Saturday, November 12, 2022

 

32. கோடிட்ட  இடத்தை சரியான நபியின் பெயரால் நிரப்புக:

"இவர்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள். ............‌................. ஜாலூத்தைக் கொன்றார். அல்லாஹ் அவருக்கு அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான். தான் விரும்பியவற்றை எல்லாம் அவருக்குக் கற்பித்தான்"

பதில்: தாவூத் (அலை)

மூஸா (அலை)மிற்கு பிறகு பனி இஸ்ராயிலின் சந்ததிகள் தங்கள் மதத்தை சரியாக கடைபிடிக்க வில்லை. அவர்கள் அல்லாஹ்வை புறக்கணித்தார் கள். நபிமார்கள் கூறும் உபதேசத்தை கேட்கவில்லை. பாபமான காரியங்களில் ஈடுபட்டு சீரழிந்து கொண்டிருந்தினர். ஜாலூத் என்கின்ற கொடியவன் அவர்களின் செல்வங்களைப் பறித்து, அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றி, அவர்களின் ஆண் மக்களை கொன்று, பெண்மக்களை அடிமைப்படுத்தினர்.

அவர்கள்,  தங்கள் நபி(சாமுவேல்)யை ஒரு அரசனுக்காக பிரார்த்திக்கும் படி கேட்டுக் கொண்டனர். அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்: "அவர்களுடைய நபியவர்களிடம் "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்க ளுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்" என கூறினார்; (அதற்கு) அவர்கள், "எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும்? அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள். மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபட வில்லையே!" என கூறினார்கள்; அதற்கவர், "நிச்சயமாக அல்லாஹ் உங்களை விட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும் அறிவாற்றலிலும்,  உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன்(அரச) அதிகாரத்தை வழங்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்" என்று கூறினார். (2:247).

"பின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர்; "நிச்சயமாக அல் லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான். யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர். தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதிலின்று (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்" என்று கூறினார்; அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள். பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தினர்). "ஜா லூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை" என கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், "எத்தனையோ சிறு கூட்டத்தார் கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்" என்று கூறினார்கள்." (2:249).

"மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, "எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!" எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்." (2:250)

இப்னு காதிர் தன் குர்ஆனின் விளக்கத்தில் இவ்வாறு விவரிக்கின்றார்:

இரண்டு படைகளும் எதிர் கொள்ளும் போது ஆஜானுபவனான ஜாலூத் படைக்கு முன் வந்து என்னை எதிர் கொள்ள உங்கள் படையில் யாராவது உள்ளனரா? என ஆர்ப்பரிக்க தாலூத்தின் படை வீரர்கள் யாருக்கும் எதிர் கொள்ள தைரியம் இல்லை. அரசர் தாலூத், யார் ஜாலூத்திடம் போரிட்டு வெற்றியடைய உதவி செய்கின்றார்களோ அவருக்கு தன் மகளை திருமணம் செய்வதாகவும், தன்  பாதி அரசை தருவதாக வாக்களித்தும் எவரும் முன் வரவில்லை. அப்போது எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் ஒல்லியான ஒரு இளைஞன் முன் வந்தான். எதிர் படை சத்தமிட்டு சிரித்து எள்ளி நகைக்க, கொடியவன்  ஜாலூத்தும், "வா நான் என்  வாளால் உன் தலையை சீவுகின்றேன்!" என கர்ஜித்தான். அவ்விளைஞன் அரசன் கொடுத்த வாளையும், இரும்பு கவசத்தையும் புறக்கணித்தான். கவண் எடுத்து அதில் கல்லை வைத்து, குறிபார்க்க, அக்கல் சுழன்று ஜாலூத்தின் நெற்றியில் பட்டது. இரத்தம் சொட்ட கீழே விழுந்த அவன் அங்கேயே மரித்தான். தங்கள் படை தலைவன் மரித்ததை கண்ட வீரர்கள் ஓட்டம் பிடித்தனர்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான்:

"இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள்மிக்க) அனுமதி கொண்டு ஜா லூத்தின் படையை முறியடித்தார்கள்;. தாவூது (அலை) ஜாலூத்தைக்

கொன்றார். அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான். தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான். (இவ்விதமாக) அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தி னரைக் கொண்டு (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்). ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகி லத்தார் மீது பெருங் கருணையுடையோனாக இருக்கிறான்." (2:251).

