Saturday, October 15, 2022

 

4. கொடுக்கப்பட்ட இவ்வாக்கியத்தின் பொருள் என்ன? مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّه

 பதில்: அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக் கேயன்றி வேறில்லை.

இந்த வசனம் இரு மனிதர்களின் உதாரணத்தை கூறும் கதையில் ஏழை மனிதன் தன் பணக்கார நண்பனை பார்த்து கூறுவதாக வந்துள்ளது.

கஹஃப் சூராவில் வரும் கதையில்:

·         பணக்கார மனிதனுக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டை யும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம். (18:32)

·         அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை - எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம். (18:33)

·         அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக: “நான் உன்னை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்” என்று கூறினான். (18:34)

·         (பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் ங்கிழைத்தவனாக தன் தோட்டத் திற்குள் நுழைந்தான்; அவன், “இந்த (த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்து விடும் என்று நான் எண்ணவில்லைஎன்றும் கூறிக் கொண்டான். (18:35)

·         (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில் லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்” என்றும் கூறினான். (18:36)

·         அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக: “உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?” என்று அவனிடம் கேட்டான்.ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்:) அல்லாஹ் - அவன்தான் என் இறைவனாவான்; என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன். (18:37, 38)

·         மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது “மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்” - அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை “- என்று கூறியிருக்க வேண்டாமா? செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும் -உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும்.அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப்பட்டதாகி - அதை நீ தேடிக்கண்டு பிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்” என்று கூறினான். (18:39 - 41).  

அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த் தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் "என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே!" என்று கூறினான். (18:42).  

ஆனால் காலம் கடந்து விட்டது. மேலும், அல்லாஹ்வை யன்றி, அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி செய்யப்பட்டவனாக இல்லை. (18:42 and 43).

எந்தவொரு சுப நிகழ்ச்சி நடந்தாலோ அல்லது உயர்வு தேடி வந்தாலோ அதற்குக் காரணம் இறைவன் என்று நம்புவதும், தான் இதற்கு எந்தவிதத் திலும் காரணம் அல்ல; இது இறைவனால் நடந்தது என்றும் முஸ்லிம்கள் நம்புகிறார்கள். அதன் அடிப்படையிலேயே مَا شَاءَ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ என்ற வார்த்தை யைப் பயன்படுத்துகிறார்கள்.

நபி அவர்கள் கூறியதாக அபு மூஸா குறிப்பிடும் இந்த ஹதீஸ் 'ஸஹி யில்' பதிவாகியுள்ளது: "லா ஹவ்ல வலா குவ்வ த இல்லா பில்லா" என்பது சுவர்க்கத்தின் பொக்கிஷங்களில் ஒன்று." ஆகவே வெறும் மாஷா அல்லாஹ் என்று கூறாமல்   لَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ. சேர்த்து சொன்னால் அதிக நன்மை. இது போலவே ஏதாவது நல்லது மற்றவர்களிடம் கண்டால், "பாரகல்லாஹு அலைஹி" (அல்லாஹ் அதன் மீது அருள்புரிவானாக) என்று கூறவும்.

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...