Monday, November 14, 2022

 

34. கோடிட்ட இடங்களை நிரப்புக:

 "அவைகளின் ............. அவற்றின் ...................... அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்;  அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு இவ்வாறாக அவற்றை (கால்நடைகளை) உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்."

பதில்: மாமிசமும், இரத்தமும்.

 ﺑِﺴْـــــــﻢِﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍلرَّﺣِﻴﻢ

அல்லாஹ் கூறுகின்றான். " நாம் ஒவ்வொரு வகுப்பாருக்கும் மதச்சார்பான சடங்குகளை உருவாக்கி இருக்கிறோம்" (22: 34).  அம்மாதிரியான சடங்குகளில் ஒன்று ஹஜ். ஹஜ்ஜின் தலையாய கடமைகளில் ஒன்று கால்நடைகளை பலி கொடுப்பது. குர்பானி அல்லது உதையா என்பது அல்லாஹ்வை வழிபடும் ஒரு வகையான முறை. இவ்வாறு வழிபடுவதால் அல்லாஹுதாலாவின் அருகாமையை அடைய முடியும். அல்லாஹ்    سبحانه وتعالىٰமுஸ்லிம்களுக்கு கட்டளையிடுகின்றான்: "ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காக நிறை வாக பூர்த்தி செய்யுங்கள்." (2:196) என்று.

 

குர்பானி என்பது,  இப்ராஹிம் (அலை) தன் ஒரே மகனான  இஸ்மாயில் (அலை)மை அல்லாஹ்விற்கு பலியிடுவதற்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்த செயலை நினைவு கூர்வதற்காக அமைக்கப்பட்ட செயல்.அல்லாஹ் தன் திருக்குர்ஆனில் இவ்வாறு கூறுகின்றான்:  "ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்." (37:107).

 

ரஸுலுல்லாﷺ) ) கூறியதாக ஆயிஷா (ரஜி) அம்மையார் குறிப்பிடுகின்றார்: "குர்பானி கொடுக்கும் நாட்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் கால்நடைகளை பலியிடுவது‌. அந்த பலியிட்ட பிராணி கூலி கொடுக்கும் மறுமை நாளில் தன் கொம்புகளுடன், தன் ரோமங்களுடன் தன் குழம்புகளுடன் நம் நன்மையை எடை போடும் போது வந்து நிற்கும். அதன்

இரத்தம் பூமியில் விழுவதற்கு முன் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்படும். ஆகவே தெளிந்த மனதுடன் சந்தோஷமாக குர்பானி கொடுங்கள்.” (திர்மிதி, இப்னு மஜாஹ்). இந்த ஹதீஸ் குர்பானி கொடுப்பதன் நோக்கத்தை குறிப்பிடுகிறது.

 

குர்பானி கொடுப்பது ஆதம் (அலை) காலம் தொட்டே நடைமுறை படுத்தப் பட்ட செயலாகும். இதை அல்லாஹ் தன் வாக்காக குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகின்றான்: "மெய்யாகவே அல்லாஹ் (உயிர்பலியை) ஏற்றுக் கொள்வது பயபக்தியுடையவர்களிடம்  இருந்துத் தான்" (5:27).

 

நபி (ﷺ)  அவர்கள் காலத்திற்கு முன்பே, மக்கள் உயிர்பலி கொடுக்கும் போது தங்கள் தெய்வங்களுக்கு என்று ஒரு பாகத்தை எடுத்து வைப்பர். மேலும்  இரத்தத்தை காபாவின் சுவர்களில் தெளிப்பர். ஆகையால்

அல்லாஹ் குர்ஆனில் இப்படி கூறியுள்ளான்:  "(எனினும்) குர்பானியின் மாமிசமோ, அவற்றின் உதிரமோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில் லை, ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்" அல்லாஹ் தான் படைத்தவர்களிடமிருந்து எதையும்  எதிர்  பார்க்கமாட்

டான்,  அவர்களுடைய பயபக்தியையும், தம்மை முழுமையாக சமர்பிப்பதைத் தவிர. அவன் நேர்மையையும் பயபக்தியையுமே, பலி கொடுக்கும் போது எதிர்பார்க்கிறான். நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும்படியும், நன்றி செலுத்தும் படியும் கூறுகின்றான்.

 

அல்லாஹ் பலி கொடுக்கப்படும் கால்நடை

களைப் பற்றி திருக்குர்ஆனில் கூறியுள்ளான்:

 

"(குர்பானிக்கு என்று நிர்ணயிக்கப்பெற்ற) பிராணிகளில் ஒரு குறிப்பிட்ட தவணை வரையில் உங்களுக்கு பலனடைய (அனுமதி) உண்டு. அதன் பின்னர் (உரிய காலம் வந்ததும்) அவற்றின் (குர்பானிக்கான) இடம் அந்தப் புராதன ஆலயத்தின் பால் இருக்கிறது." (22:33) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

 

"இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல் லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது. எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல் (லி குர்பானி செய்) வீர்களாக. பிறகு,  அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த பின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், யாசிப் போருக்கும் உண்ணக் கொடுங்கள். இவ்விதமாகவே,  நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம்." (22:36). ஆகையால் உங்களை வழிகாட்டியதற்காக அவனது புகழ் பாடுங்கள். (22:37).

 

ஐந்து வயது ஒட்டகம், இரண்டு வயது மாடு,  ஒரு வருட வெள்ளாடு,  ஆறு மாதமான செம்மறியாடு அல்லது இவற்றை விட அதிக வயதுடைய கால்நடைகள் குர்பானிக்கு உகந்தவை. இதை விட சின்ன வயது பிராணி களை பயன்படுத்தக் கூடாது. ஒட்டகத்தையும், மாட்டையும் ஏழு பேர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம். வெள்ளாடு, செம்மறி ஆடு, ஆட்டுக் கடா இவற்றை ஒருவர் பேரில் மட்டுமே கொடுக்கவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்: "குர்பானிக்காக நேந்து விட்டிருக்கும் பிராணிகளை தாக்குவதோ, துன்புறுத்து வதோ கூடாது." (5:2).

