60.“இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக!" யார் இந்த துவாவை ஓதினார்கள்?
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
பதில்: பீபி ஆசியா பின்த் முஜாஹிம் - ஃபிர்அவுனின் மனைவி. மூஸா (அலை) மை வளர்த்த அரசி.
மூஸா (அலை) பிறந்த வருடம், கொடுங்கோல் அரசனான ஃபிர்அவுன், பனி இஸ்ராயிலின் ஆண் மக்களை கொன்று கொண்டிருந்தான்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின் றான்: "நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமி யில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர் களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத் தாரை பலஹீனப்படுத்தினான்; அவர் களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான்.
ஆயினும் (மிஸ்ரு) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோ ருக்கு நாம் உபகாரம் செய்ய வும், அவர்களைத் தலைவர்க ளாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்க வும் நாடினோம். இன்னும், அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்க ளைப்பற்றி எ(வ் விஷயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்)." ( 28:4 - 6).
அல்லாஹ் மேலும் அவ்வர லாற்றின் உண்மை நிலையை விவரிக்கின்றான்: "நாம் மூஸா (அலை) மின் தாயா ருக்கு: “அவருக்கு (உன் குழந் தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவா யானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்” என்று வஹீ அறிவித்தோம்.
(நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத் தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கந் தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்க ளாகவே இருந்தனர்.இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்” என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை. (28:7 to 9).
ஃபிர்அவுனின் மனைவி, அரசி, ஆசியா பின்த் முஜாஹிம், குழந்தை மூஸாவிற்கு அவரது தாயாரை கொண்டே பாலூட்டி வளர்த்தார். அதுவே அல்லாஹ்வின் நாட்டமாக இருந்தது. அரசி ஆசியா தன் சொந்த மகனைப் போல் மூஸாவின் மீது எல்லையற்ற அன்பை பொழிந்தார். மூஸா (அலை) நபித்துவம் பெற்று அல்லாஹ் வின் அத்தாட்சி களை கொண்டு வந்த போது அவர் மூஸா (அலை) மற்றும் ஹாரூன் (அலை) முடைய இறைவன் மேல் நம்பிக்கை கொண்டார். ஆனால் தன்னை யே கடவுளாக கூறிக்கொள்ளும் ஃபிர்அவு னின் மனைவியாதலால் தன் நம்பிக்கை யை இரகசியமாக வைத்துக் கொண்டார்.
தன் மகளின் சிகை அலங்கார பெண் நம்பிக்கை கொண்டதனால் கடுமையான தண்டனை அடைந்ததை கண்டு தைரியம் கொண்டு தன் உண்மையான ஒர் இறை நம்பிக்கையை வெளிப்படுத்த யத்தனித் தார். தன் ஈமானின் வலிமையால், தைரியம் அடைந்து. ஃபிர்அவுனிடம் சென்று, "நான் உம்மை விடுத்து மூஸா (அலை) மற்றும் ஹாரூன் (அலை) முடைய இறைவன் மேல் நம்பிக்கை கொண்டேன்." எனறார். திகைத்த கணவன், "அதனால் ஏற்படும் விளைவு தெரிந்து தான் இதை கூறுகிறாயா?" என்று ஃபிர்அவுன் கேட்க, அவரும் "ஆம்" எனக் கூறினார்.
கதாதா கூறினார், "ஃபிர்அ வுன் உலகத்திலே மிக்க கொடூரமான இறை நிராகரிப்பாளன், அல்லாஹ்வின் மீது ஆணையாக அவன் நிராகரிப்பு அவனது மனைவியை பாதிக்கவில்லை. அம்மனைவி தன் இறைவனுக்கு அடிபணிய முடிவெடுத்து விட்டார்."
ஃபர்அவுன் அவரது நமபிக்கையை கைவிடுமாறு கோரினான். ஆனால் அவரோ அதற்கு மறுத்து விட்டார். மிகவும் இழிவான முறையில் அவரை சித்திரவதை செய்ய ஆரம்பித்தான். அவரை எல்லோ ரும் பார்த்துக் கொண்டிருக்கும் போது இழித்துரைத்தான், பட்டினி போட்டான், ஆடைகளை கழற்றினான், அவரது இரண்டு கைகளையும், இரண்டு கால்க ளையும் கம்பங்களில் கட்டி அவரது நெஞ்சில் பெரிய கல்லை வைத்து, அவர் முகம் கடும் வெயிலில் சுட்டெரிக்கும் வகையில் சித்திரவதை செய்தான். அந்த அரசிக்கு உதவி செய்ய எவரும் முன் வரவில்லை. இவை அனத்தையும் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு தன் இறைவனிடம் அடைக்கலம் அடைந்து, பின் வருமாறு பிரார்தித்தார்:
"என் இறைவா! எனக்காக உன்னிடத்தில், சுவர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டித் தருவாயாக! இன்னும் ஃபிர்அவ்னை விட்டும், அவன் செயல்களை விட்டும் என்னை காப்பாற்றுவாயாக! இன்னும் அநியாயக்கார சமூகத்தாரிட மிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக”
رَبِّ ٱبْنِ لِى عِندَكَ بَيْتًۭا فِى ٱلْجَنَّةِ وَنَجِّنِى مِن فِرْعَوْنَ وَعَمَلِهِۦ وَنَجِّنِى مِنَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ ( 66:11).
அவர் இவ்வுலக வாழ்க்கையில் தன் பதவி , பணம், பகட்டு இவையெற்றை எல்லாம் பெரிதாக கருதாமல், சுவர்க்கத்தில் தன்னை படைத்த இறைவனின் அருகா மையை விரும்பினார். நிம்மதியாக வாழ அநியாயக் காரர்களின் அரண்மனையை விட மறுமையின் வீடே சிறந்தது என்று உணர்ந்து இவ்வாறு வேண்டினார்.
