65. எப்பொழுது மனிதன் "என் இறைவன் என்னை கண்ணியப்படுத்தி உள்ளான்" என்றும் "என் இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட் டான்" என்றும் கூறுகின்றான்?
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
பதில்:
இறைவன் மனிதனை கண்ணியப்படுத்தி, பாக்கியம் அளித்து அவனைச் சோதிக்கும்
போது அவன்: “என் இறைவன் என்னை கண்ணியப் படுத்தியுள்ளான்” என்று கூறுகிறான். (89:15).
எனினும் அவனுடைய உணவு வசதிகளைக் குறைத்து, அவனை
(இறைவன்) சோதித்தாலோ, அவன், “என்
இறைவன் என்னைச் சிறுமைப் படுத்தி விட்டான்” எனக் கூறுகின்றான். (89:16).
அல்லாஹ் கேட்கின்றான்: “நாங்கள் ஈமான் கொண்டிருக் கின்றோம்” என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப் படாமல் விட்டு விடப் படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண் டார்களா? நிச்சயமாக அவர்களுக்கு முன்னிருந் தார்களே அவர்களையும் நாம் சோதித்திருக்கின் றோம் - ஆகவே உண்மை உரைப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் அறிவான்; இன்னும் பொய்யர்களையும் அவன் நிச்சயமாக அறிவான்.” (29:2 and 3). உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக்க மன்னிப்பவன்."(67:2).
அல்லாஹ் சுப்ஹானஹீதாலா நம்மை நன்மையை கொண்டும், தீமையை கொண்டும் சோதிப்பான், நம்மில் யார் நன்றியுள்ளவர்கள் என்றும், யார் நன்றி கெட்டவர் என்றும் யார் அவனுக்கு கீழ்படு கின்றனர், யார் கீழ்படியாதவர் என்றும், யார் அவனிடம் முழுமையாக, சரணடைகின்றனர், யார் அவனை விட்டு திருப்பப் படுகின்றனர் என்று அறிவதற்காக. நபி ﷺ அவர்கள் கூறியுள்ளார்: "அல்லாஹ் ஒருவருக்கு நல்லதை செய்ய விரும்பும் போது அவனுக்கு கஷ்டத்தை கொடுத்து சோதிக்கிறான்."
அல்லாஹ்
ஒரு மனிதனை அதிகமான செல்வம், உடல் ஆரோக்கியம், பிள்ளைகள், புகழ், மேலும்
பல அருட் கொடைகளை கொடுத்து
சோதிக்கின்றான். அப்போது அல்லாஹ் கேட்கின்றான்: "அவர்களுக்கு
நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டார்களா?
அவ்வாறல்ல; அவர்கள் (இதை) உணர்வதில்லை." (23:56).
அவனுக்கு
செல்வத்தை கொடுக்கும் போது பாருங்கள் அல்லாஹ் மனிதனை பற்றி என்ன
கூறுகின்றான் என்று:
🚩
நீங்கள் அநாதைகளைக் கண்ணியப்படுத்துவது இல்லை.
🚩
ஏழைக்கு உணவளிக்குமாறு தூண்டுவதில்லை.
🚩இன்னும் (பிறருடைய) அனந்தரச் சொத்துக் களையும் (சேர்த்து) உண்டு வருகின்றீர்கள்.
🚩
இன்னும், பொருளை அளவு கடந்து பிரியத்துடன்
நேசிக்கின்றீர்கள். (89:17-20).
ஆகையால் மனிதன் அல்லாஹ்வின் அருட் கொடைகளை பெறும் போது:
★ தன் செல்வத்திலிருந்து உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், தேவையுடையவருக்கும் அளிக்க வேண்டும்.
★ தான்
பெற்ற அறிவை அதனை தேடுபவர்களுடன் பகிர வேண்டும்.
★ பணிவோடும், மற்றவர்களுக்கு
உதவி செய்தும், நல்லவர்களாக இருக்க வேண்டும்.
★ அகங்காாம் பெற்றவர்களாக, பெருமை கொள்ப வர்களாக, சுயநலக்காரர்களாக, துஷ்டர்களாக இருக்கக்கூடாது.
