17. ரம்ஜான் கேள்வி-பதில்
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
17. “நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்” என்று யார் இதை கூறினார்? [2:249].
பதில்: தாவூத் (அலை) காலத்து தாலூத் (ஸால்) என்ற பனி இஸ்ராயிலின் அரசன்.
அரசர் தாலூத் (ஸால்), எண்பதாயிரம் போர் வீரர்களோடு அவர்களுடைய நாட்டை அபகரித்த கோலியாத் என்ற கொடியவனுடன் போர் புரிய கிளம்பினார். அவர் கூறினார்: "நிச்சயமாக அல்லாஹ் சுப்ஹாணஹீதாலா உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்" என்றார். அந்த ஆறு ஜோர்டானுக்கும், பாலஸ்தீனத்தினதிற்கும் இடையே பாய்ந்து சென்றுக் கொண்டிருந்தது.
ஆற்றைக் கடக்கும் போது ஒரு சோதனை:
தாலூத் அவர்களுடைய படை வீரர்களில் பலருக்கு நல்ல நெறிமுறை என்பது இல்லை. அல்லாஹ் அவர்களின் போர் புரியும் விருப்பத்தை, நேர்மையை, சகிப்புத்தன்மையை சோதிக்க விரும்பினான். அவர்களில் போர் புரிவதில் தகுதியானவர்ளை, கீழ்படிபவர்களை, உறுதியானவர்களை தேர்ந்தெடுக்க விரும்பினான். அவர்கள் அணிவகுத்து செல்லும் போதே முன்னரே தீர்மானித்தபடி ஓர் ஆற்றை கடக்கும் போது சோதிக்க விரும்பினான்.
ஆற்றிலிருந்து தாராளமாக நீர் அருந்தியவர்கள் நதியை கடக்கவில்லை:
பின் அல்லாஹ் குர்ஆனில் தொடர்கிறான்:
இவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்; தாவூது ஜாலூத்தைக் கொன்றார்; அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்; தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக) அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு, (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங் கருணையுடையோனாக இருக்கிறான். (2:251).
இவ்வாறாக தாலூத் அரசனும், தாவூத் [அலை] நபியும், பனி இஸ்ராயில் கூட்டத்தாருக்கு உதவி, குழப்பம் செய்த கோலியாத் என்ற கொடியவனை அழித்தனர்.
No comments:
Post a Comment