Wednesday, November 16, 2022

 

36. கோடிட்ட இடங்களை நிரப்புக:

36.  எவன் அல்லாஹ்விற்கும், அவனுடைய மலக்குகளுக்கும்,அவனுடைய தூதர்களுக்கும், ......................, .................................. பகைவனாக இருக்கின்றானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவன் ஆகவே இருக்கிறான்."

பதில்: ஜிப்ரீல் (அலை), மிக்காயில் (அலை). (2:98).

                                                               

                                                               ﺑْﺴـــــــﻢِﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍلرَّﺣِﻴﻢ                                                     

 

இந்த ஆயத்தை சொல்வதற்கு முன்பு அல்லாஹ், ஜிப்ரீல் (அலை), தன் கட்டளைக்கு இணங்கித்தான் இந்த குர்ஆனை நபி (ﷺ) அவர்களிடம் கொண்டுவந்தார். ஆகையால் யார் ஜிப்ரீல் (அலை)மை விரோதி என கூறுகிறார்களோ அவர்கள் இறைநிராகரிப்பவர்கள்.  அல்லாஹ் நிராக ரிப்பவர்களின் எதிரி.

 

"யார் ஜிப்ரீல் (அலை)மிற்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல் லாஹ்விற்கும் விரோதியாவான்) என்று (நபி யே!) நீர் கூறும்; நிச்சயமாக அவர்  அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது. இன்னும் அது  வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது." (2:97).

 

வானவர்கள் மேல் நம்பிக்கை வைப்பது என்பது இமானின் ஆறு தூண்களில் ஒன்று. இந்த ஆறிலும் ஏதாவது ஒன்றன் மேல் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் அவன் மூமின் இல்லை. அவன் நம்பிக்கையும் முழுமை அடையாது. அந்த ஆறு தூண்கள் எது என்றால்: அல்லாஹ், அவனுடைய வானவர்கள், அவனுடைய வேதங்கள், அவனுடைய நபிமார்கள், மறுமை நாள், அல்லாஹ் விதித்தபடி தான் நடக்கும் என்று நம்பிக்கை வைப்பது!

 

அல்லாஹ் மலக்குகளிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றான்! (22:75). ஆகையால் எல்லா தூதர்கள் மேலும் நம்பிக்கை வைப்பது இமானின் ஒரு பகுதியாகும். அவர்களை நிராகரிப்பது குஃப்ருவிற்கு சமம். இந்த ஆயத் ஜிப்ரீல் (அலை)மை எதிரியாக வும்,  மிக்காயில் (அலை)மை நண்பராகவும் கருதும் யூதர்களுக்காக இறக்கப் பட்டது.

 

மூன்று ஹதீஸ்கள் இந்த ஆயத் நபி (ﷺ) அவர்களுக்கு இறக்கப்பட்டதைப்பற்றி தெரிவிக்கிறது:

 

1. அப்துல்லாஹ் பின் சலாம் (ரஜி) அவர்கள் நபி (ﷺ) மிடம், அவர் அல்லாஹ் வின் தூதர் தான் என்று அறிய மூன்று கேள்விகளை கேட்டார். நபி(ﷺ) அவர்கள் இப்பொழுது தான் ஜிப்ரீல் (அலை) இதற்கான பதில்களை அறிவித்தார் என்றார். அதனை கேட்ட சலாம், "ஜிப்ரீல் (அலை) யூதர்களின் பகைவராச்சே!" என கூறிய போது இந்த ஆயத்தை அல்லாஹுதாலா இறக்கியருளினான்!

 

2. அபு பக்கர் அல்-அஸ்ப ஹானி எங்களுக்கு அறி வித்தார் > அல்-ஹபீஸ் அபுல்- ஷெய்க் > அபு யஹ்யா அல்-ராசி > சஹ்ல் இப்னு உத்மான்> 'அலி இப்னு முஷீர் > தாவூத் > அல்-ஷாபி ஆகியவர்கள் குறிப்பிட்டது:  'உமர் இப்னு கத்தாப் (ரஜி) கூறினார்:  'யூதர்கள் தவ்ராத்தை படித்துக் கொண்டிருக்கும் போது  நான் அவர்களிடம் சென்றேன், குர்ஆன் தவ்ராத்துடனும், தவ்ராத் குர்ஆனுடனும் இணங்குவதைக் கண்டு வியப்படைந்தேன் ........ ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களின்  தலைவர் கூறினார்: 'நபி (ﷺ) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதை நாங்கள் அறிவோம்!' என்று. நான் கூறினேன்: 'அவர் அல்லாஹ்வின் தூதர் என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருந்தும், அவரைப் பின்பற்ற வில்லை என்றால், நீங்கள் மிக மோசமான அழிவுக்கு ஆளாக நேரிடும்' என்று. அவர்கள் கூறினார்கள்: 'அவர்களிடையே எங்களுக்கு ஒரு எதிரி இருக்கிறார், அவர்களிடையே எங்களுக்கு ஒரு நண்பரும்  இருக்கிறார்'. நான் கேட்டேன்: 'உங்கள் எதிரி யார், உங்கள் நண்பர் யார்?' என்று. அதற்கு அவர்கள் கூறினார்கள்: 'எங்கள் எதிரி கேப்ரியல், அவர் கடுமையானவர் மற்றும் முரடானவர், சுமை மிகுந்த கஷ்டங்களை எங்களுக்கு தருபவர்.'  நான் கேட்டேன்:  'உங்கள் நண்பர் யார்?' அவர்கள்  'மென்மை,  மற்றும் எளிமையின் தேவதையாக இருக்கும் மைக்கேல் ' என்றனர். நான் கூறினேன்:  'அப்படியா னால்,  கேப்ரியல், மைக்கேலின் நண்பர்களுக்கு எதிரியாக இருப்பதும் கேப்ரியல் எதிரிகளுக்கு மைக்கேல் ஒரு நண்பராக இருப்பதும்  அனும திக்கப்படுவதில்லை என  நான் சாட்சியம் அளிக்கிறேன்,......" என்று கூறி நான் எழுந்து அவர்களை விட்டு விலகினேன்." 

