63. அல்லாஹ்
எதற்காக மனிதனை படைத்தான்? இதைப் பற்றி குர்ஆன் கூறுவதென்ன?
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
பதில்:
அல்லாஹ் நம்மை படைத்தது, அவனை வணங்குவதற்காக. அவன் குர்ஆனில் கூறுகின்றான்:
"ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே அன்றி நான்
படைக்கவில்லை." (அத் தாரியாத், 51:56).
ஆனால்
இதற்கு அடுத்த வசனத்தில்: "அவர்களிடமி ருந்து எந்த பொருளை யும் நான்
விரும்பவில்லை. எனக்கு அவர்கள் உணவு அளிக்க வேண்டுமென் றும் நான் விரும்பவில்லை.
நிச்சயமாக அல்லாஹ் தான் உணவு அளித்துக் கொண்டிருப்பவன்; பலம்
மிக்கவன்; உறுதியானவன். (அத் தாரியாத்,
51:57 & 58).
அல்லாஹ்விற்கு
நம் வணக்கத்தால் பயன் ஒன்றும் இல்லை. ஆனால் நம்மை படைத்த அல்லாஹ்வின் புகழ் பாடி
அவனை வணங்கும் போது நாம் தாம் வாழ்வில் வெற்றியடைகின்றோம். எப்போதும் அல்லாஹ்வை யே
வணங்கி, தாங்கள்
பிறந்த பயனை அடைகின்றனர் எண்ணற்ற வானவர்கள். பின் ஏன் தன்னை வணங்குவதற்கு மனிதனை
படைத்தான் அல்லாஹ்?
இறைவனை வணங்குவதற்கு பதிலாக நாம் நம் வாழ்வில் செல்வத்தை, அழகை, புகழை, பிள்ளை களை,
இன்பத்தை, நிம்மதியை நேசிக்கின்றோம்.
நாம் நம்முடைய நேரத்தை தேவை இல்லாத விஷயங்களுக்காக செலவழிக்கின்றோம்.
நாமே நமக்கு ஒரு குறிக்கோளை வகுத்து, அதில்
வெற்றி யடைய, இவ்வுலகத்தில் பாடாய்படுகின்றோம்.
எவ்வளவு நேரம் கடவுளை வணங்க எடுத்துக் கொள்கின்றோம்? அல்லாஹ்வை
வணங்குவது தான் நம் முதல் குறிக்கோள் என்று எண்ணுவதே இல்லை!
அல்லாஹ் முதன் முதலில் மனிதனை படைத்த போது
நடந்ததை சற்று நினைவு கூறுவோம்:
“ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் அல்லாஹ்
மனிதனை (அல் ஹிஜ்ர், 15:26 & 28, 6:2, 23:12, 37:11, 55:14) "தன் இரு கைகளால்" படைத் தான்.” (ஸாத், 38: 75). எந்த
ஒரு படைப்பையும் படைக்க அல்லாஹ் இந்த அளவு முக்கியத்துவம் எடுத்துக் கொள்ளவில்லை.
ஒரு தனித்தன்மை யோடு மனிதனை படைத்தான்.
“அல்லாஹ் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில்
படைத்தான்.” (அத் தீன், 95:4).
“அவன் தான் மனிதனை படைத்து அவனை ஒழுங்குபடுத்தி
செவ்வையாக்கினான். எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உறுப்புக்களைப்)
பொருத்தினான். பிறகு அவன்
அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹ்வை ஊதினான்.” (82:
7-8, 38:72, 32:9,15:29) “இன்னும் செவிப் புலனையும், பார்வைப் புலன்களையும்,
இருதயத்தையும் அவனுக்கு அமைத்தான்.” (32:9).
பின்னர்
அல்லாஹ் கூறுகின்றான், “அவனை ஒரு பாதுகாப்பன இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம்.
பின்னர் அந்த இந்திரியத்
துளியை இரத்தக் கட்டியாக்கி,
பின்னர் அதை தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர்
அத்தசைப் பிண்டத் தை எலும்புகளாகவும்; பின்னர்,
அவ்வெலும்பு களுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர்
நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (23:12−14).
"உங்கள்
அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து,
(பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைத்தான்" (அல்
அன்ஆம், 6:98).
மனிதனைப் படைத்த பிறகு, அவனை, மற்றவர் களை விட உயர்த்தினான்:
அல்லாஹ் மலக்குகளிடம்; "ஓசை
தரும் கருப்பு களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப் போகின்றேன்"
(15:28).
மேலும்
"அவரை நான் பூமியில் ஒரு பிரதிநிதியாக அமைக்கப் போகின் றேன்" என்று
கூறியபோது, அவர்கள் "(இறைவா!) நீ அதில்
குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்
போகின்றாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக
உன்னைத் துதித்து, உன் பரி சுத்ததைப் போற்றியவர்களாக
இருக்கின்றோம் என்று கூறினார்கள்.
அ(தற்கு
இறை)வன் "நீங்கள் அறியாதவற்றை யெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக்
கூறினான். (20:3)
பின் அல்லாஹ் வானவர்களைப் பார்த்து "ஆதமிற்கு சிரம் பணியுங்கள்" என்றான் (15: 29). எல்லோரும் சிரம் பணிந்தனர் இப்லீஸை தவிர. இப்லீஸ் மனிதனுக்கு பகிங்கிர எதிரி ஆகி ஆதமையும் அவர் மனைவியையும் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றினான். பூமிக்கு அனுப்பப்பட்ட அவர்கள் தன் தவறுக்காக வருந்தி அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கவே அல்லாஹ்வும் மன்னித்தான். அது வரை அறியாத அல்லாஹ்வின் பண்பான மன்னிக்கும், குணமும், அருளும் வெளிப்பட்டது. ஏனெனில் வானவர்கள் தவறு செய்வதுமில்லை. மன்னிப்பு கேட்பது மில்லை.
