Part II is in the Form of Books published from Blue rose publication:
In English: Quest for Quranic knowledge
In Tamil: Quranin arivai thaedi
Part III Ramzan Quiz starts
1. ரம்ஜான் கேள்வி-பதில்
السلام عليكم
ورحمة الله وبركاتة
ﺑِﺴْـــــــﻢِﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍلرَّﺣِﻴﻢ
ஒரு எளிய, எல்லோருக்கும் தெரிந்த கேள்வியால் இதை ஆரம்பிக்கலாம்.
1. திருக்குர்ஆனில் எத்தனை பாஸ்மலா அல்லது
தஸ்மியா உள்ளன?
பதில்: 114.
சூரா அத்- தவ்பா தவிர மற்ற அனைத்து 113 சூராக்களும் பாஸ்மலாவை கொண்டு ஆரம்பத் திருக்கும். சூரா நமலில் கூடுதலாக பாஸ்மலா ஒரு வசனமாக வரும். ஆகையால் திருக்குர் ஆனில் 114 பாஸ்மலாக்கள் உள்ளன.
அழகிய கவிதை போல் ஓதப்படும், "பிஸ்மில்லாஹ் ஹிர்-ரஹ்மான். நிர்ரஹீம்" என்ற வாக்கியம், "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடை யவனுமான அல்லாஹ் வின் திருப்பெயரால் ஆரம்பிக்கின்றேன்" என பொருள்படும்.
சூரா அத்-தவ்பா/அல்- பராஆ ஆரம்பிக்கும்
போது பாஸ்மலா எழுதப் படாததற்கு காரணம்:
நபி ﷺ அவர்கள் எழுத்தர்களுக்கு சூரா அன்-ஃபாலிற்கும் சூரே தவ்பாவிற்கும் இடையே பாஸ்மலா எழுத கூறவில்லை. இதை கீழ் வரும் ஹதீஸுகளில் காணலாம்.
இப்னு அப்பாஸ் (ரஜி) கூறினார் : “நான் உஸ்மான் இப்னு அஃப்பானிடம் (ரஜி) கேட்டேன்: "நூற்றிற்கும் குறைவான வசனங்களை கொண்ட சூராவான அல்-அன் ஃபாலை, "பிஸ்மில்லாஹ் ஹிர்- ரஹ்மான் நிர்ரஹீம்" என்று எழுதாமல் நூற்றிற்கும் மேலான வசனங்களை கொண்ட சூரா அல்-தவ்பா/அல்-பராவுடன் சேர்த்து, ஏழு பெரிய சூராக்களுடன் ஏன் தொகுத்துள்ளீர்?" என்று கேட்டேன்.
அதற்கு உஸ்மான் (ரஜி) அவர்கள் பதில் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் வஹி இறங்கியவுடன், தம்முடைய எழுத்தர்களை அழைத்து, 'இந்த ஆயாக்களை இந்த குறிப்பிட்ட சூராவில், குறிப்பிடப் பட்டுள்ள இடத்தில் எழுதவும்' என கூறுவார். அல்-அன்ஃபால் என்பது மதீனாவில் முதல் காலகட்டத்தில் இறக்கப்பட்ட சூராக்களில் ஒன்றாகும், மேலும் பராஆ (அல்-தவ்பா) குர்ஆனின் கடைசி காலக் கட்டத்தில் இறக்கப்பட்ட ஒன்றாகும். அதன் வசனங்களின் சாரம் அல்-அன்ஃபாலில் குறிப்பிடப்பட்ட வசனங்களின் சாரத்தை போலவே இருந்தன. எனவே இது அந்த சூராவின் ஒரு பகுதியாக கருதப்பட்டது. குர்ஆனை தொகுக்கும் போது அல்லாஹ்வின் தூதர் இல்லாததால் அது உண்மையில் அதன் ஒரு பகுதியா என்று தெளிவு பெற இயலாததால், அவை ஒன்றன் பின் ஒன்றாக வைக்கப்பட்டன, மேலும் 'பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர் ரஹீம்' அவைகளுக்கு இடையே எழுதப்படவில்லை. அது ஏழு பெரிய சூராக்களோடு தொகுக்கப்பட்டுள்ளது. (சுனான் திர்மிதி, 3086).
