Friday, December 9, 2022

 

59. "எங்கள் இறைவனே! நாங்கள் நம்பிக்கை கொண்டோம். எனவே  சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!"

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاھِدِینَ

இந்த துவா, யார் ஓதிய துவா?

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில்:  அல்லாஹ்விடமிருந்து வந்த மார்க்கம் தான் இஸ்லாம் என்ற  உண்மை அறிந்து அதை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்கள் செய்த துவா.

ஸைது பின் ஜாபிர், அஸ்-ஸுத்தியும் மற்றும் பலரும் கூறியது யாதென்றால் - இந்த ஆயத் நஜாஷி அரசனிடமிருந்து வந்த பிரதிநிதிகள் நபி   அவர்களை பார்க்க வந்த போது இறக்கியருளப் பட்டது. அவர்களுக்கு நபி   குர்ஆனின் சில பகுதிகளை வாசித்துக்காட்டவும், அப்பிரதிநிதிகள் கண்ணீர் விட்டு, பணிந்துஇஸ்லாத்தில் இணைந்தனர்.

அந்த நேரத்தில் அல்லாஹ் இந்த ஆயத்தை இறக்கி வைத்தான்: "(இத்தகையோர்) இத்தூதர் மீது இறக்கப்பட்டதை செவியேற்றால், உண் மையை உணர்ந்து கொண்ட காரணத்தால் அவர்கள் கண்கள் கண்ணீர் வடிப்பதை நீர் காண்பீர். "எங்கள் இறைவனே! நாங்கள் (இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம். எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!" என்றும் அவர் கள் கூறுவார்கள்." (அல் மாயிதா, 5:83). பின் அவர்கள் தம் தேசத்திற்கு திரும்பி சென்று நஜாஸி அரசனிடம் நடந்ததை கூறினர். எல்லா மதத்தினரை விட நபி   அவர்கள் ஒரு சில தீவிர கருத்துக்களை தவிர, கிறிஸ்தவ மதத்தினரிடம் மிக்க அனுதாபம் கொண்டவர்.


அல்லாஹ்வும் திருக்குர்ஆனில் கிறிஸ்தவர் களைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டுள்ளான்:

"நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின் றோம்" என்று சொல் பவர்கள், முஸ்லிம்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர். ஏனென்றால் அவர்களில் கற்று அறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின் றனர். மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வது மில்லை." (5:82). மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: "மர்யமின் குமாரர் ஈஸா (அலை) மையும் அவருக்கு கொடுக்கப்பட்ட  இன்ஜீலையும்  - பின்பற்றியவர் களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபை யையும் உண்டாக்கினோம்"  (57:27).

"இதற்கு முன்னர் எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கிறோமோ அவர்களும் இதன் மீது நம்பிக்கை கொள்கிறார்கள். மேலும் (இது) அவர்க ளுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், அவர்கள்  "நாங்கள் இதை நம்புகிறோம்; நிச்சயமாக இது நம்முடைய இறைவனிடமிருந்து வந்துள்ள சத்திய (வசன) மாகும், இதற்கு முன்னரே நாங்கள் (இறை வனுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம் களா இருந்தோம்" என்று கூறுகிறார்கள்.(28:52 & 53).

அத்தகைய நல்ல கிறிஸ்தவர்களுக்கு அல்லாஹ் இரட்டிப்பு கூலி வழங்கு வான்: "இவர்கள் பொறு மையை மேற்கொண்டமைக்காக இருமுறை நற்கூலி அளிக்கப் படுவார்கள்; மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வார்கள்; நாம் அவர்களுக்குக் கொடுத்த வற்றிலிருந்து (தானம் தருமங்களில்) செலவும் செய்வார்கள்." (28:54)

திரித்துவம் (Trinity)  தவிர கிறிஸ்துவ மதத்திற்கும் இஸ்லாமிற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. அவர்கள் தங்கள் மதக் கொள்கைகளை கண்டிப் பாக பின்பற்றுவர். அதனால் தான் அல்லாஹ் அவர்களை, "வேதம் கொடுக்கப்பட்ட மக்கள்" என்று குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். அவர்கள் உணவும் முஸ்லிம் களுக்கு ஹலாலானது. அவர் களது பெண்களை மஹரை  அளித்து, மண முடித்துக் கொள்வதும்  அனுமதிக்கப்பட்டுள்ளது. (5:5).