பின் நடந்ததை நபி (ﷺ)  மிடம் கூற அவர், "கத்தாப் மகனே! இதன் தொடர்பாக எனக்கு இறக்கியருளப்பட்ட வசனங்களை  கூறவா?"  என்று இந்த வசனங் களை வாசித்து காண்பித்தார்‌.

 

3. இப்னு அப்பாஸ் (ரஜி) கூறியதாக இமாம் அஹமத் பதிவு செய்துள்ளது:

ஒரு தடவை ஒரு யூத கூட்டம் ஒன்று நபி (ﷺ)  அவர்களிடம் வந்து, நாங்கள் சிலவற்றை கேட்போம், அதற்கு பதில்  நபிமார்களுக்கு மட்டும் தான் தெரி யும், எங்களை அதைப் பற்றி பேச அனுமதியுங்கள்! என்று கூறி நான்கு கேள்விகளை கேட்டனர்.

நான்காவதாக அவர்கள் கேட்டார்கள்: "உங்களை பாதுகாக்கும் தேவதூதர் பற்றி கூறுங்கள். அதை கூறிய பிறகு நாங்கள் உங்களை பின்பற்றுவதா அல்லது விலகுவதா? என்று தீர்மானிப்போம்" என்று கூறினார்கள். அதற்கு நபி  ,(ﷺ) "இறைவாக்கை என்னிடம் கொண்டு வரும் தேவதூதர் ஜிப்ரீல் (அலை).அல்லாஹ் எப்போதும் எல்லா நபிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கவும், தூது செய்தியை கூறவும் அவரையே அனுப்புவார்' என்ற பதிலுக்கு அந்த யூதர்கள் கூறினர், "அப்படியானால் நாங்கள் உங்களை பின்பற்றவில்லை, ஜிப்ரீல் (அலை)மை தவிர வேறு யாராவது தேவதூதராக இருந்தால் நாங்கள் உங்களை பின்பற்றி இருப்போம்." அப்போது அல்லாஹ் இந்த வசனங்களை இறக்கியருளினான் என்று கூறப்படுகின்றது.

 

இந்த ஆயத் ஜிப்ரீல் (அலை) மின் எதிரிகளான யூதர்களை அச்சுறுத்தவ தற்காக இறக்கியருளப் பட்டது. யூதர்கள் அல்லாஹ்விற்கு பணிய மறுத்தனர். அதனால் அல்லாஹ்வின் பகைமையை சம்பாதித்தனர். இத்தகையவர்கள் இம்மையையும் இழந்து மறுமையையும் இழப்பர். உயர்ந்தவனான  அல்லாஹ்கூறினான் "எவனொருவன் என்னுடய ஒரு தேவ தூதரை எதிரியாக எடுத்துக் கொண்டார்களானால், நான் அவனுக்கு எதிராகப் போரிடுவேன்" என்று.

 

இரண்டு ஸஹிக்களும் நபி (ﷺ)   அவர்கள் இரவில் தஹ்ஜுத் தொழும் போது  இவ்வாறு பிரார்த்திப்பதாக பதிவுசெய்துள்ளன:

" ஜிப்ரில் (அலை) மிக்காயில் (அலை) மற்றும் இஸ்ராபில் (அலை) ஆகி யோரின் அல்லாஹ்வே; வானம் மற்றும் பூமியின் படைப்பாளனே! மறைவா னவற்றையும், வெளிப்படுவதையும் அறிந்தவனே!  உம் அடிமைகளுக்கிடை யில் நாங்கள் வேறுபாடு காட்டுவதைப் பற்றி நீர் எங்களுக்கு தீர்ப்பளிப்பா யாக!  அல்லாஹ்வே! சர்ச்சைக்குரிய உண்மையான விஷயங்களில் என்னை சரியாக வழி நடத்துவீராக! ஏனென்றால் நீர் தாம் எங்களை நேரான வழிகாட்டுபவர்!"

               

                                           الحمدلله

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...