இப்னு அப்பாஸ் (ரஜி) கூறினார்: "நான் அலி (ரஜி)விடம் கேட்டேன் ஏன் நாம் இரண்டு சூராக்களுக்கும் இடையே 'பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ் மான் நிர் ரஹீம்' சேர்க்கக் கூடாதா? என்று. அதற்கு அவர், "ஏனெனில் அது அமான் (அடைக்கலம்/ பாதுகாப்பு/ஆசீர்வாதம்). சூரா தவ்பாவின் முக்கிய சாரம் வன்முறை, ஒப்பந்தங்களை முறித்தல் அதில் அமான் என்பதே இல்லை." என்று விளக்கினார்.
இந்த சூராவில் நிராகரிப்பிற்கு எதிராக போர் புரியுமாறு கட்டளையிடப் பட்டது, நயவஞ்சகர் களையும் அவர்களது துர்செயல்களையும் கோடி யிட்டு காட்டியுள்ளது. ஆகையால் பாஸ்மலாவை தொடகத்திலோ, நடுவிலோ ஓதுவது பரிந்துரைக் கப்படவில்லை.
திருக்குர்ஆனில் பாஸ்மலா:
முஹம்மது நபிக்கு ﷺ முதன் முறையாக அல்லாஹ் سُبْحَانَهُ وَتَعَالَى இறக்கிய முதல் வசனம், اِقْرَاْ بِاسْمِ رَبِّكَ الَّذِىْ خَلَقَ (96:1). "(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக." என்ற வசனம் படிப்பதற்கு முன் பாஸ்மலா கூறுமாறு கட்டளையிடப்பட்டுள்ளது.
மேலும் தன் திருநூலில் அல்லாஹ் ﷻ கீழ்கண்ட வசனங்களில் பிஸ்மில்லாஹ் கூறுமாறு குறிப்பிட்டுள்ளான்:
"குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல் (லி குர்பான் கொடுப்) பவர்களாகவும் (வருவார்கள்)" (22:28)
"எதன்மீது. (அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்படவில்லையோ அதைப் புசியாதீர்கள் - நிச்சயமாக அது பாவமாகும்" (6:121).
"அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்; எனினும் நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்" (5:4)
பிஸ்மில்லாஹ் கூறும் வழக்கம் நூஹ்
(அலை) காலத்திலும் (அதன் முந்தைய காலத்திலும்) வழக்கமாக இருந்தது:
இதனை கீழ் காணும் வசனத்தால் அறியலாம், "இதிலே நீங்கள் ஏறிக் கொள்ளுங்கள்; இது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன)." (11:41).
சுலைமான் (அலை) அவர்கள் முஸ்லிம் அல்லாதவருக்கு கடிதம் எழுதும் போது பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று தொடக்கத்தில் எழுதும் பழக்கம் இருந்தது. (27:30)
எந்த காரியத்தை ஆரம்பிதற்கும் முன்பு பிஸ்மில்லாஹ் கூற வேண்டும். இதனால் அல்லாஹ் உங்கள் கூட இருந்து உங்களுக்கு ஆதரவும் உதவியும் செய்து உங்களை ஆசீர்வதிப்பதை தனது கடமையாக்கிக் கொள் வான். நீங்கள் இதனை முழுமனதுடன் கூறினால் அல்லாஹ் அற்புதங் களை செய்வான். மேலும் உங்களை வழிதவற விடமாட்டான்; உங்கள் தொல்லைகளை நீக்குவான்; கவனம் சிதறாமலும், விசுவாசம் மாறாமலும் பாதுகாப்பான். மேலும் சபலங்களை நீக்குவான்.
முஸ்லிம்களில் பலர் பாஸ்மலாவிற்கு பதிலாக 786 என்ற எண்ணை எழுதுவர். 786 என்பது ‘அப்ஜத்’ அரபி எண்ணியல் கணக்குப் பிரகாரம் பிஸ்மில்லாஹ்வின் கூட்டுத்தொகை 786 என அவர்கள் கருதுகின்றனர். இஸ்லாத்திற்கே சம்பந்தம் இல்லாத வார்த்தைகளுக்கும் கூட இந்த எண்ணிக்கை வரும். ஆகையால் 786 எழுதுவதால் ஒரு சுன்னத்தை அகற்றி விட்டு ஒரு பித்அத்தை அரங்கேற்றிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும். நபிﷺ அவர்கள் ரோமானியப் பேரரசர் ஹிர்கலுக்கு எழுதிய கடிதத்தில் பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான நிர்ரஹீம்’ என்று இருந்தது என இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிக்கும் செய்தி புகாரீ – முஸ்லிமில் உள்ளது.
