56. இன்னும், இரக்கம்
கொண்டு பணிவு என்னும் இறக்கையை நீர் தாழ்த்த வீராக. மேலும், "என் இறைவனே! .........................., நீயும் அவர்களுக்கு கிருபை செய்வாயாக!" இந்த
துவாவை பூர்த்தி செய்யவும். இந்த துவா யாருக்காக செய்யப் படுகின்றது?
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
பதில்: அல்லாஹ் பெற்றோரிடம் பணிவாகவும் இரக்கத்தோடும் இருக்க கூறி இந்த துவாவை ஓதசொல்கின்றான்: " رَّبِّ ارْحَمْهُمَا
كَمَا رَبَّيَانِي صَغِيرًا" "என் இறைவனே!
நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும்
வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை
செய்வாயாக!" என்று!
★ இந்த ஆயத்திற்கு முந்திய ஆயத்தில் அல்லாஹ் கூறுகின்றான்:
"அவனையன்றி
(வேறு எவரையும்) நீர் வணங்க லாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்தி ருக்கின்றான்;
அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில்
நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப்
(சீ) என்று சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட
வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! (அல்
இஸ்ரா,17: 23). அதன் பிறகு அல்லாஹ் பெற்றோர்களுடன்
இரக்கத்துட னும், பணிவாகவும் நடக்க கோரியுள்ளான்.
அல்லாஹ்விற்கு பிறகு பெற்றோர்களுடன் பணிவாக இருக்க கூறுகின்றான்.
★ அல்லாஹ் ﷻதிருக்குர்ஆனில் பெற்றோர்களை
பற்றி பல இடங்களில் குறிப்பிட்டு உள்ளான்:
"அவனையன்றி
(வேறு எவரையும்) நீர் வணங்க லாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் இரக்கத்தோடு இருக்க வேண்டும் என்றும்
உம்முடைய இறைவன் விதித்தி ருக்கின்றான்" (2:83, 4:36,
6:151,17: 23, 31:14 & 46:15).
"தாயை
அவளுடைய குழந்தையின் காரணமாக வோ, (அல்லது) தந்தையை அவன் குழந்தையின்
காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது".(2:233). " உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை,
(யாருக்குச்) செலவு செய்ய வேண்டும்"
என்று. நீர் கூறும்; "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய
உறவினர்களுக்கும், அநாதைகளுக் கும், மிஸ்கீன்
(ஏழை)களுக்கும், வழிப்போக்கர் களுக்கும்
(கொடுங்கள்)." (2:215). யார் யாருக்காக செலவு செய்ய வேண்டும் என்று அல்லாஹ் سبحانه وتعالىٰ குறிப்பிடும் போது பெற்றோருக்கு முதல்
ஸ்தானத்தை கொடுக்கின்றான்.
"மேலும்
அல்லாஹ் கூறுகின்றான்: "உங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர்
ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர்
(தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து
(மரண சாஸனம்) செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது. (இதை நியாயமான முறையில் நிறை
வேற்றுவது) முத்த கீன்கள் (பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்" (2:180). மரண
சாஸனம் எழுதும் போது, பெற்றோர் உயிருடன் இருந்தால், அவர்களுக்கு முதலில் சொத்தை எழுத வேண்டும்.
"ஒருவர்
மரணித்தால் அவர் சொத்தில் பெற்றோ ருக்கு பங்கு உண்டு என்று அல்லாஹ்
குறிப்பிடு கின்றான். "இறந்தவருக்கு குழந்தை இருக்குமா னால் இறந்தவர் விட்டுச்
சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால்
இறந்தவருக்கு குழந்தை இல்லா திருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர்
தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்). இறந்தவருக்கு சகோதரர்களிருந் தால்
அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக்
கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனை யும்
நிறைவேற்றிய பின்னர்தான். உங்கள் பெற் றோர்களும், குழந்தைகளும்
- இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்களென நீங்கள்
அறியமாட்டீர்கள். ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ் விடமிருந்து வந்த
கட்டளையாகும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க
ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்." (4:11).
