58. "என் இறைவா!
நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின் பால் நிச் சயமாக நான் தேவையுள்ளவனாக
இருக்கின்றேன்"
رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ
خَيْرٍ فَقِيرٌ
இந்த
துவாவை ஓதியது யார்?
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
பதில்:
மூஸா (அலை).
நகரத்தின் ஒரு கோடியிலிருந்து (நன்) மனிதர் ஒருவர் ஓடி வந்து, "மூஸாவே! (அலை) நிச்சயமாக (இந்நகர்ப்) பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென்று ஆலோசனை செய்கிறார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) வெளியேறி விடுவீராக! நிச்சயமாக நான் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவன் ஆவேன்" என்று கூறினார். (28:20).
"ஆகவே,
மூஸா (அலை) பயத்துடனும், கவனமாக வும்
அ(ந்நகரத்)தை விட்டுக் கிளம்பி விட்டார்; "என்
இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக்
காப்பாற்று வாயாக!" என பிரார்த்தித்தார். (28:21).
பின்னர்,
அவர் மத்யன் (நாட்டின்) பக்கம் சென்ற போது, 'என்
இறைவன் என்னை நேரான பாதையில் செலுத்தக் கூடும்' என்று
கூறினார். (28:22)
"இன்னும்,
அவர் மத்யன் நாட்டுத் தண்ணீர்(த் துறையின்) அருகே வந்த போது,
அவ்விடத்தில் ஒர் கூட்டத்தினர் (தம் கால்நடைகளுக்குத்) நீர்
புகட்டிக் கொண்டிருந்ததைக் கண்டார்; அவர்களைத் தவிர,
பெண்கள் இருவர் (தங்கள் ஆடுகளுக்குத் நீர் புகட்டாது) ஒதுங்கி
நின்றதைக் கண்டார்; "உங்களி ருவரின் விஷயம் என்ன?" என (அப்பெண்களிடம்) அவர் கேட்டார்;
அதற்கு, "இம்மேய்ப்பவர்கள் (தண்ணீர் புகட்டி விட்டு) விலகும் வரை நாங்கள்
எங்கள் (ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது - மேலும் எம் தந்தை மிகவும் வயது
முதிர்ந்தவர்" என அவ்விருவரும்
கூறினார்கள். (28:23)
"ஆகையால்,
அவ்விருவருக்குமாக அவர் (ஆட்டு மந்தைக்குத்) தண்ணீர் புகட்டினார்;
பிறகு அவர் (ஒரு மர) நிழலில் ஒதுங்கி; "என்
இறைவா! நீ எனக்கு இறக்கியருளும் நல்லவற்றின்பால் நிச்சய மாக நான் தேவையுள்ளவனாக இருக்கின் றேன்" என்று கூறினார். (28:24 )
"(சிறிது
நேரத்திற்குப்) பிறகு அவ்விரு பெண்களில் ஒருவர் நாணத்துடன் நடந்து மூஸாவின் (அலை)
முன் வந்து "எங்களுக்காக நீங்கள் நீர் புகட்டிய தற்கான கூலியை உங்களுக்கு
வழங்குவதற்காக எங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்" என்று கூறினார்; இவ்வாறாக மூஸா (அலை) அவரிடம் வந்தபோது தம் வரலாற்றை
எடுத்துச்சொன்னார்; அதற்கவர்; "பயப்படாதீர்! அக்கிரமக்கார சமூகத் தாரை விட்டும் நீர்
தப்பித்துவிட்டீர்" என்று கூறினார்.
(28:25)
"அவ்விரு
பெண்களில் ஒருவர் கூறினார்; "என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரைக்
கூலிக்கு அமர்த்திக் கொள்ளுங்கள்;
நீங்கள் கூலிக்கு அமர்த்துபவர்களில் நிச்சயமாக
இவர் மிகவும் மேலானவர் பலமுள்ளவர்; நம்பிக்கையானவர்." (28:26)
"(அப்போது
அத்தந்தை மூஸா (அலை) மிடம் கூறினார்; "நீர்
எனக்கு எட்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் மீது, என்னுடைய இவ்விரு பெண்களில் ஒருவரை உமக்கு மணமுடித்துக் கொடுக்க
நிச்சயமாக நான் நாடுகிறேன் - ஆயினும், நீர் பத்து
(ஆண்டுகள்) பூர்த்தி செய்தால், அது உம் விருப்பம்; நான் உமக்கு சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. இன்ஷா அல்லாஹ்,
என்னை நல்லவர்களில் உள்ளவராக காண்பீர்." (28:27).