பாஸ்மலாவை கூறுமாறு சொல்லப்படும்
ஹதீஸ்கள்:
கீழ்கண்டவை நபி பெருமானார் ﷺ அவர்கள் பாஸ்மலா கூறிய/ கூற வேண்டும் என கோரிய காரியங்கள்.
☆ திருக்குர்ஆனின் ஒவ்வொரு சூரா ஓதும் போது ஆரம்பத்தில் பாஸ்மலா கூற வேண்டும்:
சூரா தவ்பாவை தவிர ஒவ்வொரு சூராவின் ஆரம்பத்திலும் பாஸ்மலா எழுதப்பட்டிருக்கும். அதை கட்டாயமாக ஓதவேண்டும்.
☆ இரவு தூங்கப் போகும் முன்:
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: "உங்களில் ஒருவர் படுக்கையை விட்டு வெளியேறி, அதற்குத் திரும்பினால், அவர் அதை மூன்று முறை தனது இஜாரின் விளிம்பால் துலக்கட்டும், ஏனென்றால் அவருக்குப் பிறகு என்ன ஆனது என்பது அவருக்குத் தெரியாது. அவருக்குப் பிறகு அதன் மீது, அவர் படுக்கும் போது, அவர் சொல்லட்டும்: 'என் ஆண்டவரே, உமது பெயரில் நான் என் பக்கத்தைப் சாய்க்கின்றேன், உங்கள் பெயரில் நான் அதை உயர்த்துகிறேன். நீங்கள் என் ஆன்மாவை எடுத்துக் கொண்டால், அதன் மீது கருணை காட்டுங்கள், அதை விடுவித்தால், உங்கள் நேர்மையான வழிபாட்டாளர்களைப் பாதுகாப்பதன் மூலம் அதைப் பாதுகாக்கவும்.
மேலும் அவர் விழித்தவுடன், "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தானது, என் உடலில் என்னைக் குணப்படுத்தி, என் ஆன்மாவை என்னிடம் திருப்பி, என்னை நினைவு கூற அனுமதித்தாய்" என்று கூறவேண்டும். (சுனான் அல் திர்மிதி, 3401).
☆ கழிவறை செல்லு முன்:
அலி பின் அபீ தாலித் (ரஜி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் ﷺ கூறினார்கள்: "கழிவறைக்குள் நுழையும் போது: 'பிஸ்மில்லாஹ்' என்று கூறினால் ஜின்களின் கண்களுக்கும் ஆதாமின் சந்ததியினரின் நிர்வாணத்திற்கும் இடையே திரை விழும், " ( சுனன் அல் திர்மிதி, 606).
☆ உழூ செய்வதற்கு முன்:
அபு ஹீரைரா (ரஜி) நபி ﷺ அவர்கள் கூறியதாக, சுனான் அபி தாவுத், 101-ல் பதிவு செய்துள்ளார்: "ஒருவருக்கு ஒலு இல்லாமல் தொழுகை இல்லை. தொடக்கத்தில் பிஸ்மில்லாஹ் சொலாலாத ஒலு இல்லை."
☆ எதையும் குடிப்பதற்கு முன்:
நபி ﷺ கூறியதாக இப்னு அப்பாஸ் (ரஜி) அவர்கள் கூறினார்கள்: "ஒட்டகத்தை போல் ஒரே மிடக்கில் குடிக்காதீர்கள், இரண்டு அல்லது மூன்று மிடக்கு கெடியுங்கள். குடிப்பதற்கு முன் பிஸ்மில்லாஹ் கூறவும் குடித்த பின் அல்ஹம்துலில்லாஹ் கூறவும். (சுனான் அல் திர்மிதி, புத்தகம் 3, .ஹதீஸ் 31).
