57. "அவளையும்,
அவள் சந்ததியையும் விரட்டப் பட்ட ஷைத்தானி (ன் தீங்குகளி) லிருந்து
காப்பாற்றத் திடமாக உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்." இப்படி
பிரார்த்தித்தது யார்? "அவள்" என்பது யாரை குறிக்கின்றது?
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
பதில்:
இது இம்ரானின் மனைவி, அதாவது பீபி மர்யமின் தாய் செய்த
பிரார்த்தனை. இந்த வசனத்தில் 'அவள்' என்பது
பீபி மர்யமை குறிக்கும். சந்ததி என்பது ஈஸா (அலை)மை குறிக்கும்.
ஆதமையும்,
நூஹையும், இப்ராஹீமின் சந்ததி யரையும், இம்ரானின் சந்த தியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக
தேர்ந்தெ டுத்தான். (ஆல இம்ரான், 3:33). இவ்வாறு
தேர்ந்தெ டுக்கப்பட்ட இம்ரானின் மனைவி கருவுற்றபோது: "என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை
உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை)
என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றை யும்
செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்"
என்று கூறினார். (3:35).
(பின்,
தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவர் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்;
"என் இறைவ னே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கின் றேன்"
எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண்,
பெண்ணைப் போலல்ல. (மேலும் அத்தாய் கூறினார்): "அவளுக்கு மர்யம்
என பெயரிட்டுள் ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து
காப்பாற்றத் திடமாக உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்." என்று (3:36).
ஒரு
புனிதமான, சிறந்த பெண்மனியின் தாய், ஒரு நபியின் பாட்டி, எப்படி பிரார்த்தார் என்று பாருங் கள்!
அவர் தன் குழந்தையின் இவ்வுலக நல்வாழ் விற்காகவோ, அழகிற்காகவோ,
அறிவிற்காகவோ, நீண்ட ஆயுளுக் காகவோ
பிராத்திக்கவில்லை. இப்ராஹிம் (அலை) மை வழி கெடுக்க நினைத்த வனும், சகோதர்களிடம் பொறாமையை உண்டு பண்ணி யூஸுஃப் (அலை) மை கிணற்றில்
வீசி யெறிய வைத்தவனும், அய்யுப் (அலை) மை அலை கழிக்க
வைத்தவனுமான ஷைத்தானைப் பற்றி நன்கறிந்த அவர் தன் குழந்தையையும் அதன் சந்ததியையும்
வெருட்டப்பட்ட ஷைத்தானால் நேர்வழி பிறழாமல் இருக்க பிராத்தித்தார்.
''அவளுடைய
இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற் றுக் கொண்டான். அக்குழந் தையை அழகாக
வளர்த்திடச் செய்தான். அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள் ளும்படி
செய்தான்." (3:37). அல்லாஹ்விடமிருந்து கணக்கின்றி அவளுக்கு உணவளிக்கப்பட்டது.
அல்லாஹ்
அவளை தேர்ந்தெடுத்து தூய்மையாக ஆக்கி,
உலகத்தில் உள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) அவளை தேர்ந்தெடுத்தான். (3:42). அவளும் அல்லாஹ் கட்டளையிட்டபடி இறைவனுக்கு முழுமையாக அடிபணிந்தும்,
ஸுஜுது செய்தும் ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம்
செலுத்தினாள் (3:43).
மர்யமின்
மகன் ஈஸா மஸீஹ் (அலை) ஒரு சிறப்பு வாய்ந்த நபி. அல்லாஹ்வின் 'குன்' அதாவது 'ஆகுக'
என்ற சொல்லால் பிறந்தவர். அவர் இவ்வுலகத் திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோரா கவும் (இறைவனுக்கு) நெருங்கி
இருப்பவர்களில் ஒருவராகவும் இருந்தார். (3:45).
மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில்
இருக்கும் போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த
பருவத்திலும் அவர் மக்களுடன் பேசினார்; இன்னும்
(நல்லொழுக் கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருந்தார். (3:46)
"இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும்
கற்றுக்கொடுத்தான்." (3:48).
"இஸ்ராயீலின்
சந்ததியினருக்குத் தூதராகவும் அவரை ஆக்கினான்..... இறைவனிடமிருந்து ஓர்
அத்தாட்சியுடன் வந்து அவர்களுக்காக களிமண்
ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி, ஊதி, அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அதை (உயிருடைய) பறவையாக்கினார்.
பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்தினார்.
அல் லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பித்தார். அவர்கள்
உண்பவற்றையும், அவர்கள் வீடுகளில் சேகரம் செய்து
வைப்பவற்றையும் பற்றி எடுத்துக் கூறினார்." (3:49)
அவருக்கு
முன் இறங்கிய தவ்ராத்தை மெய்பித்து, அவர்களுக்கு
விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை அனுமதிக்கவும், இறைவனிடமிருந்து அத்தாட்சியை
கொண்டு வந்தார். அவர்களை
அல்லாஹ்விற்கு அஞ்சுமாறும் ஏவி அவரை பின் பற்றுமாறும் பணிந்தார். (3:50).
அவர் "நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களு டைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே
(ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான வழியாகும்." (3:51). இதுவே உண்மையும் ஆகும்!
ஆகையால்
தாய்மார்களே! உங்கள் குழந்தைக ளுக்காக பிரார்த்தியுங்கள்! உங்கள் இறைவனிடம் அவர்களை
ஷைத்தானை விட்டு இரட்சிக்கவும் மறுவுலகின் மகத்தான வெற்றியை அடையவும் அவர்களுக்காக
பிரார்த்திக்கவும். ஏனெனில் அல்லாஹ் ஒரு தாய் உடைய பிரார்த்தனையை நிச்சயம்
அங்கீகரிப்பான்! ஆமீன்!
الحمدلله
No comments:
Post a Comment