Monday, December 12, 2022

 

61..  யார் யார் மேல் அல்லாஹ்வின் சாபம் (لَّعْنَتُ اللَّهِ) இறங்கியது அல்லது இறங்குகிறது? 

 ﺑِﺴْـــــــﻢِﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍلرَّﺣِﻴﻢ 

● 1. ஷைத்தான் (முதன் முதலில் அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவன்):

அல்லாஹ் அவனை (ஷைத்தானை) சபித்தான்.” (4:118). “மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!" (38: 78) (15: 35) என்று (இறைவனும்) கூறினான். "அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறி விடு நிச்சயமாக நீ விரட்ட (சபிக்க)ப்பட்டவனாக இருக்கிறாய்." (15:34)

 ● 2. தூதர்களிடமிருந்து உண்மை வந்த பிறகும் நிராகரிப்போர் :

நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது!” (2:89). “இன்னும், அவர்கள் (யூதர்கள்) "எங்களுடைய இதயங்கள் திரையிடப் பட்டுள்ளன" என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய  நிராகரிப்பின் காரணத்தால், அல்லாஹ் அவர்க ளைச் சபித்து விட்டான்.” (33:64). “நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களைச் சபித்து, அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கின்றான்.” (2:88). “யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக் கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர் களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளு டையவும், மனிதர்கள் அனைவரு டையவும் சாபம் உண்டாகும். (2:161).

யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகி றார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றே யாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப் போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்ளை சபிப்பானாக! எங்கே திருப் பப்படுகிறார்கள்?” (9:30)

இதோ ஆது கூட்டத்தினர் - அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சி களை நிராகரித்து, அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக்கார வம்பர்களின் கட்டளை யையும் பின்பற்றினார்கள். எனவே, அவர்கள் இவ்வுலகிலும், நியாயத் தீர்ப்பு நாளிலும் சாபத்தி னால் தொடரப் பெற்றனர்; அறிந்து கொள்வீர் களாக! நிச்சயமாக 'ஆது' கூட்டத்தார் தங்கள் இறைவனுக்கு மாறு செய்தார்கள்;  இன்னும் அறிந்து கொள்வீர்களாக! ஹூதுடைய சமுதாய மான 'ஆது'  கூட்டத்தாருக்கு கேடுதான்.” (11:59 & 60)

அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர் தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்துவிட்டார்களே, அந்தக்கூட்டத்தார் .........மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனை வரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும்.” (3:86 & 87)

● 3. முஃமின்களை வேண்டுமென்றே கொல்கின் றவர்கள்:

எவனேனும் ஒருவன், ஒரு முஃமினை வேண்டு மென்றே கொலை செய்தால் அவனுக்கு உரிய தண்டனை நரகமே ஆகும். என்றென்றும் அங்கேயே தங்குவான். அல்லாஹ் அவன் மீது கோபம் கொள் கிறான். இன்னும் அவனைச் சபிக்கிறான். அவனுக்கு மகத்தான வேதனையையும் (அல்லாஹ்) தயாரித்திருக்கிறான். (4:93)

● 4. அநியாயக்கார்கள் மற்றும் அக்கிரமக் கார்கள்:

அந்நாளில், அநியாயக்காரர்களுக்கு அவர்கள் புகழ் கூறுதல் பயனளிக்காது - அவர்களுக்கு சாபமும் உண்டு தீய இருப்பிடமும் அவர்களுக்குண்டு. (40:52)

"அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!" (7:44; 11:18)

● 5. அல்லாஹ்வின் சாபத்தையும் கோபத்தையும் பெற்ற இஸ்ரவேலர்கள்:

"அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது" என்று யூதர்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய கைகள் தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்.” (5:64)

இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, காஃபிராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். (5:78)

● 6. சனிக்கிழமை வரம்பு மீறியவர்கள்:

".......(சனிக்கிழமையில் வரம்பு மீறிய) "அஸ்ஹா புஸ் ஸப்து" என்றோரை நாம் சபித்த பிரகாரம்...... (4:47).

"அல்லாஹ்விடமிருந்து இதைவிடக் கெட்ட பிரதி பலனை அடைந்த வர்களைப் பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (அவர்கள் யாரெனில்) எவரை அல்லாஹ் சபித்து, இன்னும் அவர்கள் மீது கோப முங்கொண்டு, அவர்களில் சிலரைக் குரங்குக ளாகவும், பன்றிகளாகவும் ஆக்கினானோ அவர் களும், ஷைத்தானை வழிப்பட்டவர்களும் தான் – அவர்கள் தாம் மிகவும் தாழ்ந்த நிலையினர். நேரான வழியிலிருந்தும் தவறியவர்கள்" (5:60).

