங்கள் செய்பவர்கள்.

"ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்ட வற்றை விட்டுத்) தங்களைப் (பின்னரும்) பாதுகாத் துக் கொண்டும், ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர் களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார் களானால், சென்ற காலத்தில் (இவ் விதி முறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது." (5:93)

அல்லாஹ் முஹ்சின்களை நேசிக்கின்றான்   وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ  ஏனெனில் அவர்கள்:

   தன்னை அல்லாஹ்வுக்கே அர்ப்பணம் செய்து, (2:112),

  தொழுகையை நிலைப்படுத்தி (11:114)

  இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தித்து. (7: 55)

  அச்சத்தோடும் எதிர்ப்போடும் அல்லாஹ்வை பிரார்த்தித்து (7: 56)

  பொறுமையோடும் இருப்பார்கள் (11:115)

  இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்க மாட்டார்கள். (51:17)

 அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். (51:18)

  அவர்களுடைய செல்வத்தில் இரப்போருக்கும், வசதியற்றோருக்கும் பாத்தியதை உண்டு. (51:19)

  அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்.

  கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். (3:134)

  மனிதர் (கள் செய்யும் பிழை) களை மன்னிப்போராய் இருப்பார்கள்.

  அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வார்கள் (2:195)

இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (2:112). அவர்களின் நற்செயல்கள் சிறு பாவங்களை போக்கும். அல்லாஹ் இவ்வாறு முஹ்சின்களுக்கு இவ்வுலகிலும் நற்கூலி கொடுப்பான். (77: 44) மறுமையிலும் மிக அழகான கூலியை கொடுப்பான் (3:148).

இப்ராஹிம் (அலை) தன் மகனை குர்பானி செய்ய முயற்சித்து தன் கனவினை நிறைவேற்றி முஹ்சின் நிலையை அடைந்தார். (37:105). அவருக்கு இஸ்ஹாக் (அலை) மையும் யாகூப் (அலை) மையும் கொடுத்து அவர்களை நேர்வழியிலும் செலுத்தினார்.

தன் இஹ்ஸானாலும் பொறுமையாலும் தான் விரும்பிய விதத்தில காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக (அலை) முக்கு அல்லாஹ் இவ்வாறு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தான். அல்லாஹ்வின் அருளால் அவருடைய சகோதர்களும் (12: 78) சிறையிலிருந்தோரும் (12:36), அவரை முஹ்சின் என்று விளிக்கும் அளவிற்கு அவரை தயார் படுத்தினான்.

அது போலவே நூஹ் (அலை) மையும் அவர் சந்ததியினரான தாவூத் (அலை) மற்றும் சுலைமான் (அலை) மற்றும் அய்யூப் (அலை) யூஸுஃபு (அலை), மூஸா (அலை) ஹாரூன் (அலை) அவர்களை  முஹ்சின்களாக ஆக்கினான். (6: 84).

அல்லாஹ்வின் தூதர் கூறினார்: உறுதியான விசுவாசி, பலஹீனமான விசுவாசியை விட மேலானவர், அல்லாஹ்விற்கு பிரியமானவர் என்றாலும் இருவருமே நல்லவர்கள். உங்களுக்கு எது பயன்தருமோ அதை அடைய பாடுபடுங்கள்! அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! ஆதரவற்று இருக்கின்றோம் என்று கருதாதீர்கள்!

الحمدلله

Kindly read the web version

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...