54. "இதன்
மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை
வசப்படுத்தித் தந்த அ(வ்விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்" நன்கு தெரிந்த இந்த
துவாவை முஸ்லிம்கள் எப்பொழுது ஓதுவர்?
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
பதில்:
பிராணிகளின் மேலோ வாகனத்தின் மேலோ ஏறி
பயணிக்கும் போது ஓதும் துவா.
(43:13) سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَٰذَا
وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَ إِنَّا
إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ،
அல்லாஹ்
சுபஹானஹு தாலா கூறுகின்றான்: "அவனே பூமியை உங்க ளுக்கு விரிப்பாக ஆக்கி,
அதில் நீங்கள் (விரும்பி இடத்திற்குச்) செல்லும் பொருட்டு
வழிகளையும் ஆக்கினான் .......... உங்க ளுக்காக, கப்பல்களையும்,
நீங்கள் சவாரி செய்யும் கால்நடைகளையும் உண்டாக்கினான். அவற்றின்
முதுகுகளின் மீது நீங்கள் உறுதியாக அமர்ந்து கொள்வதற்காக." (அஸ் ஸுக்ருஃப், 43:10, 12 & 13).
மேலும்
அல்லாஹ் கூறுகின்றான்: "அவற்றின் மேல் நீங்கள் உறுதியாக அமர்ந்ததும், உங்கள் இறைவ னுடைய அருளை நினைவு கூர்ந்து, "இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித் தந்த அ(வ்விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்" என்று.
(43:13).
பூமியிலுள்ள
எல்லா படைப்பினங்களையும் விட அல்லாஹுதாலா மனிதனுக்கு மட்டும் படகு கப்பல், விலங்குகளைக் கொண்டு பயணம் மேற் கொள்ளும் திறமையை கொடுத்தான். பரந்த
சமுத்திரத்தில் படகுகள், கப்பல்கள் செலுத்துவ தற்கான ஆற்றலைக்
கொடுத்தான். அதுபோலவே மனிதனை முதுகில் சுமந்து கொண்டு வெகு தூரம் பயணம் செய்ய
சக்தியுடைய விலங்குகளையும் படைத்தான். மனிதன் அதை உணர்வதும் இல்லை, அதற்கு நன்றி செலுத்துவதுமில்லை.
அலி (ரஜி) கூறுகிறார்: நபி ﷺ அவர்கள் குதிரையின் சேண வளையத்தில், بِسْمِ ٱللَّٰهِ என கூறி காலை வைத்து ஏறி அமர்ந்ததும்,
سُبْحَانَ
الَّذِي سَخَّرَ لَنَا هَٰذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَ إِنَّا إِلَى
رَبِّنَا لَمُنْقَلِبُونَ
الْحَمْدُ
لِلَّهِ، الْحَمْدُ لِلَّهِ، الْحَمْدُ لِلَّهِا، للَّهُ أَكْبَرُ، اللَّهُ
أَكْبَرُ، اللَّهُ أَكْبَرُ،
سُبْحَانَكَ إِنِّي ظَلَمْتُ نَفْسِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنوُبَ إِلَّا أَنْتَ
“இதன் மீது (செல்ல) சக்தி யற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ்விறை)வன் மிக்க பரிசுத்தமானவன். மேலும், நிச்சயமாக நாம் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்களாக இருக்கின்றோம்." (43:13 & 14). பின் அவர் الْحَمْدُ لِلَّهِ மூன்று தடவையும்,اللَّهُ أَكْبَرُ மூன்று தடவையும் கூறி பின், "பரிசுத்தமான என் இறைவனே! எனக்கு நானே தீங்கிழைத்துக் கொண்டேன், ஆகையால் என்னை நீ மன்னிப்பா யாக! ஏனென்றால் உன்னை தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிப்பதில்லை.''
