Wednesday, March 27, 2024

 

16. ரம்ஜான் கேள்வி-பதில்

السلام عليكم ورحمة الله وبركاتة

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ  

16. உங்களுக்கு தெரியுமா யாரை "ஒரு மனித உம்மா" என்று கூறுவர் என்று?

பதில்: ஜைத் இப்னு அமர் இப்னு நூஃபால்

ஜைத் இப்னு அமர் குரைஷி குலத்தை சேர்ந்தவர். உமர் பின் கத்தாப்  அவர்களின் ஒன்று விட்ட சகோதரர். அவர் நம் நபி முஹம்மத் மோடு மூத்தவர். அவரின் நபித்துவதிற்கு முன் மக்காவில் வாழ்ந்தவர். அவர் உலகின் பத்து சுவர்க்கவாசிகளின் ஒருவரான ஸைத் பின் ஜைத் (ரஜி) அவர்களின் தந்தை. உண்மையில் அவர் முஸ்லீம் அல்லஆனால் "ஹனீஃப்"(ஒரே இறை கொள்கையை கடைபிடித்தவர்).

நபித்துவத்திற்கு முன் மக்காவில் நான்கு பேர், சிலை வழிப்பாட்டையும், பேகனிஸத்தையும் வெறுத்தனர். அவர்கள், உஸ்மான் இப்னு அல்-ஹுவைதத், உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷ், வராகா பின் நெளஃபால் மற்றும் ஜைத் பின் அமர். அவர்கள் நால்வரும் இப்ராஹிமின் மார்க்கத்தில் உறுதியாக இருந்தனர். அவர்களில் முதல் மூவரும் மக்காவை விட்டு வெளியேறி கிறிஸ்த்துவ மதத்தில் இணைந்தனர். உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் பின் இஸ்லாத்தில் இணைந்து  அபிசீனியாவிற்கு குடிபெயர்ந்து, அங்கு கிறிஸ்தவராக இறந்தார்.  வராகா பின் நெளஃபால் அவர்கள் ஹீப்ரு மொழி கற்றுத் முந்தைய வேதங்களின் அறிஞரானார். மக்கா திரும்பிய பின் நபித்துவத்தை அறிந்த பிறகு முதல் முஸ்லீமானார். ஆனால் ஜைத் பின் அமர் மக்காவிலேயே இருந்து அராபியர்களின் மார்க்க முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்.

சிலை வழிபாட்டை எதிர்த்தவர்:

சிலைகள் வழிபடுவதை தன் வாழ்நாளிலேயே கடை பிடிக்காதவர். அவர் காபா முன் நின்று கைகளை விரித்து, “யா அல்லாஹ், எந்த வழியில் உன்னை வழிபட்டால் உனக்கு மிகவும் பிடிக்கும் என்று எனக்குத் தெரிந்தால், அந்த வழியைப் பின்பற்றி நான் உன்னை வணங்குவேன், ஆனால் எனக்குத் தெரியாது. ஆகையால்  நான் உன்னை "யா ரப்பைப்" போல் வணங்குகிறேன், அதனால் நான் சுஜூத் செய்கிறேன், நான் சரியான மார்க்கத்தில் இருக்கிறேன் என்று நம்புகிறேன்." அவர்  சிலைகள் வணங்குவதை தடுக்க பாடுபட்டார்.

பெண் சிசுக்கள் கொல்லப்பட்டதை எதிர்த்தவர்;