அதற்கு
மூஸா (அலை) கூறினார், "இதுவே எனக்கும் உங்களுக்கு மிடையே
(ஒப்பந்தமாகும்), இவ்விருதவணைகளில் நான் எதை
நிறைவேற்றி னாலும் என் மீது குற்றமில்லை - நாம் பேசிக் கொள்வதற்கு அல்லாஹ்வே
சாட்சியாக இருக்கிறான்.” (28:28) .
இந்த
துவா அவர் நபி ஆவதற்கு முன்பு ஓதியது.
இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம்
என்ன என்னவென்றால்:
மூஸா
(அலை) தன் வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும்
அல்லாஹ் வை முன் நோக்கியே செயல்படுத்தினார். (அல்லாஹ்விடம் திரும்பு தல்). அவர்
ஒருவரை எதேச்சையாக கொன்ற போது உடனே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கோரி னார்.
(அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கோருதல்). அவர் மிஸ்ரிலிருந்து தப்பித்த போது தவறுசெய்யும் இச்சமுதாயத்தாரி டமிருந்து தன்னை இரட்சிக்கும் படியும், தனக்கு நேர் வழி காட்டும் படியும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்.
(அல்லாஹ்விடம் நேர் வழி செல்ல சரணடைதல்) மிஸ்ரிலிருந்து மத்யனுக்கு வெகுதூரம்
தனியே கஷ்டப்பட்டு பயணித்தது, (அல்லாஹ்வின் விருப்பப்படி
செயல்படுதல்). மத்யனின் கிணற்றருகே வந்த போது இரண்டு பெண்களுக்கு உதவி செய்தது.
(உதவி செய்யும் குணம்).
அதன்
பின் அவர் இத்துவாவை கூறி (ஒரு மர) நிழலில் ஒதுங்கி அமர்ந்தார். அப்போது அவர் தனந்தனியாக இருந்தார். வெகுதூரம் நடந்த களைப்புடன் இருந்தார்.
உணவிற்கு வழியில்லை. பணமில்லை. தங்க இடமில்லை. உறவு என்று சொல்லிக் கொள்ள
ஒருவருமில்லை. ஃபிர்அவனின் மாளிகையில்
ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர். இவையெல்லாம் இல்லாமல் இருந்தும், இத்துவா வில் அவர் தனக்கு வேண்டிய எதையும் குறிப்பாக கேட்கவில்லை.
அவர் பிராத்தித்தது எல்லாம், "நான் நிச்சயமாக தேவை உள்ளவனாக
இருக்கின்றேன்" என்று தான்!
ஆகையால்
எல்லாம் வல்ல அல்லாஹ் அவருடைய எல்லா தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு உடனே
அவருக்கு அருளியது:
* ஆட்டு இடையரின் வேலை
* மனைவி
* குடும்பம்
* அன்பான, அறிவுரை செலுத்தும் மாமனார்
* ஒரு மைத்துனி
* எட்டு வருடங்கள் கழித்து கிடைத்த நபித்துவம், ஆகியவை.
பாருங்கள்!
எவ்வளவு அழகாக அல்லாஹ் அவருடைய துவாவை ஏற்றுக் கொண்டு அருளிய அருட்கொடைகள்! மூஸா
(அலை) தன் வாழ்நாளில் அல்லாஹ் தனக்கு கொடுத்த அருட்கொடைகளை அப்படியே ஏற்றுக்
கொண்டார். அல்லாஹ் அவர்களை இஸ்ரவேலர்களிடம் எளிமையாகவும், இறையச்சத்துடனும்,
அரண்மனையில் ஆடம்பரத்திலும்
வளரச்செய்தான்! இப்போது அவரை ஆட்டு இடையனாக பணி புரிய நாடினான்! ஏனெனில்
நிறைய நபிமார்கள் தன் வாழ்நாளில் ஆட்டு இடையராக இருந்தவர்கள். இதனால் எளிய
வாழ்க்கை வாழவும், கஷ்டப்பட்டு உழைக்கவும், பொறுப்புடன் இருக்கவும், எந்த இன்னல்கள்
வந்தாலும் அதனை சவாலாக ஏற்றுக்கொண்டு பொறுமையாக செயல்படும் திறமையையும் கிடைக்க
அல்லாஹ் அவருக்கு வாய்ப்பளித்தார்.
الحمدلله
No comments:
Post a Comment