அல்லாஹ் தாவூத் (அலை)மிற்கு இவ்வாறு கூறி கட்டளையிட்டு வழி காட்டினான்:

         ● "தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை பூமியில் பின் தோன்றலாக ஆக்கி னோம்; ஆகவே மனிதர்களிடையே சத்தியத்தைக் கொண்டு (நீதமாக)த் தீர்ப்புச் செய்யும்; அன்றியும், மனோ இச்சையைப் பின் பற்றாதீர்; (ஏனெனில் அது) உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழி கெடுத்து விடும். நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் பாதையை விட்டு வழி கெடுக்கிறாரோ, அவர்களுக்குக் கேள்வி கணக்குக் கேட்கப்படும் நாளை மறந்து விட்ட மைக்காக மிகக்கொடிய வேதனையுண்டு." (38:26).

       மேலும் அல்லாஹ் கூறினான்: "தாவூதின் குடும்பத்தினரே! நன்றி செய்யுங்கள்!" (34:13)

"தான் விரும்பியவற்றை எல்லாம் அவருக்குக் கற்பித்தான்" என அல்லாஹ் கூறிய படி கீழ்கண்டவற்றை தாவூத் (அலை)மிற்கு வழங்கினான்:

அல்லாஹ் தாவூதுக்கு ஜபூர் வேதத்தையும் கொடுத்தான். (4:163, 17:55)

தாவூத் (அலை)மிற்கு ஞானத்தையும் (நற்) கல்வியையும் கொடுத்தான். (21:79,27:15)

மேலும், நாம் அவருடைய அரசாங்கத்தையும் வலுப்படுத்தினோம்; இன் னும் அவருக்கு ஞானத்தையும், தெளிவான சொல்லாற்றலையும் அளித்தோம். (38:20)

இன்னும் நாம் தாவூது (அலை)மிற்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) சேர்ந்து தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன. (29:79, 34:10, 38:19)  காலையிலும், மாலையிலும் அவை அவருடன் சேர்ந்து (நம்மைத் துதித்து) தஸ்பீஹு செய்தன. (38:18)

மேலும் நாம் அவருக்கு இரும்பை மிருதுவாக்கித் தந்தோம்." (34:10) "வலுவுள்ள போர்க் கவசங்கள் செய்வீராக! அவற்றின் கண்ணிகளை பல முள்ளவையாக ஒழுங்கு படுத்திக் கொள்வீராக! நற்கருமங்கள்  செய்வீராக! என்று கூறினோம்." (34:11).

தாவூதுக்கும் (அலை) ஸுலைமானுக்கும் (அலை) நிச்சயமாக நாம் கல்வி ஞானத்தைக் கொடுத்தோம்; அதற்கு அவ்விருவரும்; "புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியது. அவன் தான், முஃமின்களான தன் நல்லடியார்களில் அநேகரைவிட நம்மை மேன்மையாக்கினான்" என்று கூறினார்கள். (27:15, 38:30).

நிச்சயமாக அவர் (எந் நிலையிலும் நம்மையே) நோக்குபவராக இருந்தார்.   (38:17 & 24).

கடைசியாக அல்லாஹ், "அன்றியும், நிச்சயமாக அவருக்கு நம்மிடத்தில் நெருங்கிய (அந்தஸ்)தும், அழகிய இருப்பிடமும் உண்டு." (38:25) என்று திருக் குர்ஆனில் கூறியுள்ளான். அப்துல்லாஹ் பின் அம்ர் நபி கூறியதாக அல்-ஸாஹிஹீனில் குறிப்பிடுகிறார்:  "சிறந்த நோன்பு நபி தாவூதுடைய நோன்பு. அவர் ஓரு நாள் விட்டு ஓரு நாள் நோன்பிருப்பார். "

 

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...