குர்பானிக்காக பயன்படுத்தப் படும் பிராணிகளின் வயது மற்றும் உடல்நிலை: 

கால் ஊனத்துடன் நடக்க முடியாமல் இருக்கும் விலங்குகள், பாதிக்கும் மேல் துண்டிக்கப்பட்ட வால் உடைய விலங்குகள், அடியோடு நீக்கப்பட்ட கொம்புகள் இல்லா பிராணிகள்,  கண் குருடான,  ஒல்லியான, பலவீனமான பிராணிகள், காதுகள் நீக்கப்பட்ட  பிராணிகள், பாதிக்கும் மேல் பல் நீக்கப்பட்ட பிராணிகள் ஆகியவற்றை குர்பானிக்காக பயன்படுத்தக் கூடாது. குர்பானிக்காக வளர்க்கப் படும்  கால்நடைகளை நன்கு  பராமரித்து கொழுக்க வைக்க வேண்டும்.

 

ஹஜ் செய்ய செல்லாதவர்கள் குர்பானி கொடுப்பது கட்டாயமா? கட்டாயம் இல்லை! ஆனால்  யார் ஜகாத் கொடுக்க தகுதி பெற்றிருக்கிறார்களோ அவர்கள் மீது குர்பானி மிகவும் பரிந்துரைக்கப்பட்ட செயலாகும். குர்பானி கொடுக்க தீர்மானித்தவுடன், துல் ஹிஜ்ஜா பிறை பார்த்த பிறகு நகம், முடி வெட்டுவதை குர்பானி கொடுக்கும் வரை தவிர்க்க வேண்டும்.

 

எப்போது குர்பானி கொடுக்க வேண்டும்?

 

ஹஜ் செய்பவர்கள் தன் தகுதிக்கேற்ப கட்டாயமாக குர்பானி கொடுக்க

வேண்டும். "ஹஜ் உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானி கொடுக்க வேண்டும்." (2:196). "அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு நீங்கள் தடுக்கப் படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளை) அனுப்பி விடுங்கள். அந்த ஹத்யு (குர்பானி செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்."

 

"(அவ்வாறு குர்பானி கொடுக்க) சாத்திய மில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்) திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்விற்கு பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்." (2:196).

 

ஹஜ் செய்ய செல்லாதவர்களுக்கு குர்பானி கொடுப்பதற்கு சிறந்த தினம், துல் ஹிஜ்ஜாவின் 10-ம், 11-ம் அல்லது 12-ம் நாள். ஈத் தொழுகைக்குப் பின்னர்

தான் குர்பானி கொடுக்க வேண்டும். தொழுகைக் முன்னர் கொடுத்தவர்கள் வெறும் மாமிசத்திற்காக பிராணியை அறுத்ததாக கொள்ள வேண்டும். ஆகையால் அவர்கள் இன்னொரு பிராணியை மீண்டும் குர்பானி கொடுக்க வேண்டும்.

 

ஜுன்தாப் பின் சுஃபியான் அல் பஜாஜி கூறுகிறார்: "நஹர்/ஈத்-துல்-அதா

நாளில் நபி (ﷺ) கூறியதை கேட்டேன். "யார் ஈத் தொழுகைக்கு முன்னர் குர்பானி கொடுக்கின்றார்களோ அவர்கள்  தொழுகைக்குப் பின் இன்னொரு குர்பானியை அதற்கு பகரமாககொடுக்க வேண்டும். யார் குர்பானியை இன்னும் கொடுக்கவில்லையோ அவர்கள் இப்பொழுது கொடுக்கவும்."

 

குர்பானியை எப்படி கொடுக்க வேண்டும்?

 

அல்லாஹ் கூறுகின்றான்: ".....குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல் (லி அதாவது, "பிஸ்மிக வ அல்லாஹு அக்பர்,  அல்லா ஹும்ம மின்க வ இலைக்"  என்று கூறி குர்பானி கொடுங்கள்).  எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்." (22:28)

 

"இன்னும் கால்நடை(ப் பிராணி) களிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு உணவாக்கியுள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற)வற்றின் மீது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறும் படிச் செய்வதற்காவே குர்பானி கொடுப்பதை ஒவ்வொரு வகுப்பாருக்கும் (கடமையாக) ஆக்கியிருக்கிறோம்; ஆகவே உங்கள் நாயன் ஒரே நாயன் தான் ; எனவே அவ(ன் ஒருவ)னுக்கே நீங்க முற்றிலும் வழிப்படுங்கள்;  (நபியே!) உள்ளச்சம் உடையவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (22:34).

 

நம்மை படைத்தவனும், நமக்கு கொடுப்பவனுமான அல்லாஹ்வை குர்பானி கொடுக்கும் போது நினைவு கொள்ளுங்கள். அவனது அன்பும் திருப்தியும்  கொண்ட பாதையில் வழி நடத்தியதற்காக  அவனது புகழை துதி செய்யுங்கள்.  அல்லாஹ் சூரா அல்-கெளஸரில் கூறுகிறான்:  "உம் இறைவனுக்கு நீர் தொழுது,  குர்பானியும் கொடுப்பீராக." (108:2) என்று

 

ஆகவே முஸ்லிம்களே! "மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே சொந்தமாகும்." என்று கூறுவீராக!" (6:162).

                                           الحمدلله

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...