6. ரம்ஜான் கேள்வி-பதில்:
السلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
6. அல்லாஹ் பார்வையற்ற நபி தோழராகிய அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தும் (ரஜி) வைப்பற்றி சூரா அபஸாவில் பத்திற்கும் மேற்பட்ட வசனங்களை இறக்கினான். மேலும் மற்றொரு வசனம் அவருக்காக இறங்கியது. அது எந்த வசனம்?
பதில்: “ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப் பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித் தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; தங்களுடைய பொருட்களையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களை விட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்; எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்; ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கி யுள்ளான்.” (சூரா அந்-நிஸா, 4:95).
அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தும் (ரஜி) ஆரம்பத்திலேயே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்:
அவர் கதீஜா பின்த் குவாலித் (ரஜி) வின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார். அவர் தன் தாயாரோடு பீபி கதீஜா இல்லத்தில் தங்கி இருந்ததால் இஸ்லாத்தில் ஆரம்பத்திலேயே இணைந்து விட்டார். அவரும் மற்ற முஸ்லிம்களைப் போலவே துன்புறுத்தப்பட்டார். ஆனால் அது அல்லாஹ்வின் மீது அவர் வைத்திருக்கும் உறுதியான நம்பிக்கை யையும், தூதர் ﷺ மீதான பக்தியையும் அதிகரித்தது.
அவருக்காகவே சூரா அபஸா இறக்கப்பட்டது:
அவர் குர்ஆனை மனப்பாடம் செய்வதிலும், இஸ்லாத்தை கற்றுக் கொள்வதிலும் மிகவும் ஆர்வமாக இருந்தால் ரசூலுல்லாஹ் ﷺ வோடு எப்போதும் இருப்பார். பல கேள்விகளைலயும், சந்தேகங்களையும் கேட்டுக் கொண்டே இருப்பார். அவருக்கு கண் தெரியாததால் யார் உள்ளார் என்பதை அறியாமல் மிகச் சத்தமாகவே பேசுவார். சில நேரங்களில் அவரது அணுகுமுறை நபி ﷺ யையே எரிச்சலை ஏற்படுத்தும். அத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில் தான் அவரைப்பற்றி பத்திற்கும் மேலான வசனங்களை சூரா அபஸாவில் அல்லாஹ் இறக்கினான்: "அவர் (நபி ﷺ) கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார். அவரிடம் அந்த அந்த பார்வைற்றவர் வந்தபோது," [குறைஷி தலைவர்கள் குர்ஆனைப் பற்றி கேட்டு கொண்டு இருக்கும் போது]" (80:1 & 2).
அதற்கு பின் நபி ﷺ அவர்கள் அவருடன் மிகவும் மரியாதையோடு நடந்து கொண்டார்:
சூரா அபஸா இறங்கிய அன்றி லிருந்து ரஸூலுல்லாஹ் ﷺ அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தும் (ரஜி) விடம் பொறுமையாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்வார். பிந்தைய ஆண்டுகளில், அவர் இப்னு உம்மு மக்தும் (ரஜி) வை கீழ் கண்ட பணிவான வார்த்தைகளால் சலாம் கூறி வரவேற்பார். "எவருடைய நிமித்தம் என் இறைவன் என்னைக் கடிந்து கொண்டாரோ அவரை நான் வரவேற்கிறேன்." என்று.
ஹிஜ்ராவிற்கு முன் நபி ﷺ அவர்கள் அவரை மதீனா அனுப்பினார்:
குரைஷிகள் ரசூலுல்லாஹ் ﷺ அவர்களுக்கும் மற்ற முஸ்லிம்களுக்கு துன்புறுத்தலை தீவிரப்படுத்திய போது, நபி ﷺ அவர்கள்’ அப்துல்லா இப்னு உம்மு மக்தும் (ரஜி) மற்றும் முஸாப் இப்னு உமைர் (ரஜி) அவர்க மதீனாவிற்கு முதன் முதலாக ஹிஜ்ரத் செல்ல அனுமதித்தார். அவர்கள் இருவரும் மதீனாவாசிகளுக்கு குர்ஆனைப் ஓதி, அல்லாஹ் வின் மார்க்கத்தைப் போதித்தார்கள். பின் ரசூலுல்லாஹ் ﷺ அவர்கள் மதீனாவிற்கு வந்த போது, அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தும் (ரஜி) மற்றும் பிலால் இப்னு ராபாஹ் (ரஜி) ஆகியோரை முஅத்தீன்களாக மாறி மாறி பாங்கு, மற்றும் இகாமா கூறுபவர்களாக நியமித்தார். "ரஸூலுல்லாஹ் ﷺ மதீனாவில் இல்லாத நேரத்தில் அவரை மதீனாவின் பொறுப்பாளராக இரண்டு முறை நியமித்தார்." [சுனன் அபி தாவூத், 2931].