★ அல்லாஹ் ﷻ பெற்றோரில் தாய்க்கு
முக்கியத் துவம் கொடுத்துள்ளான்:
தாய் தந்தையை விட மூன்று மடங்கு அதிகம்
முக்கியத்துவம் வாய்ந்தவள் என்று கூறும் ஹதீஸை நீங்கள் எல்லோரும் அறிவீர்! அல்லாஹ்
கூறுகின்றான்: "நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம்
செய்யவேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய
தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவ ளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி
மறத்த(லி)ல் இரண்டு வருடங் கள் ஆகின்றன. ஆகவே "நீ எனக்கும் உன்
பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிட மே உன்னுடைய மீளுதல் இருக்கிறது."
(31:14).
இன்னொரு
இடத்தில் அல்லாஹ் குறிப்பிட்டு உள்ளான்: "மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை
செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகுசிரமத்துடனேயே
அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக் கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப்
பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும்.
அவன் வாலிபனாகி, நாற்பது வயதை அடைந்ததும்;
"இறைவனே! நீ என் மீதும், என்
பெற்றோர் மீதும் புரிந்த அருள் கொடைகளுக்காக நன்றி செலுத்த வும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும்
எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும்
ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தி யருள்வாயாக! நிச்சயமாக நான்
உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான்
முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக)
இருக்கின்றேன்" என்று கூறுவான்." (46:15). தனக்காகவும், தன் பெற்றோருக்காகவும், தன்னுடைய
சந்ததிகளுக் காகவும் ஒரு மனிதன் செய்யும் இந்த துவா மிகச் சிறந்த துவா!
★ பெற்றோருக்கு முரணாக பேசும் போது நீதியுடன் பேசுங்கள்:
"அல்லாஹ் முஃமின்களை அழைத்து கூறுகின் றான்: "முஃமின்களே! நீங்கள் நீதியின் மீது நிலைத் திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மை யான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடைய வன். எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சை யைப் பின்பற்றி விடாதீர்கள். மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்." (4:135).
★ இறைவனுக்கு இணவைக்க பெற்றோர்கள் கூறும் போது அதை ஏற்காதீர்:
"தன்
தாய் தந்தையருக்கு நன்மை செய்யும்படியாக நாம் மனிதனுக்கு வஸிய்யத்து செய்திருக்கிறோம்
எனினும், (மனிதனே!) உனக்கு அறிவு இல்லாத ஒன்றை
எனக்கு இணையாக்கும்படி அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால், நீ அவ்விருவருக்கும் கீழ்படிய வேண்டாம்; என்னிடமே
உங்கள் அனைவரின் மீளுதலும் இருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி
அப்போது நான் உங்களுக்கு அறிவிப்பேன்." (29:8).
★ அதைப் போலவே கீழ்படியாத பிள்ளைகளை அல்லாஹ் நல்ல பெற்றோர்களிடமிருந்து பிரித்தும் விடுகின்றான்:
எடுத்துக்
காட்டாக நூஹ் (அலை) மின் மகன் இறைநிராகரிபாளர்களுடன் நீரில் மூழ்கிப் போனான்.
அதைப் போலவே கிஸர் (அலை) ஒரு சிறுவனை கொன்று விட்டு மூஸா (அலை) மிடம் கொன்ற காரணத்தை கூறினார்:
" அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று
நாம் பயந்தோம்." (18:80) என்றார்.
★ பெற்றோர்கள் கூறிய பிறகும் அல்லாஹ்வை நிராகரிப்பவன் நஷ்ட வாளியாவான்:
"ஆனால்
(சன்மார்க்கத்தை தழுவுமாறு கூறிய) தன் பெற்றோரை நோக்கி; "சீச்சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது! (மரணத்திற்குப் பின்) நான்
உயிர்ப்பித்து எழுப்பப்படுவேன் என்று நீங்கள் என்னைப் பய முறுத்துகிறீர்களா?
