1. இப்ராஹீம் (அலை) தன் மகன் இஸ்மாயில் (அலை) மை அல்லாஹ்வின் கட்டளைப்
படி பலியிடுதல் பற்றி திருக்குர்ஆன் கூறியது என்னவென்று தெரியுமா?
السلام عليكم ورحمة
الله وبركاتة
ﺑِﺴْـــــــﻢِﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍلرَّﺣِﻴﻢ
1. ஹஜ் பற்றிய வசனங்கள்
பதில்:
(37:99) மேலும்,
அவர் கூறினார்: “நிச்சயமாக நாம் என்னுடைய இறைவனிடம் செல்பவன்;
திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்.”
(37:100) “என்னுடைய
இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
(37:101) எனவே,
நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
(37:102) பின்
(அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை
மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம்
கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத்
தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள்
பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”
(37:103) ஆகவே,
அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;
(37:104) நாம்
அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
(37:105) “திடமாக
நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே
கூலி கொடுத்திருக்கிறோம்.
(37:106) “நிச்சயமாக
இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
(37:107) ஆயினும்,
நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.
(37:108) இன்னும்
அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:
(37:109) “இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக"!
(37:110) இவ்வாறே,
நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.
(37:111) நிச்சயமாக
அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.
الحمدلله
No comments:
Post a Comment