21. இந்த செயல்களிலில்
தனித்து நிற்கும் செயலை குறிப்பிடுக:
1) அம்புகள் ஏவி
குறி பார்த்தல்.
2) இஹ்ராம் அணிந்த
நிலையில் வேட்டை யாடுதல்.
3)
வேதம் கொடுக்கப்பட்ட
சமூகத்தாரி லிருந்து வந்த உணவு.
4) இரண்டு சகோதரிகளை
ஒரே நேரத்தில் மணப்பது.
5)
புனித மாதங்களில்
போரிடுவது.
6) கெட்ட பெயரிட்டு அழைப்பது.
7) புறம் பேசுவது.
பதில்: ✓ 3) வேதம் கொடுக்கப்பட்ட சமூகத்தா ரிலிருந்து வந்த உணவு. “.........வேதம் கொடுக்கப் பட்டோரின் உணவும் உங்களுக்கு
ஹலாலானதே. உங்களுடைய உணவும் அவர்களுக்கு (சாப்பிட) ஆகுமானதே,.........." (5:5).
1) அம்புகள் ஏவி குறி
பார்த்தல்: "...........அம்புகள் மூலம் நீங்கள் குறி
கேட்பதும் (உங்களுக்கு விலக்கப் பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்....
......." (5:3).
2) இஹ்ராம் அணிந்த நிலையில்
வேட்டை யாடுதல்: "நீங்கள் இஹ்ராம்
அணிந்தி ருக்கும் சமயத்தில் (அவற்றை) வேட்டையாடுவது (உங்களுக்குத்)
தடுக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைக் கட்டளையிடுகிறான். " (5:1)
4) இரண்டு சகோதரிகளை ஒரே
நேரத்தில் மணப்பது:
"..........இரண்டு சகோத ரிகளை
(ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது - இதற்கு முன் நடந்து
விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்), நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடை யோனுமாக இருக்கின்றான்....."
(4:23)
5) புனித மாதங்களில் போரிடுவது: "(நபியே!) புனிதமான (விலக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள்
உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; "அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல் லாஹ்வின்
பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை
நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள்
(வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை
அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்............."
(2:217).
6) கெட்ட பெயரிட்டு அழைப்பது: "இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய)
பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர்
சூட்டுவது மிகக்கெட்டதாகும்..... ......." (49:11).
7) புறம் பேசுவது: "..........அன்றியும், உங்களில் சிலர்
சிலரைப் பற்றிப் புறம் பேச வேண்டாம், உங்களில் எவராவது
தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள்! இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்." (49:12).
No comments:
Post a Comment