அதற்குப் பின் அவர் சிரித்தார். இறைத்தூதரே ﷺ ஏன் அவ்வாறு சிரித்தீர்? என்று நான் கேட்க, அவர் பதில் அளித்தார்: ஒரு அடியான் "رَبِّ اغْفِرْ لِي" என கூறும் போது எல்லாம் வல்ல அல்லாஹ் மிக்க மகிழ்ச்சியடைந்து, "என் அடியானுக்கு தெரியும் என்னை தவிர வேறு யாரும் அவன் பாவங்களை மன்னிப்பதில்லை" என்று கூறுவான்.
அப்துல்லாஹ் பின் உமர் (ரஜி) கூறுகிறார்: நபி ﷺ அவர்கள் தன் வாகனத்தில் بِسْمِ ٱللَّٰهِ என கூறி அமரும் போது கூறுவதாவது:
اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ اَللهُ أَكْبَرُ سُبْحَانَ الَّذِيْ سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِيْنَ وَإِنَّا إِلَى رَبّنَا لَمُنْقَللِبُوْنَ اَللّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا اَلْبِرَّ وَالتَّقْوَى وَمِنَ الْعَمَلِ مَا تَرْضَى اَللّهُمَّ هَوّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اَللّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيْفَةُ فِي الأَهْلِ اَللّهُمَّ إِنّيْ أَعُوْذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالأَهْلِ
மூன்று
தடவை அல்லாஹு அக்பர் என்று கூறி இதன் மீது (செல்ல) சக்தி யற்றவர்களாக இருந்த
எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன்
மிக்க பரிசுத்தமானவன். மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள்.
இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும்,
உன்னை மகிழ்வு படுத்தும் நல்லறத்தையும் கொடுக்க உன்னிடம்
வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை
எங்களுக்குச் குறைத்துவிடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கின்றாய். எங்கள்
குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், எங்களுடைய குடும்பத்திலும்,
செல்வத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதி லிருந்தும் உன்னிடம்
பாதுகாப்புத் தேடுகிறேன்."
இந்த துவாவை விலங்குகளின் முதுகில் ஏறும் போது மட்டும் கூறாமல், சைக்கிள், இரண்டு, மூன்று, நான்கு அல்லது ஆறு சக்கர வாகனங்கள், படகு, கப்பல், விமானம் போன்ற எந்த வாகனத்தின் மீது ஏறினாலும் கூறவேண்டும்.
அபு
மிஜ்லாஜ் (ரஜி) கூறுகிறார்: "ஒரு தடவை நான் விலங்கின் மீது ஏறும் போது இந்த
ஆயத்தை ஓதினேன்." ஹாசன் (ரஜி)
கேட்டார்: "நீங்கள் இவ்வாறு ஓத கட்டளையிடப்பட்டீரா?" என்றார். பின்,
"நான் என்ன கூறவேண்டும்?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இஸ்லாத்தில்
வழி காட்டதியத்திற்காக அல்லாஹ் விற்கு நன்றி செலுத்தும். நபி ﷺ அவர்களை நமக்காக
அனுப்பியதற்காக அவனுக்கு நன்றி செலுத்தும். நல்ல சமுதாயத்தில் நம்மை வாழவைத்த
மைக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தும். பின் நீர் இந்த ஆயத்தை ஓதுவீர்". என்று
கூறினார். ஆம்! அவர் சரியாகத் தான் கூறினார்.
அல்லாஹீதாலாவும்
குர்ஆனில் இவ்வாறு கூறியுள்ளான்:
" எனக்கு
நீங்கள் நன்றி செலுத்தினால், உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை)
அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்" (14:7).
பயணத்திலிருந்து
வீடு திரும்பிய பின்:
மேற்கண்ட அதே துவாவை ஓதி அதைத் தொடர்ந்து: آيِبُوْنَ تَائِبُوْنَ عَابِدُوْنَ لِرَبّنَا حَامِدُوْنَ "எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகின்றோம்." என்று கூறவேண்டும்.
الحمدلله
No comments:
Post a Comment