Tuesday, December 13, 2022

 

62. நபி அவர்களையும், மற்றும் முஸ்லிம்களையும் அல்லாஹ் இணை வைப்போர் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள் என்று ஏன் கூறுகின்றான்?

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்: இணைவைப்போர் வரம்பு மீறி அல்லாஹ் வைத் திட்டுவார்கள். "அவர் கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள் (அப்படித் திட்டினால்) அவர்கள் அறிவில்லாமல், வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்" (6:108).

மல்ஸத் அல் சுத்தி கூறுகிறார்: சில குரைஷி தலைவர்கள் கூடி பேசினார்கள்: " நாம் அபு தாலிபிடம் சென்று கூறலாம், அவர் தன் மருமக னிடம் எங்கள் முன்னோர்களையும் தெய்வங்க ளையும் பழித்துப் பேசினால், அதைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம். இதைக் கடவுளின் மீது ஆணையாகத் தெரிவிக்கிறோம். ஒன்று, நீங்கள் அவரைத் தடுத்து நிறுத்துங்கள். இல்லையெனில் நாங்கள் அவர் மீது போர் தொடுக்கிறோம், நீங்கள் அதில் தலையிடாமல் இருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்” என்று.

ஆகையால் அபு சுஃபியான், அபு ஜஹல், அல் நாதிர் இப்னு அல்ஹாரித், உமையா, கலஃப் மகன் உபய், உக்பாஹ் இப்னு அபி முஆத், அம்ர் இப்னு அல் ஆஸ், அல் அஸ்வத் இப்னு அல் புக்துரி ஆகிய குரைஷி தலைவர்கள் அபு தாலிப்பைச் சந்தித்து: “நீங்கள் ஞானமுள்ளவர். எங்களின் மூத்தவர் களில் ஒருவர். உங்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியா தை உண்டு. நாங்கள் உங்களிடம் உங்கள் சகோ தரரின் மகன் முஹம்மது வைத்தடுத்து நிறுத்து மாறு கோருகின்றோம். தாங்கள் அவரை கூப்பிட்டு எச்சரிக்கை செய்யுங்கள். நாங்கள் அவரை அவர் அல்லாஹ்வோடு மட்டும் இருக்க கோருகின்றோம்."

அபு தாலிப் இறைத்தூதருக்கு அழைப்பு விடுத் தார். அவர் வந்தவுடன் அபு தாலிப் அவரிடம் கூறினார் "இது உம் உறவினர்கள், ஒன்று விட்ட சகோத ரர்கள்" என்றார். அதற்கு இறைத்தூதர் அவர்கள்: "என்னிடமிருந்து என்ன விரும்புகி றீர்கள்?" என்று அவர்களை நோக்கி கேட்டார். அதற்கு அவர்கள்: "நீர் எங்களை எங்கள் சிலைக ளோடு விட்டு விடுங்கள். நாங்கள் உங்களை உம் அல்லாஹ்வோடு விட்டு விடுகின்றோம்." என்று கூறினர்.

"உம் உறவினர்கள் உம்மிடம் சரியானதையே கூறுகிறார்கள். நீ அவர்களி டம் உம் எண்ணத்தை கூறுவீர்" என்று அபு தாலிப் கூற, நபி அவர்கள்: "நீங்கள் ஒரே ஒரு வாக்கியத்தை கூறினால் நான் இதற்கு ஒப்புக் கொள்கின்றேன். அதை கூறினால் நீங்கள் அரபுகளைப் போல், அரபு அல்லாதவர் களையும் ஆட்சி செய்யலாம்." என்று கூறினார்.