திடமாக எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் சென்று விட்ட னரே
(அவர்கள் எழுப்பப்படவில்லையா)!" என்று கூறியவனைப் பாதுகாக்குமாறு அவ்விருவரும்,
(அல்லாஹ்விடம் பிரார்த்தித்து பிறகு அவனிடம்)
"உனக்கென்ன கேடு! நீ ஈமான் கொள்வாயாக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி
மெய்யானது" என அல்லாஹ்விடம் காவல் தேடுகிறார்கள்; அதற்கவன், "இவையெல்லாம் முன்னுள்ளவர்களின் கட்டுக் கதைகளேயன்றி வேறில்லை" என்று கூறுகிறான் (46:17). அல்லாஹ்
கூறுகின்றான், இத்தகையவர்கள் நஷ்டவாளி களாகி
மறுமையையும் இழந்து விட்டனர் என்று.
★ அல்லாஹ் திருக்குர்ஆனில் தாய் தந்தை யருக்கு கீழ்படிந்த நபிமார்களை எடுத்துக் காட்டாக கூறியுள்ளான்:
யஹ்யா (அலை), தம் பெற்றோருக்கு நன்றி செய்ப வராகவும் இருநதார்; அவர் பெருமை அடிப்பவரா கவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை." (19:14 ). இதைப்போலவே ஈஸா (அலை) கூறுகிறார்: "நான் என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக் காரனாக என்னை அவன் ஆக்கவில்லை.” (19: 32). அல்லாஹ் ஆதமின் சந்ததியினரை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின் றான்:. "உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்க ளுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர் களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக் குள்ளாக்க வேண்டாம்" என்று. (7:27).
★ நபிமார்கள் தங்கள் பெற்றோர்களுக்காக கீழ்கண்டவாறு பிரார்தித்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது:
இப்ராஹிம்
(அலை) இவ்வாறு பிரார்த்தித்தார்: "எங்கள் இறைவா! என்னையும், என் பெற்றோர் களையும், முஃமின்களையும்
கேள்வி கணக்குக் கேட்கும் (மறுமை) நாளில் மன்னிப்பாயாக" (என்று
பிரார்த்தித்தார்)." (14:41). நூஹ் (அலை), "என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப்
பிரவேசித்தவர் களுக்கும், முஃமினான ஆண்களுக்கும்,
முஃமி னான பெண்களுக்கும்,
நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையே அல்லாது (வேறு எதையும்) நீ
அதிகரிக்காதே" (என்றும் பிரார்த்தித்தார்) (71:28).
சுலைமான்
(அலை), "என் இறைவா! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட் கொடைகளுக்காக, நான் நன்றி செலுத்தவும், நீ பொருந்திக்
கொள்ளும் விதத்தில் நான் நன்மைகள் செய்யவும், எனக்கு
அருள் செய்வாயாக! இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில்
சேர்த்தருள்வாயாக!" என்று பிரார்த்தித்தார். (27:19).
யூஸுஃப் (அலை) தன் பெற்றோரை அரியணையில் அமர்த்தினார். அவர்கள் அவருக்கு ஸஜ்தா செய்த னர். அவர் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி, "என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு அரசாட்சியைத் தந்து, கனவுகளின் விளக்கங்களையும் எனக்கு கற்றுத் தந்தாய்; வானங்களையும் பூமியையும் படைத்தவனே! இம்மையிலும் மறுமையிலும் நீயே என் பாதுகாவலன்; முஸ்லீமாக (உனக்கு முற்றிலும் வழிபட்டவனாக இருக்கும் நிலையில்) என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! இன்னும் நல்லடியார் கூட்டத்தில் என்னைச் சேர்த்திடுவாயாக!' என்று அவர் பிரார்த்தித்தார். (12:101).
الحمدلله
No comments:
Post a Comment