நபி   அவர்கள் தன் வாழ்நாளில் மக்காவிலும் மதினாவிலும் சரி வெகு சில கிறிஸ்தவர்களையே கண்டிருக்கிறார். தான் மக்காவில் வணிகம் செய்யும் போதும் சில கிறிஸ்தவர்களையே சந்தித்திருக்கிறார்.

நபி  அவர்களையும்  திருக்குர்ஆனையும் நம்பிக்கை கொண்ட சில கிறிஸ்தவர்கள்:

பஹீரா-2:

நபி   அவர்கள் சிறுவராக இருந்த போது,  தன் பெரிய தந்தையான அபு தாலிபோடு சிரியாவிற்கு பயணித்துக் கொண்டிருந்தார். வழியில் பாஸ்ட்ரா என்ற இடத்தில் தங்க நேரிட்டது. பஹீரா என்ற ஒரு கிறிஸ்தவ பாதிரியார் அவ்வூரில் வசித்து வந்தார். வேதம் கற்றவரான அவர் அரேபியா தீபகற்பத் தில் கடைசி நபியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டி ருந்தார். ஆகையால் சிரியா செல்லும் அரேபிய வணிகர்களோடு எப்போதும் தொடர்பு கொண் டிருப்பார்.

ஒரு நாள் அவர் ஒரு வணிக கூட்டத்தை ஒரு மேகம் நிழலிட்டு செல்வதை கண்டார். அவ்வணிக கூட்டம் அவர் இருக்கும் இடத்திற்கு வந்ததும் நின்றது. அது போலவே ஒரு மரம் தன் கிளைகளை தாழ்த்தி அவர்களுக்கு நிழல் தந்தது. அதை உற்று கவனித்த அவர் அந்த வணிக கூட்டத்தை காண ஆவல் கொண்டு அவர்களுக்காக ஒரு விருந்தை ஏற்பாடு செய்தார். விருந்திற்கு  வந்த அனைவரையும் கண்ட அவர் கவனம் நபித்துவத்திற்கான அனைத்து இலக்கணங்களையும் ஒருங்கே கொண்ட சிறுவரான முஹம்மதிடம் சென்றது. அவரது சட்டையை விலக்கி முதுகில் இருந்த முத்திரையை கண்ட அவர், அச்சிறுவர் தான் இறுதி நபி என்று அறிந்தார். அபு தாலிபிடம் அச்சிறுவனுக் கு எதிரிகளிடமிருந்து நல்ல பாதுகாப்புயளிக்கு மாறு கேட்டு கொண்டார். நபித்துவம் மிக்க சிறுவரை அடையாளம் கண்ட முதல் கிறிஸ்தவர் இவர் தான்.

வரகா இப்னு நவ்ஃபால்:

முஹம்மது நபி   அவர்களை 'நபி' என்று அடையாளம் காட்டிய இரண்டாவது கிறிஸ்தவர் இவர். ஹீப்ரு மொழியை கற்று கிறிஸ்துவ மதத் திற்கு மாறிய இவர் - பார்வையற்ற முதியவர். திருக்குர்ஆன் வசனங்கள் முதன் முதலில் நபி  மிற்கு  இறங்கிய போது, அவரது துணைவியார் கதீஜா (ரஜி),  நபி   அவர்களை, தன் ஒன்று விட்ட சகோதரரான இவரிடம் அழைத்துச் சென்றார்.  வேதங்களை கற்றறிந்த இந்த அறிஞர் அத்திரு வசனங்களை புரிந்து கொண்டு இவர் தான் நாம் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இறுதி நபி என்று கூறினார். அவருக்கு அவ்வசனங்களை கற்று கொடுத்தவர் ஜிப்ரீல் (அலை) என்ற வான தூதுவர் என்றும் விளக்கினார்‌. அவர் அங்கேயே நபி   அவர்கள் மேல் நம்பிக்கை கொண்டு முதல் முஸ்லிமானார். தான் உயிரோடு இருந்தால் தன் முழு ஆதரவையும்  முஹம்மத் முக்கு தருவதாக கூறினார். ஆனால் துரதிஷ்ட வசமாக சில நாட்க ளிலேயே அவர் இறைவனடி சேர்ந்தார்.