அதன் பின்
மக்கள் வழி தவறிய போதெல்லாம் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி போதித்தான். அவர்கள்
ஒவ்வொருவரும் "அல்லாஹ்வை யன்றி (வேறு எதனையும்)
நீங்கள் வணங்காதீர்கள் - நிச்சயமாக ஒரு கடுமையான நாளின் வேதனை உங்களுக்கு வரும்
என்று நான் பயப்படுகின்றேன்" என்று கூறினார்கள். (46: 21).
ஆகையால் அல்லாஹ் தன் தூதர்கள் வாயிலாக மனிதர்களுக்கு வழிகாட்டினான்:
"மனிதர்களே!
நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே
வணங்குங்கள். (அதனால்) நீங்கள் இறையச்சம்
உடையோராகலாம். (2:21).
"அல்லாஹ்வையன்றி
(வேறு) எதனையும் நீங்கள் வணங்காதீர்கள்" (41:14).
நிச்சயமாக,
அல்லாஹ் தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும்
இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே நேரான வழி. (43:64).
"நீர்
அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும், அவனுக்கு நன்றி செலுத் துபவர்களில்
என்றும் இருப்பீராக!" (39:66).
"அவனே
(என்றென்றும்) உயிரோடிருப்பவன்; அவனையன்றி (வேறு) நாயனில்லை - ஆகவே
நீங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபட்டு தூய உள்ளத்தோடு அவனை அழையுங்கள் " (40:
65).
"அல்லாஹ்வை
வணங்குகிறவர்களாக இருந்தால் சூரியனுக்கும், சந்திரனுக்கும்
ஸுஜூது செய்யாதீர்கள் - இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்.
(41:37).
"ஆதமுடைய
மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன்
உங்ளுக்குப் பகிரங்மான பகைவன்" என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?"என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இது தான்
நேரானவழி. (36: 60 & 61).
"என்னையே
நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங் (கள்
பிரார்த்தனை) களுக்கு பதிலளிக்கின்றேன்; எவர்கள் என்னை
வணங்குவதை விட்டும் பெருமை
யடித்துக் கொண்டிருக்கிறார்ளோ, அவர்கள் சிறுமை அடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார் கள்." (40:60).
"(நபியே)
நீர் கூறுவீராக என்னுடைய இறைவனிட மிருந்து தெளிவான அத்தாட்சிகள் எனக்கு வந்த
பொழுது அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைப்ப வற்றை வணங்குவதை விட்டும் நிச்சயமாக நான்
தடுக்கப்பட் டுள்ளேன் - அன்றியும் - அகிலத்தின் இறைவனுக்கே அடிபணிய வேண்டும் என்று
கட்டளையிடப்பட்டு இருக்கின்றேன்."((40:66).
"நீங்கள்
முற்றிலும் அவனுக்கே வழிபட்டு மார்க் கத்தில் பரிசுத்தத்துடன் அல்லாஹ் ஒருவனையே
(பிரார்த்தித்து) அழையுங்கள். (40:14).
மனிதன் இவையெல்லாவற்றையும் புறக் கணித்த போது அல்லாஹ் அவர்களை நோக்கி கேட்கின்றான்:
"நாம்
உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள்
நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப் பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர் களா?"
(23:115).
"யாதொரு
பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன்
நினைத்துப் பார்க்க வேண்டாமா?"(19:67).
''மனிதனே!
கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும் படி
உன்னை மருட்டி விட்டது எது?'' (82:6).
"நீங்கள்
நன்றி செலுத்துவது மிகச் சொற்பமே யாகும். (32:9).
"மனிதனை
ஒரு துளி இந்திரியத்திலிருந்து நாமே நிச்சயமாகப் படைத்தோம் என்பதை அவன்
பார்க் கவில்லையா? அவ்வாறிருந்தும், அவன் (நமக்கு) வெளிப் படையான தர்க்கவாதியாகி விடுகிறான். மேலும் அவன்
தன் படைப்பை (கீழ் தரமாக படைக் கப் பட்டது என்பதை) மறந்து விடுகின்றான் (36:77−
78).
"(அவன்
செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க
தாழ்ந்தவனாக்கினோம். (95:5)".
நிராகரிப்பாளர்களைப்
பார்த்து அல்லாஹ் கூறுகின்றான்:
"நிச்சயமாக
நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களி லிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத் துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின் றன- ஆனால்
அவற்றைக் கொண்டு அவர்கள் நல் லுணர்வு பெறமாட்டார் கள்; அவர்களுக்குக்
கண் கள் உண்டு; ஆனால், அவற்றைக்
கொண்டு அவர் கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்ப தில்லை அவர்களுக்குக்
காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனை யைக்) கேட்கமாட்டார்கள்.
இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி
கேடர்கள்" (7:179).
ஆகையால்:
"மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து
கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே
ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும்
படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்
படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே
பயந்து கொள்ளுங்கள்." (4:1). உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து
உண்டாக்கிப் பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர்
கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. (6:98).
கீழே
கொடுக்கப்பட்ட வசனங்கள் போல் நடந்து கொள்ளுங்கள்:
''அறிவுடையவர்கள்
நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும்
போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள். வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, "எங்கள் இறை வனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்க வில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப் பின்
வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள் வாயாக!" (என்றும்;) பிரார்த்திப்பார்கள்.(3:190
& 191).
"என்னைப்படைத்தவனை
நான் வணங்காம லிருப்பதற்கு எனக்கென்ன (காரணமிருக்கிறது?) அவனிடமே
நாம் மீட்கப் படுவோம்.'' (36:22).
الحمدلله
No comments:
Post a Comment