14. நபி சுலைமான்
(அலை) காலத்தில் சூனியத்தை கற்று தந்த இரண்டு வானவர்கள்?
அ. கிராமின் காதிபீன்
ஆ. முன்கர், நகிர்
இ. ஹாருத், மாருத்
ஈ. யாஜுஸ், மாஜூஸ்
உ. ஈஜ்ராயில், மீக்காயில்
பதில்: ஹாருத், மாருத்
ஹாருத், மாருத் என்ற இரு
வானவர்கள் நபி சுலைமான் (அலை) அவர்களின் அரசாட்சியின் போது மனித உருவத்தில்
பாபிலோன் என்ற நகரில் இறங்கினார்கள். அவர்களிடமிருந்து மக்கள் சூனியத்தை கற்று
கொண்டனர்.
ஆனால் அந்த (மலக்குகள்) இருவரும்; "நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம்; (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள்
ஆகிவிடாதீர்கள்" என்று சொல்லி
எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தை
அவர்கள் கற்றுக் கொடுக்கவில்லை."
அந்த ஆயத் இன்னும் இப்படி தொடர்கிறது: "அப்படியிருந்தும்
கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள்.
எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம்
இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும்
தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக்
கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு
பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை
விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?" (2:102).
இந்த வானவர்களைப் பற்றி நிறைய கதைகள்
இருந்தாலும், எல்லா கதைகளும் ஒரே கதையை
மையப்படுத்தியே உள்ளன.
வானத்தில் உள்ள தேவதூதர்கள் பூமியில் மனிதர்கள்
செய்யும் பாவங்க ளையும், கீழ்படியாமையை
பார்த்த வியந்து, அல்லாஹ்விடம் இதைப் பற்றி
கேட்டனர். அல்லாஹ்வும்
அவர்கள் நிலையில் யாராக இருந்தாலும் அப்படித்தான் செய்வர் என கூறினான்.
இதை பரிசோதிக்க வானவர்கள் எல்லாம் சேர்ந்து பக்தி
மிக்க ஹாருத் , மாருத் என்ற இரு வானவர்களை
தேர்ந்தெடுத்து, மனித உருவில், மனித பண்புகளோடு பூமிக்கு அனுப்பினர்.
அல்லாஹ் அவர்களை அனுப்பு முன் மது, மாது, கொலை, சிலை வணக்கம் ஆகியவற்றை பூமியில் வசிக்கும் காலத்தில்
தவிர்க்க கட்டளையிட்டு
அனுப்பினான். அவர்கள் பூமியில் வந்து ஜொஹ்ரா
என்ற அழகிய பெண் மணியைப் பார்த்து, மையல் கொண்டு
அல்லாஹ் தவிர்க்கக் கோரிய எல்லா பாவங்களையும் செய்து அல்லாஹ்வின் கட்டளையை
மீறினர். எனவே அல்லாஹ்
அவர்களின் கீழ்படியாமைக்காகவும், பாவங்களுக்காகவும் சபித்து பூமியில் சில காலம் வாழவைத்தான்.
அல்லாஹ்வே உண்மையை அறிவான்.
கற்க வேண்டிய பாடம்:
பிழை செய்வது மனித இயல்பு. அல்லாஹ்விடம்
சரணடையுங்கள். அவனை நினைவுகூறுங்கள். அவன் உங்களை நினைவு கூறுவான். அவன் உங்களை பிழை செய்வதிலிருந்து
தடுப்பான். அல்லாஹ்வின்
அருகே செல்ல அவனை
* நம்புங்கள்
* கீழ்படியுங்கள்
* பச்சாதாபப்பட்டு
அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருங்கள்
அவன் உங்களை புரிந்துக் கொள்வான், வழி காட்டுவான், மன்னிப்பான்.
No comments:
Post a Comment