சல்மான் அல் ஃபார்ஸி:

சல்மான், ஃபர்ஸியாவில் வசித்த பணக்கார ஜோராஸ்டிரியனுக்கு ஒரே மகனாக  பிறந்தவர்.  ஒரு சமயம் அவர் கிறிஸ்தவர்கள் தம் ஆலயத்தில் செய்த பிரார்த்தனையை கேட்க நேர்ந்து,  அதனால் கவரப் பட்டு கிறிஸ்த வராக மாறினார். இதைய றிந்த அவர் தந்தை அவரை சங்கிலியால் கால்க ளை கட்டி வீட்டில் அடைத்தார். தப்பி ஓடி சிரியா சென்ற அவர் ஒரு கிறிஸ்தவ பாதிரியாரிடம் வேதம் கற்க சேர்ந்தார். அவர் ஒரு ஏமாற்று பேர்வழி என் பதை அறிந்து, அவர் இறந்த பின் மக்களிடம் அவரைப்பற்றி கூற அவர்களும் நிறைய பொன் னும் பொருளும் சேர்த்து வைத்ததை கண்டு வெகுண்டனர். பின் அங்கிருந்து சென்று பல பாதிரியார்களிடம் பாடம் கற்றார். கடைசியாக பாடம் கற்றவரிடம் இறுதி நபியின் வருகையைப் பற்றி அறிந்தார். அதிலிருந் அரேபியா சென்று அவரை பார்க்க ஆசைப் பட்டு தன்னிடமிருந்த பணத்தை ஒரு வணிக கூட்டத்தினரிடம் தந்து அரேபியாவிற்கு பயணித்தார். ஆனால்அவர்களோ அவரை ஏமாற்றி பணம் பறித்து யதிரிப் செல்லும் ஒரு யூதருக்கு அடிமையாய் விற்று விட்டனர். யத்ரிப் என்ற மதீனாவையடைந்த அவர் அடிமை யாய் கடுமையாக உழைத்தார்.

ஒரு நாள் பேரீட்சை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது நபி  ﷺ அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்ததை அறிந்து அவரை காண புறப்பட்டார். சில பேரீட்சை பழங்களை எடுத்து சென்று நபி  அவர்களுக்கு சதாகாவாக வழங்கி னார். அவரும் அதை தான் உண்ணாமல் தன் தோழர்களுக்கு முழுவதையும் கொடுத்து விட்டார். ஏனெனில் நபிமார்கள் சதாகா தந்ததை  உண்ண மாட்டார்கள். அடுத்த நாள் மேலும் சில கனிகளை எடுத்துக் கொண்டு அதை பரிசாக கொடுத்தார். அதை தானும் உண்டு தோழர்களுக்கும் கொடுத் தார். நபி   அவர்களின் முதுகிலுள்ள முத்திரையை காண ஆவல் கொண்ட சல்மான் அவரது பின் பக்கமே நிற்பதை கண்ட நபி   அவர்கள், குறிப்பறிந்து மெதுவாக தன் மேல் சட்டையை விலக்க முத்திரை கண்ட சல்மான் அப்போதே இஸ்லாத்தை தழுவினார்.

அவர் நன்கு கற்றறிந்து  இருந்ததால் நபி தோழர் களிடையே மதிப்பும் மரியாதையும் கொண்டவ ரனார். அகழ் யுத்தத்தின் போது அகழ் வெட்ட ஆலோசனை கூறியதே சல்மான் (ரஜி) தான். இவர் தான் முதன் முதலில் ஒரு சில குர்ஆனின்  பாகங் களை பாரசீகத்தில் மொழி பெயர்த்தவர். முப்பத் தியைந்து ஆண்டுகள் இஸ்லாத்திற்காக பணி புரிந்து உதுமான் (ரஜி) கலீஃபாவாக இருக்கும் போது இயற்கை எய்தினார்.