அல்லாஹ் அவரைப் பற்றி மற்றொரு வசனத்தை இறக்கி வைத்தார்:
சஹ்ல் பின் ஸாத் அஸ்- ஸாயிதி (ரஜி) கூறினார்: "மர்வான் பின் அல்-ஹகம் (ரஜி) மசூதியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன். அதனால் நான் முன்னால் வந்து அவர் பக்கத்தில் அமர்ந்தேன். அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் தனக்கு இறை வசனம் வந்ததை ஜைத் பின் தாபித் (ரஜி)
தன்னிடம் கூறியதாக அவர் எங்களிடம் கூறினார்: "எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துகளையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித் தவர்களாக) அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாக மாட்டார்கள்; அறப்போர் செய்பவரை உட்கார்ந்திருப்பவர்களை விட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்" (4.95). ஜைத் (ரஜி) கூறினார், "நபி ﷺ அவர்கள் அந்த வசனத்தை என்னிடம் எழுதக் கூறிக் கொண்டிருந்த போது இப்னு உம் மக்தும் (ரஜி), வந்தார், அதை கேட்ட அவர் "அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களே! நானும் நிச்சயமாக ஜிஹாதில் பங்கேற்பேன்" என்று கூறினார்கள். அவர் ஒரு பார்வையற்றவர். அதனால் அல்லாஹ் அவனுடைய தூதருக்கு கூடுதலாக ஒரு வஹீயை இறக்கி வைத்தான். நபி ﷺ முடைய தொடை என்னுடைய தொடையின் மீது இருந்ததால் வஹி இறங்கும் போது அது மிகவும் கனமானதால், என் தொடை உடைந்துவிடுமோ என்று நான் அஞ்சினேன். வெளிப்பாடு முடிந்த பிறகு நபி ﷺ "அவர்கள் ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி" என்பதை அந்த ஆயத்தின் (4.95) தொடக்கத்தில் எழுத கோரினார். [ஸஹிஹ் புகாரி, 2832].
ஜிஹாத்தில் கலந்து தன் அந்தஸ்தில் மேன்மை பெற இப்னு உம்ம மக்தும் (ரஜி) விற்கு ஆசை:
ஜிஹாத்தில் இருந்து தான் பார்வையற்ற காரணமாக விலக்கப்பட்ட போதிலும், அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தும் (ரஜி) வின் மனம் அந்தஸ்தில் மேன்மை பெற விரும்பியது. அதற்காக அவர் அல்லாஹ்விடம் மன்றாடினார். நபி ﷺ யிடமும் கேட்டுக் கொண்டார். ஆனால் நபி இருந்த வரை அவரை போரில் கலந்துக் கொள்ள விடவில்லை. போர்க்களத்தில் தனக்கென ஒரு பங்கை நிர்ணயித்த அவர் கூறுவார்: “என்னை இரண்டு வரிசைகளுக்கு இடையில் வைத்து, கொடியை கொடுங்கள். நான் குருடனாக இருப்பதால் ஓடிப்போகாமல் அதை பிடித்துக் கொண்டு பாதுகாப்பேன். "
அவர் தியாகி ஆனார்:
உமர் (ரஜி) அவர்கள் கலீஃபா ஆன போது பெர்சியர்களுக்கு எதிராக ஒரு பெரிய தாக்குதலை நடத்தினார். இதில் பார்வையற்ற முஜாஹித் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தும் (ரஜி) வை கலந்து கொள்ள அனுமதித்தார். அவரும் முழுமையாக கவச ஆடை அணிந்து தயாரானார். இராணுவம் காதிஸியாவை அடைந்த, மூன்றாவது நாளில், முஸ்லிம்கள் வெற்றியைப் பெற்றனர். இந்த தெளிவான வெற்றியின் விலை நூற்றுக்கணக்கான தியாகிகள். அவர்களில் அப்துல்லாஹ் இப்னு உம்மு மக்தும் (ரஜி) ஒருவர். போர்க் களத்தில் முஸ்லீம்களின் கொடியைப் பிடித்தபடி ஷஹீத் ஆனார்.
ஓர் எளிய விசுவாசி பார்வையற்ற நபி தோழர் தன் படைத்தவனின் திருப்தி பெற தியாகி ஆகி அவர் ஆசைப்பட்ட உயர்ந்த அந்தஸ்தை அடைந்தார்.
الحمدلله
No comments:
Post a Comment