★ மற்றவர்களின் கஷ்டங்களை அறிந்து கருணை யுடையவர்களாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் கேட்கின்றான்: "ஒவ்வோர் ஆண்டிலும், ஒரு முறையோ, இரு முறையோ அவர்கள் சோதிக் கப் படுகிறார்கள் என்பதை அவர்கள் காணவில் லையா?" (9:126). சில சோதனைகள் நமக்கு அல்லாஹ்வின் கட்டளையினால் ஏற்படுகின்றன. அது அல்லாஹ்விடமிருந்து சில காரணங்களுக்காக வருகிறது. அதை அல்லாஹ் தான் நன்கறிவான். நாம் அறிய மாட்டோம். அல்லாஹ் கூறுகின்றான்؛ “எல்லா நன்மையும் தீங்கும் அல்லாஹ்விடமிருந்தே வருகின்றன. (4:78). மேலும், "உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக் கிறது; இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது:" (4:79) என்றும் கூறுகின்றான். நாம் செய்யும் தவறான தேர்வுகளால்/ பாவங்களால்/ விருப்பங்களால்/ கருத்துக்களால் நமக்கு துன்பம் ஏற்படுகிறது. இதற்கு அல்லாஹ் பொறுப்பல்ல. அல்லாஹ் நமக்கு ஏழ்மை, உடல் நலமின்மை, நோய், பேரழிவுகள், பஞ்சம், பொருட்களின் இழப்பு, அவமானம் ஆகிய வற்றை கொண்டு சோதிக்கின்றான்.
கஷ்டங்களை கொடுத்து அல்லாஹ் சோதிக்கும் போது என்ன கூறுகின்றான் திருக்குர்ஆனில் என்று பாருங்கள்:
"அப்படி சோதித்தும் அவர்கள் தவ்பா செய்து மீள்வ துமில்லை; அது பற்றி) நினைவு கூர்ந்து நல்லு ணர்ச்சி பெறுவதுமில்லை." (9:126). "ஆனால் அ(த்தகைய)வர்கள் மீது கிருபை கொண்டு, அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கி விடுவோ மானால், அவர்கள் தட்டழிந்தவர்களாக தங்கள் வழிகேட்டிலேயே அவர்கள் நீடிக்கின்றனர்." (23:75). "அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவ தெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலான வற்றை அவன் மன்னித்து அருள்கின்றான்." (42:30). "இன்னும்: மனிதர்களில் (ஓர் உறுதியும் இல்லாமல்) ஓரத்தில் நின்று கொண்டு அல்லாஹ்வை வணங்கு கிறவனுக்கு ஒரு நன்மை ஏற்படுமாயின் அதைக் கொண்டு அவன் திருப்தியடைந்து கொள்கிறான்; ஆனால் அவனுக்கு ஒரு சோதனை ஏற்படுமாயின், அவன் (தன் முகத்தை) அல்லாஹ்வை விட்டும் திருப்பிக் கொள்கிறான்; இத்தகையவன் இம்மை யிலும் மறுமையிலும் நஷ்டமடைகிறான் -இதுதான் தெளிவான நஷ்டமாகும்." (22:11). "நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்க ளுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்; ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற் றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறிய மாட்டீர்கள். (2:216).
ஆகையால், அல்லாஹ் கூறுகின்றான்: "பொறுமை யைக் கொண்டும், தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச் சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கு அன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே இருக்கும். (2:45). "அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பீர்களாக!" (9:51) என்று.
ஆகையால்
துன்பம் ஏற்படும் போது ஒரு மனிதன்:
● பொறுமையை காக்க
வேண்டும்.
● ஜிக்ர் மற்றும்
தொழுகையை கொண்டு அல்லாஹ்வின் உதவியை பெற வேண்டும்.
● அவன் மீது பூரண
நம்பிக்கை வைக்க வேண்டும்
● தான தர்மங்களை செய்ய வேண்டும்.
● நற்செயல்களை
கொண்டு அல்லாஹ்வின் மகிழ்ச்சியை பெற வேண்டும்.
இன்பத்திலும் துன்பத்திலும் மனிதன் அல்லாஹ் விற்கு கீழ்படிய வேண்டும், நன்றி கூற வேண்டும், அவனிடம் திரும்ப வேண்டும், மேலும் அவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பிறகு கூறவும்
"إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيْهِ رَٰجِعُونَ" என்று.
الحمدلله
No comments:
Post a Comment