☆ உண்ணும் முன் கூறவும்:
நபி ﷺ குறிப்பிட்டதாக வாஷி இப்னு ஹார்ப் கூறினார்: அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே ﷺ! நாங்கள் உண்ணுகிறோம். ஆனால் திருப்தி அடையவில்லை!" என கேட்க அதற்கு நபி ﷺ, "நீங்கள் தனித்தனியாக உண்ணுகிறீர்களா?" என்றார். அதற்கு அவர்கள் "ஆம்" என்றனர். அதற்கு அவர் ஆலோசனை கூறினார், "நீங்கள் உண்ணும் போது சேர்ந்து உண்ணுங்கள், உண்பதற்கு முன் பிஸ்மில்லாஹ் கூறுங்கள், அதனால் நீங்கள் ஆசிர்வதிக்கப்படலாம்."
நபி ﷺ அவர்கள் கூறியதாக உமையா இப்னு மாக்க்ஷி குறிப்பிடுகிறார்: நபி ﷺ அவர்கள் உட்கார்ந்திருந்த போது ஒரு மனிதர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் உண்பதற்கு முன் பிஸ்மில்லாஹ் கூறாமல் உண்டுக் கொண்டி ருந்தார். ஒரு கவளமே பாத்திரத்தில் இருந்த போது ஞாபகம் வந்து ‘பிஸ்மில்லாஹ் ஆரம்பத்திலும் கடைசியிலும்’ என்று கூறினார். நபி ﷺ அவர்கள் சிரித்துக்கொண்டே கூறினார்: "ஷைத்தான் அவர் பக்கத்தில் உட்கார்ந்து தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவர் பிஸ்மில்லாஹ் கூறியவுடன் அவன் தன் வயிற்றிலிருந்ததை வாந்தி எடுத்து விட்டான் (சுனன் அபி தாவூத், 3768).
☆ வீட்டை விட்டு வெளியேறும் போது:
உம்மு சல்மா (ரஜி) கூறினார்: நபி பெருமானார் ﷺ அவர்கள் வீட்டை விட்டு வெளியேறும் போது, "யா அல்லாஹ்! நான் வழி தவறி போவதில் இருந்தும் அல்லது நான் வழிகெடுக்க படுவதில் இருந்தும் அல்லது நான் வழிசருகுவதில் இருந்தும் அல்லது வழி சருக்கச் செய்யப்படுவதில் இருந்தும் அல்லது நான் பிறர் மீது அநீதி இழைப்பதில் இருந்தும் பிறர் என் மீது அநீதி இழைப்பதில் இருந்தும் அல்லது நான் பிறரிடம் அறியாத்தனமாக நடப்பதில் இருந்தும் அல்லது என்னிடம் பிறர் அறியாத் தனமாக நடப்பதில் இருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்." (திர்மிதி, 3427) என்று கூறுவார்.
நபி பெருமானார் ﷺ
அவர்கள் கூறினார்கள், "நீங்கள் வீட்டை விட்டு வெளியேறும்
போது: "பிஸ்மில்லாஹ், உன்
மேல் நம்பிக்கை வைக்கின்றேன், உன்னை விட சக்தியிலும், வலிமையிலும் யாரும் இல்லை." இதனால் உங்கள் விருப்பங்கள்
நிறைவேறும், நீங்கள் கஷ்டங்களிலிருந்து
பாதுகாக்கப்படுவீர்கள். ஷைத்தானும் இந்த துவாவை கேட்டு உங்கள் வீட்டை விட்டு
வெளியேறி விடுவான். (திரிமிதி,
2/493).
☆ தமது இல்லத்திற்குள் நுழையும் போது பிஸ்மில்லா கூறவேண்டும்:
அப மாலிக் அல்- அன்ஸாரி குறிப்பிட்டுள்ளார்: நபி பெருமானார் ﷺ அவர்கள் கூறினார்கள், "ஒரு மனிதன் தன் வீட்டிற்குள் நுழையும் போது, கூறட்டும்: 'யா அல்லாஹ், இந்த நுழைவு மற்றும் வெளியேறுதலின் நன்மையை நான் உன்னிடம் கேட்கின்றேன். அல்லாஹ்வின் பெயரால் நான் நுழைகின்றேன் அல்லாஹ்வின் பெயரால் நான் வெளியேறுகின்றேன். என் இறைவன் மீது நான் நம்பிக்கை வைக்கின்றேன்." (சுனன் அபி தாவூத், 5096).