அஸ்மா பின்த் அபி பக்ர் (ரஜி)  கூறினார் : "ஜைத் இப்னு அம்ர் இப்னு நுஃபைல் கஅபாவுக்கு எதிராக முதுகைக் காட்டி நின்று, “குரைஷிகளின் மக்களே! அல்லாஹ்வின் மீது ஆணையாக, என்னைத் தவிர உங்களில் யாரும் இப்ராஹீமின் மார்க்கத்தில் இல்லை. அவர் பிறந்த பெண் சிசுக்களை கொல்கின்றனர்: யாரேனும் ஒருவர் தனது மகளைக் கொல்ல விரும்பினால், "அவளைக் கொல்லாதே, உன் சார்பாக நான் அவளுக்கு உணவளிப்பேன்" என்று கூறுவார். எனவே அவர் அவளை அழைத்துச் செல்வார், அவள் நன்றாக வளர்ந்த பிறகு, அவள் தந்தையிடம், "இப்போது  அவள் விரும்பினால், நான் அவளை உனக்குத் தருகிறேன், நீங்கள் விரும்பினால், உங்கள் சார்பாக நான் அவளுக்கு உணவளிக்கிறேன்" என்று கூறுவார். [புகாரி]. பெண் சிசுக்களை காப்பாற்றினார்.

சிலைகளுக்கு பலி கொடுப்பதை எதிர்த்தவர்:

குரைஷ்  சிலைகளுக்கு முன்பாக பலியிடப்பட்ட விலங்குகளைப் பார்த்து அவரால் அமைதியாக இருக்க முடியாது.  கஅபாவின் சுவரில் சாய்ந்து, அவர் சத்தமாக  கூறுவார்: "குரைஷிகளே! ஆடுகளைப் படைத்தவன் அல்லாஹ் அவன்தான் வானத்திலிருந்து மழையைப் பொழியச் செய்தான்; அவன்தான் அவைகளை உண்ணும் பூமியிலிருந்து தீவனம் வளரச் செய்தான். பிறகும் நீங்கள் அவனுடைய பெயர் அல்லாத வேறு பெயர்களில் அவைகளை பலியிடுகிறீர்கள். உண்மையில், நீங்கள் அறியாத மக்களாக இருப்பதை நான் காண்கிறேன்." என்று.

மேலும், சிலைகளின் பெயரில் பலியிடப்பட்ட இறைச்சியை உண்பவர்களை  கோபம் கொண்டுஅவ்வாறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துவார். ஒரு தடவை நபி அவர்கள் சிறுவராக இருக்கும் போது, சிலைக்கு முன் பலியிட்ட இறைச்சியை அவருக்கு வழங்க, அவர் அதை உண்ணக்கூடாது என்று உபதேசித்தார். அதன் பின் நபிகள் அவற்றை தொடவே இல்லை.

குரைஷிகளால் துன்புறுத்தப்பட்டார்:

ஹஜ் காலத்தில் மக்கள் கூடும் போது இப்ராஹீம் (அலை) மின் மார்க்கத்தை போதிப்பார். இதனால் எரிச்சலடைந்த அரேபியர்கள் அவரை அடித்து துன்புறுத்த ஆரம்பித்தனர். இதனால் மக்காவை விட்டு  வெளியேற்றப்பட்டார்.

உண்மையான ஓர் இறை கொள்கையை அறிய பயணித்தவர்:

இப்ராஹிம் (அலை) மின் உண்மையான ஓர் இறை கொள்கையை அறிய பல நாடுகளுக்கு பயணம் செய்தார். ஜயீத் கூறினார், “நான்கு பெரிய நகரங்களில் அலைந்து திரிந்த பிறகு, நான் மீண்டும் ஷாமுக்கு திரும்பினேன். நான் பால்கனை அடையும் வரை தூய ஏகத்துவத்தைப் பற்றி பேசவும் தெரிவிக்கவும் ஒருவரைத் தேடி நகரத்தில் அலைந்தேன், அங்கு நான் ஒரு தேவாலயத்தைக் கண்டேன். நான் அருகில் சென்று போது ஒரு துறவி வெளியே வருவதைப் பார்த்தேன். அவர் என்னைப் பற்றி விசாரித்தார், நான் இப்ராஹிம் (அலை) அவர்களின் மார்க்கத்தைத் தேடிக்கொண்டிருந்தேன், ஆனால் எங்கும் கிடைக்கவில்லை என்று அவருக்குத் தெரிவித்தேன். அவர் பதிலளித்தார், “சுத்தமான ஏகத்துவத்தின் ஆசிரியரை நீங்கள் காண மாட்டீர்கள், ஏனென்றால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட்டார்கள். சத்திய மார்க்கத்தில் இருப்பவர் யாரென்றும் எனக்குத் தெரியாது. உங்கள் சொந்த நகரமான மக்காவில் பிறந்த ஒருவர், முஹம்மது  அவர்கள் இப்ராஹிமின் மதத்தை புத்துயிர் பெறச் செய்வார், எனவே நீங்கள் மக்காவுக்குத் திரும்பி அவரைச் சந்திப்பது நல்லது”.