அதற்கு அபு ஜஹல்: "சரி! நாங்கள் கூறுகின்றோம். அது போல பத்து மடங்கு அதிகமாகவும். உம் தந்தை மீது ஆணையாக அது என்ன?" என்று கேட்க நபி பெருமானார் கூறினார்: "அல்லாஹ்வை தவிர வேறு நாயன் இல்லை" என்று கூறுங்கள். ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித் தனர். அபு தாலிப் உடனே "என் மகனே! அதை எச்சரிக்கத் தானே அவர்கள் வந்துள்ளனர். நீர் வேறு ஏதாவது கேளும்" என்றார். அவர் கூறினார்: “ஓ பெரிய தந்தையே, அவர்கள் என் வலது கையில் சூரியனை யும் இடது கையில் நிலவையும் வைத்துக் கொடுத் தாலும் கூட, இந்தப் பணியில் அல்லாஹ் எனக்கு வெற்றியைக் கொடுக்கும்வரை, அதை நிறுத்த மாட்டேன். அதற்காக நான் இறக்கவும் தயாராக இருக்கிறேன்,” என்றார் இறைத்தூதர் ﷺ.

அதற்கு குறைஷிகளின் தலைவர் கூறினார்: "அப்படி என்றால் எங்கள் சிலைகளை தூற்றுவதை விட்டுவிடுங்கள். உம்மை யார் கட்டளையிடுகின் றானோ அவனை நாங்கள் தூற்றுவோம்" என்று. அப்பொழுது தான் அல் லாஹ் இவ்வசனத்தை இறக் கினான் என்று சொல்லப்படுகின்றது. அல்லாஹ் தான் நன்கறிவான்   

இறைமறுப்பாளர்களின் சிலைகளை தூற்றுவது அல்லாஹ்விடத்தில் பெ ரும் பாவம் அல்ல. அப்படி தூற்றுவதால் நிறைய தீங்குகள் நடைபெறுகின் றன. அவை:

 இறைநிராகரிப்பினரின் இறைநிராகரிப்பு அதிகமாகின்றது.

இறைநிராகரிப்பினரின் முரட்டுத்தனம் மிகவும் அதிகரிக்கிறது.

இறைநிராகரிப்பாளர்கள் அதற்கு தவறாக எதிர்ப்பை தெரிவித்து, அல்லாஹ்வைப்பற்றிய உண்மையை அறியாமையால் தங்களை படைத்த, வாழவைக்கின்ற அல்லாஹ்வை கெட்ட வார்த்தை களால் தூற்றத் தொடங்குவர்.

இதனால் மற்றவர்களை பாவம் செய்ய தூண்டு கோல் ஆகிவிடுகின்றது.

இதனால் மக்கள் உண்மையை அறிவதை விட உண்மையை விட்டு வெகு தூரம் செல்கின்றனர்.


ஆகையால் நபி அவர்களை பின்பற்றுவோர்,  பிரசங்கம் செய்யும் போது நிதானமாக இருக்கும் படி அறிவுறுத்தப் பட்டனர். முஸ்லிம் அல்லாதவர் களோடு தீன் பற்றி பேசும் பொழுது எல்லை கடக்காமல் இருக்க கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். மேலும் அவர்களின் சமயத்தையோ, அவர்க ளின் தலைவர்களையோ அவர்கள் வணங்கும் சிலைகளையோ தூற்றாமல் இருக்க வேண்டும்.

அல்லாஹ் இவ்வசனத்தில் மேலும் கூறுவது என்னவெனில் சிலை வணங்குவோருக்கு,  அவர்களின் சிலைகளின் மேல் அதிக  ஈடுபாடு கொள்ளவும் அதை பாதுகாக்கவும் அழகாக்கப் பட்டுள்ளது. இவ்வாறே ஒவ் வொரு சமூகத்தாருக் கும் அவர்களுடைய செயலை நாம் அழகாக ஆக்கியுள்ளோம் - பின்பு அவர்களுடைய மீட்சி அவர்களின் இறைவனிடமே இருக்கிறது. அப்போது அவர்கள் செய்ததை அவர்களுக்கு அல்லாஹ் அறிவிப்பான்.

இது போல், மார்க்க விஷயங்கள் மட்டும் அல்லா மல் மற்றவர்களோடு விவாதிக்கும் போதும், நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நாம் சொன் னதாலோ அல்லது செய்வதாலோ ஏற்படும் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியாது.

الحمدلله

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...