● 7. ஃபிர்ஔனும் அவன் மக்களும்:

இன்னும், இவ்வுலகில் அவர்களைச் (ஃபிர்ஔனும் அவன்மக்களுக்கும்) சாபம் தொடருமாறு நாம் செய்தோம்; கியாம நாளில் அவர்கள் இகழப் பட்டவர்களாகவே இருப்பார்கள். (28:42)

இ(வ்வுலகத்)திலும், கியாமத் நாளிலும் அவர்கள் சாபத்தால் பின் தொடரப் பட்டனர்; அவர்களுக்கு கிடைக்கும் (இந்த) சன்மானம் மிகவும் கெட்டது. (11:99)

● 8.  அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை முறித்தவர்கள், விஷமம் செய்பவர்கள்:

எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்கு றுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகி றார்களோ இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார் களோ, பூமியில்  விஷமம் செய்கிறார்களோ - அத்தகையோருக்குச் சாபந்தான் அவர்களுக்கு மிகக் கெட்ட வீடும் இருக்கிறது.(13:25)

● 9. அல்லாஹ் அருளிய வேதங்களின் வசனங் களை மாற்றிவர்களும் மறைத்தவர்களும்:

அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம்; அவர்க ளுடைய இருதயங்களை இறுகச் செய் தோம்;. (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங் களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்க ளுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள். (5:13)

யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர் .................... ஆனால் அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். (4:46)

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிக ளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய) வர்களும் சபிக் கிறார்கள். (2:159)

● 10. நயவஞ்சர்கள்:

நயவஞ்சர்களான ஆடவருக்கும், நயவஞ்சகர் களான பெண்டிருக்கும், காஃபிர்களுக்கும் அல்லாஹ் நரக நெருப்பையே வாக்களித்துள்ளான்; அதில் அவர்கள் நிலையாகத் தங்கி விடுவார்கள்; அதுவே அவர்களுக்குப் போதுமானதாகும்; இன்னும் அல்லாஹ் அவர்களைச் சபித்துள்ளான்,” (9:68)

இவர்களை நீர் பார்த்தால், இவர்களுடைய உடல் (அமைப்பு)கள் உம்மை ஆச்சரியப்படுத்தும்; அன்றியும் இவர்கள் பேசினால், இவர்களுடைய பேச்சை நீர் (கவனித்துக்) கேட்பீர்; எனினும் இவர்கள் (நேர்மையானவர்கள் அல்லர், சுவரில்) சாய்த்து வைக்கப்பட்ட மரங்கள் போன்று இருக் கின்றனர், ஒவ்வொரு சப்தமும் தங்களுக்கு எதி ரானது என்று எண்ணுகிறார்கள், இவர்கள்தாம் (உம்) பகைவர்கள், ஆகவே இவர்களிடம் நீர் எச்சரிக்கையாக இருப்பீராக, அல்லாஹ் இவர்களை சபித்து விடுவான், இவர்கள் (சத்தியத்திலிருந்து) எங்கு செல்கின்றனர்?” (63: 4)

அல்லாஹ்வைப் பற்றி கெட்ட எண்ணம் எண்ணும் முனாஃபிக்கான ஆண்களையும், முனாஃபிக்கான பெண்களையும், இணைவைத்து வணங்கும் ஆண்களையும், இணைவைத்து வணங்கும் பெண்களையும், (அல்லாஹ்) வேதனை செய்வான். (அவ்வேதணையின்) கேடு அவர்கள் மேல் சூழந்தி ருக்கிறது. இன்னும் அல்லாஹ் அவர்கள் மீது கோபம் கொண்டான்; அவர்க ளைச் சபித்தும் விட்டான்;” (48:6)

நிச்சயமாக இவர்கள் ஈமான் கொண்டு பின் காஃபிர் ஆகிவிட்டதனாலேயாகும், ஆகவே இவர்களின் இதயங்கள் மீது முத்திரையிடப்பட்டு விட்டது,  எனவே, அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள். (63:3)

● 11. அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோவினை செய்வோர்:

எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரை யும் நோவினை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும் மறுமை யிலும் சபிக்கின்றான்; மேலும், அவர்களுக்கு இழிவுதரும் வேத னையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான். (33:57)

● 12. பூமியில் குழப்பம் உண்டாக்கி சுற்றத்தாரை துண்டித்து விடுபவர் கள்:

நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை துண்டித்து விடவும் முனைவீர்களோ? இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து, இவர்களைச் செவிடாக்கி இவர்கள் பார்வை களையும் குருடாக்கி விட்டான்.” (47:22 & 23)

الحمدلله

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...