அவர் மரணம்:

நபி அவர்களை சந்திக்க மக்கா திரும்பிய போது, புனித நகருக்கு அருகே நெடுஞ்சாலை கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். இறப்பதற்கு முன் வானத்தை நோக்கி பிரார்த்தித்தார், "யா அல்லாஹ்! நீ என்னை இந்த நன்மையை அடைய முடியாத  படி செய்தாய். என் மகனுக்கு அந்த பேற்றை அடையச் செய்" என்று. அத் தந்தையின் தீராத ஆசை மகனுக்கு அளித்து அல்லாஹ் அவரை பத்து சொர்க்கவாசிகளில் ஒருவனாக ஆக்கினார்.

மறுமையில் அவரது நிலை:

ஜைத்தின் மகனான ஸைத் இப்னு ஜைத் (ரஜி) கேட்டார் நபி الحمدللهஅவரிடம் கேட்டார்: “அல்லாஹ்வின் தூதரே ﷺ!, ஜைத் இப்னு அம்ர் நீங்கள் பார்த்தது போல் இருந்தார். அவர் உங்களைப் பற்றிய செய்திகளைக் கேட்டிருந்தார், அவர் உங்களை அடைந்திருந்தால், அவர் உம் மீது நம்பிக்கைக் கொண்டிருப்பார். அவருடைய மன்னிப்புக்காக நாம் பிரார்த்திக்கலாமா?” என்று

அல்லாஹ்வின் தூதர் பதிலளித்தார்: "ஆம், அவருடைய மன்னிப்புக்காக நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். நியாயத்தீர்ப்பு நாளில் அவர் ஒரு முழுமையான சமூகமாக எழுப்பப்படுவார். அவர் (என்னில்) நம்பிக்கை கொண்டிருந்தார் மற்றும் உண்மையான மதத்தைத் தேடிக்கொண்டிருந்தார், மேலும் அவர் அதைத் தேடும் போது இறந்தார்.

மற்றொரு அறிவிப்பில்இறைத் தூதர் கூறினார், “நான் சொர்க்கத்தில் நுழைந்தேன், ஜைத் இப்னு அம்ருக்கு இரண்டு தோட்டங்களைக் கண்டேன். மேலும் அவர் மறுமை நாளில் எனக்கும் ஈஸா இப்னு மர்யமுக்கும் இடையே ஒரு தேசமாகத் நிறுத்தப்படுவார்."

யாரோ ஒருவர் நபி அவர்களிடம் கேட்டார்கள். :நீங்கள் ஜைத் பின் அமர் பற்றி என்ன நினைக்கிறீங்கள்?" என்று. "ஜைத் இப்ராஹி (அலை)மின் மதத்தைத் தேடி உலகம் முழுவதும் அலைந்து கொண்டிருந்தார் என்றும், என்னைச் சந்திப்பதற்காக மக்காவுக்குத் திரும்பும்படி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் என் இறைவன் எனக்கு அறிவித்தான். எனவே, அல்லாஹ் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பும்போது, அவர் அனுப்பப்பட்ட இடத்தின் மக்கள் உம்மத் என்று அழைக்கப்படுகிறார்கள். அல்லாஹ் ஸைத் மீது மகிழ்ச்சியடைகிறான், எனவே அவன் (மறுமை நாளில்) தன்னுள் ஒரு முழு உம்மத்தாக எழுவார்."

இது அல்லாஹ், அவருக்கு கொடுத்த மிகப்பெரிய கெளரவமான வெகுமதி.

الحمدلله

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...