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: " ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போது “பிஸ்மில்லாஹ்” என்று கூறி நுழைந்தால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடம் இல்லை" என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள் நுழையும் போது பிஸ்மில்லாஹ் கூறாவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), “இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது’’ என்று சொல்கிறான். அவர் உணவு உண்ணும்போது பிஸ்மில்லாஹ் கூறாவிட்டால் ஷைத்தான் “இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்து கொண்டீர்கள்’’ என்று கூறுகிறான். [முஸ்லிம், 4106].
☆ உடல் நலக்குறைவு ஏற்படும் போது:
ஆயிஷா (ரஜி) அறிவிக்கிறார்: "நபி ﷺ அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும் போது ஜிப்ரீல் (அலை) வந்து பிரார்த்திப்பார்: 'பிஸ்மில்லாஹ், அவர் உம்மை நலமடையச் செய்யட்டும், ஒவ்வொரு நோயிலிருந்தும் குணமடையச் செய்யட்டும், பொறாமைக்காரன் பொறாமை படும் தீங்கினை விட்டும், கண் திருஷ்டியின் தீங்கை விட்டும் உம்மை பாதுகாக்கட்டும்" (முஸ்லிம்).
தமக்கு உடலில் வேதனை ஏற்பட்டு அதைப் பற்றி நபி ﷺ அவர்களிடம் ஒருவர் முறையிட்ட போது அன்னார், "உமது கையை உமது உடம்பின் வலியுள்ள பகுதியில் வைத்து மூன்று முறை பிஸ்மில்லாஹ் கூறுவீராக! பின் ஏழு தடவை அல்லாஹ்வின் கண்ணியம் மற்றும் ஆற்றலை கொண்டு நான் உணர்கின்ற அஞ்சுகின்ற (இந்த வலியின்) தீமையை விட்டு பாதுகாவல் தேடுகிறேன்." (முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்).
☆ பாதுகாப்பிற்கு ஓதவும்:
உஸ்மான் பின் அஃபான் (ரஜி) குறிப்பிட்டுள்ளார்: நபி ﷺ அவர்கள் கூறினார், "இந்த இரண்டு வசனங்களையும் தினமும் காலையிலும் இரவிலும் மூன்று முறை ஓதினால், அவருக்கு எதுவும் தீங்கு செய்யாது: “பிஸ்மில் லாஹ், அவருடைய பெயரால் வானத்திலோ பூமியிலோ எந்தத் தீங்கும் அணுகாது. அவர் அனைத்தையும் கேட்பவர், அனைத்தையும் அறிந்தவர்.” (சுனன் அல் திர்மிதீ. 3388).
☆ உடலுறவு கொள்ளும் முன் பிஸ்மில்லாஹ்:
இப்னு அப்பாஸ் (ரஜி) குறிப்பிட்டுள்ளார்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தன் மனைவியிடம் (உடலுறவு கொள்ள) வந்து, பிஸ்மில்லாஹ் – அல்லாஹ்வின் திருப்பெயரால் – கூறி, இறைவா! ஷைத்தானை எங்களிடமிருந்து விலகிய இருக்கச் செய். எங்களுக்கு நீ அளிக்கும் சந்ததிகளிடமிருந்தும் ஷைத்தானை விலகி இருக்கச் செய் என பிரார்த்தனை புரிந்து, பிறகு அவர்களுக்குச் சந்ததி அளிக்கப்பட்டால் அந்தச் சந்ததிக்கு ஷைத்தான் தீங்கு செய்ய மாட்டான். (ஸஹீஹ் புகாரி, 3271).
☆ பிராணிகளை அறுக்கும் போது :
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரஜி) குறிப்பிட்டார்: நபி ﷺ அவர்கள் தன் கைளால் ஆட்டை அறுக்கும் போது கூறினார்கள்: "ஒரு மனிதன் ஒரு விலங்கை பலியிடும் போது பிஸ்மில்லாஹ் என்று கூறி, ‘தக்பீர்’ (அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அறுக்க வேண்டும்." [ ஜாமி அல் திர்மிதி, 1521].