நஜாஷி:

நஜாஷி என்பவர் அபிசினியாவின் கிறிஸ்துவ அரசர். இவர் மக்காவிலிருந்து புலம் பெயர்ந்த முஸ்லிம்களுக்கு அடைக்கலம் தந்து ஆதரித்தவர். அவர்கள் அங்கு அமைதியாக வாழ்ந்ததைக் கண்ட  குரைஷிகள், பரிசுகளோடு பிரதிநிதிகளை அனுப்பினர். அரசர் நஜாஷி, முஸ்லிம்கள் மற்றும் குரைஷிகள் மூவரும் பல கட்டங்களில் ஓன்று கூடி பேசினர். நஜாஷி, முஹம்மத் அவர்களுக்கு அருளிய திருக்குர்ஆனை வாசிக்கச் சொல்லி கட்டளையிட ஜாஃபர் பின் அபு தாலிப் (ரஜி) அவர்கள் சூரா மர்யமை தன் இனிய குரலால் வாசித்து காட்ட அதை கேட்ட நஜாஷி கண்ணீர் விட்டு குரைஷி பிரதிநிதிகள் கொண்டு வந்த பரிசுகளோடு திருப்பி அனுப்பிவிட்டார். திருக் குர்ஆன் வசனங்களை கேட்ட அரசர் அதை உண்மையென்றும் தம் வேதம் கொடுத்த அதே இறைவன் தான் இதையும் இறக்கியுள்ளான் என்றும் அறிந்தார்.

இவ்வரசர் நபி   அவர்களின் கட்டளைப்படி அபு சுஃபியானின் மகளான உம்ம ஹபீபாவை  அபிசினியாவில் அவர் இல்லாமலே திருமணம் செய்து வைத்து மிகப் பெரிய வலிமா விருந்தையும் ஏற்பாடு செய்திருந்தார். அவர் அபிசினியாவில் இறந்த செய்தியை கேட்டு நபி   அவர்கள் அவருக் காக ஜனாஸா தொழுகையை மதீனாவில் தொழுது அவருக்காக பாவமன்னிப்பு கோரினார்!  சுப்ஹானல்லாஹ்!

நஜ்ரானின் கிறிஸ்துவ பிரதிநிதிகள்:

கடைசியாக நஜ்ரானிலிருந்து அறுபது கிறிஸ்துவ பிரதிநிதிகள் நபி ﷺ அவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றி அறிய வந்திருந்தனர். அவர்களை மஸ்ஜிதே நபவியின் பக்கத்தில் தங்க வைத்து நன்றாக விருந்தோம்பினார். அவர்கள் மஸ்ஜிதிலேயே தங்களுடைய பிரார்த்தனைகளை செய்ய அனுமதித்தார்.

பல கட்ட பேச்சுவார்த்தைகளில், அவர்கள் இஸ்லாமோடு ஒத்துப் போனலும் திரித்துவ (Trinity) கொள்கையை அவர்களால் விட்டு கொடுக்க முடியவில்லை. அவர்கள் கூறினார்கள்: "ஓ அபு அல் காஸிம்! நாங்கள் உங்களை உங்கள் நிலையிலே விட்டு விடுகின்றோம்! நீர் எங்களை எங்கள் நிலையில் விட்டு விடுவீராக! நாங்கள் உங்களை நம்புகின்றோம்! நீர் எங்களுடன் ஒருவரை பாதுகாப்பிற்காக அனுப்பி வைப்பீராக!" என அவர்கள் ஜிஸ்யா பணம் கட்ட ஒத்துக் கொண்டனர்.

ஆனாலும் சில கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களுக்கு பகைவர்களாகவும் கேடு விளைவிப்பவராகவும் இருந்தனர். அல்லாஹ்வே அவர்களைப்பற்றி இப்படி கூறுகின்றான்: "முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்கள் தம்மில் சிலர் சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர். உங்களில் எவரேனும் அவர்களைப் பாதுகாவலர்களாக ஆக்கி னால் நிச்சயமாக அவரும் அவர்களைச் சேர்ந்த வர்தான்." (5:51).

யூதர்களும் கிறிஸ்தவர்களும் நபி வையும், முஸ்லிம்களை வெறுத்தாலும், அல்லாஹ் முஸ்லிம் களிடம் குர்ஆனில் கூறுகின்றான், எந்த நபியையும் வேறுபடுத்தி  கூறாதீர்கள் என்று. (முஃமின்களே!) "நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப் பட்ட (வே தத்) தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியின ருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸா வுக்கும் கொடுக்கப் பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக் கிடையேயும் நாங்கள் வேறு பாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக் கே முற்றிலும் வழிபடுகிறோம்"  என்று கூறுவீர் களாக." (2:136).

الحمدلله

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...