அபு உத்மான் அந்-நஹதி குறிப்பிட்டதாக சுலைமான் கூறியுள்ளார்: "ஃபிர்அவ்னின் மனைவி சூரியனின் கடும் வெப்பத்தில் சித்ரவதை செய்யப்பட்டார். அவரை சித்ரவதை செய்பவர்கள் அவரை விட்டு விலகியவுடன் வானவர்கள் தனது இறகுக ளால் அவருக்கு நிழலிடுவர். அவர் சுவர்க்கத்தில் இருக்கும் தன் வீட்டை காண்பார்"
அவர்களால் அவரது ஆழ்ந்த நம்பிக்கை யை சித்ரவதைகளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அதனால் அவர் நம்பிக்கை மேன்மேலும் அதிகரித்தது. அவரது இறைவனும் அவ்வப்பொழுது வானத்தை திறந்து சுவர்க்கத்தின் வீட்டை அவருக்கு காட்டிக் கொண்டிருந்தான். அதை காணும் போது அவர் முகத்தில் புன்னகை பூக்கும். இவ்வளவு சித்ரவதைகளிலும் அவரது புன்னகையை கண்ட ஃபிர்அவுன் பெரிய பாரங்கல்லை அவர் மேல் தூக்கி எறியும் படி கட்டளையிட அவருடைய இறைவன் அவரது ஆன்மாவை எடுத்துக் கொண் டான். அவர்கள் அவருடைய உயிரைற்ற உடலைத் தான் துண்டு துண்டாக்க முடிந்தது.
அவருடைய வலியை, சகிப்பு தன்மையை, முழு சமர்பிப்பை திருக்குர்ஆன் இப்படி சாட்சி கூறுகிறது: "ஈமான் கொண்ட வர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக கூறுகிறான்." என்ன ஒரு வெகுமதி இந்த தைரியமான பெண்மணிக்கு!
பீபி ஆசியாவைப்பற்றிய ஹதீஸ்கள்:
அல்-ஹாஃபிஜ் இப்னு ஹாஜர் கூறினார்: பீபி ஆசியா, ஃபிர்அவுனின் மனைவி அவர்களின் நற்பண்புகளில் ஒன்று, அவர்தமக்கு கிடைத்த அரச சலுகையை யும், இவ்வுலக ஆடம்பர வாழ்க்கையையும் விட சித்ரவதைையையும் மரணத்தையும் தேர்ந்தெடுத் தார். மூஸா (அலை) மை குழந்தையாய் கண்ட போது அவர் (“இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக் கூடும்" என்று தன் ஞானத்தால் கூறியது எவ்வளவு சரியா கிவிட்டது." (ஃபாத் அல் பாரி, 6/448).
அபு மூஸா அல்-அஷாரி குறிப்பிட்டுள்ளார் நபி பெருமானார் ﷺ கூறினார்: ஆண்க ளில் பலர் முழுமை அடைந்துள்ளனர். ஆனால் பெண்களில் யாரும் முழுமை அடையவில்லை, மர்யம் பின்த் இம்ரா னையும், ஆசியா பின்த் முஜாஹிமையும் தவிர. மற்றும் ஆயிஷா (ரஜி) வின் மேன்மை, மற்ற உணவை விட தாரித் உணவு மேன்மையானது போல" (ஸஹிஹ் புகாரி 3230; முஸ்லிம், 2431).
இப்னு அப்பாஸ் (ரஜி) கூறினார்: இறை தூதர் ﷺ அவர்கள் மண்ணில் நான்கு கோடுகளை வரைந்து, "இது என்ன வென்று உங்களுக்கு தெரியுமா?" என்று கேட்டார். எப்போதும் போல் நாங்கள் "அல்லாஹ்வும் அவர் தூதருமே நன்கு அறிந்தவர்கள்." என்று கூறினோம். அவர் தொடர்ந்தார், " சுவர்க்கத்தின் சிறந்த பெண்மணிகளான, கதீஜா பின்த் குவைலித், ஃபாத்திமா பின்த் முஹம்மத், ஆசியா பின்த் முஜாஹிம் மர்யம் பின்த் இம்ரான் - ஆகியவர்கள் அல்லாஹ் அவர்களைக் கொண்டு மகிழ்ச்சி அடைவானாக." (அஹமத், 2664; ஸஹிஹ் அல் ஜாமி, 1135).
நபி ﷺ அவர்கள் கூறியதாக அனாஸ் (ரஜி) அறிவிக்கிறார்: இந்த உலகத்தில் தோன்றிய பெண்களான இம்ரானின் மகள் மர்யம், கதீஜா பின்த் குவைலித், ஃபாத்திமா பின்த் முஹம்மத், ஆசியா பின்த் முஜாஹிம் ஆகியவர்கள் உங்களுக்கு (முன் மாதிரியாக இருக்க) போதுமானவர்கள்."திர்மிதி, 3878).
பிரார்த்தனை:
"யா அல்லாஹ்! எங்களுக்கும் அவரைப் போல் உ றுதியான நம்பிக்கையையும், முழுமையாக உன்னிடம் சரணடையும் குணத்தையும், மேலும் நேர்வழியில் நாங்கள் செல்லும் ஆற்றலையும் அளிப்பாயாக! அவரைப் போலவே சுவர்க்கத்தில் எங்களுக்கும் ஒரு வீட்டை அமைத்து தருவாயாக! ஆமீன்!
هالحمدلل
No comments:
Post a Comment