☆ வேட்டையாடுவதற்குப் பிராணிகளை அனுப்பும் போதும்:
அதீ பின் ஹாத்திம் (ரஜி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (வேட்டை) நாய்க ளின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம் என்று நான் அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன். அதற்கு அவர்கள், பயிற்சியளிக்கப் பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை ‘‘பிஸ்மில்லாஹ்” என்று அல்லாஹ்வின் பெயர் சொல்லி நீங்கள் அனுப்பிய இருந்தால் உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்; அவை அதைக் கொன்றுவிட்டாலும் சரியே! நாய் தின்றுவிட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காக அதைப் பிடித்து வைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் அதனுடன் கலந்து விட்டிருந் தாலும் (அது வேட்டையாடிக் கொண்டு வரும் பிராணியை) உண்ணாதீர்கள். (ஸஹிஹ் புகாரி, 1929 பி).
☆ வாகனத்தில் ஏறும்போது:
அலி பின் ராபியா (ரஜி), வாகனம் கொண்டு வரப் பட்டதும் அதில் ஏறும் போது அதில் காலை வைத்ததும் அலீ (ரஜி) பிஸ்மில்லாஹ் என்ற மூன்று முறை கூறுவார்கள் என அறிவிக்கிறார். (அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத்)
☆ மரணித்தவரை மண்ணறையில் இறக்கும் போது:
நபி பெருமானார் ﷺ அவர்கள் கூறினார், "மரணித்த வரை மண்ணறையில் இறக்கும் போது, பிஸ்மில்லாஹ் கூறி இறக்குங்கள்." அஹமத் 8/58 மற்றும் அல்- ஹக்கீம், 1/366)
பிஸ்மில்லாஹ்வை கூறி அற்புதங்களை
நிகழ்த்தினார் நபி ﷺ:
நபித்தோழர்கள் சிலர் உளூச் செய்வதற்காகத் தண்ணீரைத் தேடினர். அப்போது நபிகள் நாயகம் ﷺ அவர்கள் உங்களில் எவரிடமாவது சிறிதளவு தண்ணீர் இருக்கின்றதா? என்று கேட்டார்கள். (சிறிதளவு தண்ணீர் கொண்டு வரப்பட்டவுடன்) அந்தத் தண்ணீரில் தமது கையை வைத்தார்கள். ‘அல்லாஹ்வின் பெயரால்’ என்று கூறினார்கள். அவர்களின் விரல்களி லிருந்து தண்ணீர் வெளிப்பட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்’’ என அனஸ் (ரஜி) அவர்கள் அறிவித்தார்கள். (அப்போது) நீங்கள் எத்தனை நபர்கள் இருந்தீர்கள்?’’ என்று நான் கேட்டதற்கு சுமார் எழுபது நபர்கள்’’ என்று அனஸ் (ரஜி) பதில் கூறினார்கள். [நஸயீ, 77].
அது போலவே தபூக் யுத்தத்தில் ஆயிரக் கணக் கான முஸ்லிம் வீரர்களின் தாகத்தை தணிக்க பிஸ்மில்லாஹ்கூறி நீரை குறைவில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்தார். மேலும் பாலே சுரக்காத பெண் ஆட்டின் மடியிலிருந்து பிஸ்மில்லா கூறி பாலை கறந்து அங்கிருந்தோர் பசி தணிக்கச் செய்தார்.
அல்லாஹ் நம்மை இந்த சுன்னத்துகளை கடைப்பிடிக்குமாறு செய்வானாக! பிஸ்மில்லாஹ் கூறாமல் துவங்கப்படும் எந்த நல்ல காரியமும் குறைவுடையதாகவே அமையும். எனவே எதையும் ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் கூறிக் கொள்ளும் பழக்கத்தை நாம் வழக்கமாக்கிக் கொள்வோம். அதன் மூலம் இம்மை–மறுமை யின் பேறுகளை அடைவதற்கு உரித்தானவர்களாக நம்மை வல்ல அல்லாஹ் ஆக்கியருள்வானாக! இளந்தாய்மார்களும் தன் மக்களுக்கு பிஸ்மில்லாஹ் கூறிக்கொள்ளும் பழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்.
الحمدلله
No comments:
Post a Comment