Saturday, December 3, 2022

 

53. "என் இறைவா!  நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!" எப்போது மூஸா (அலை)  இந்த துவாவை வேண்டினார்?

بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

பதில் : மூஸா(அலை) தன் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவனோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான்.  பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரவே – மூஸா (அலை)   அ(ப்பகை) வனை ஒரு குத்துக் குத்தியவுடன் அவன் கதை முடிந்தது. திடுக்கிட்ட அவர் இது  ஷைத்தானுடைய வேலை என்று உணர்ந்து இந்த துவாவை ஓதினார்.

மூஸா (அலை)   ஃபிர்அவுன் உடைய அரண்மனை யில் வளர்ந்து வாலிபனாக, பக்குவநிலை பெற்ற போது, அல்லாஹ் அவரது நற்செயற்கள் காரண மாக அவருக்கு ஞானத்தையும் கல்வியையும் அளித்தான்.(28:14)   பலவீனமானவர்களும் ஒடுக்கப் பட்டவர்களும் அவரது நீதிக்காகவும், பாதுகாப் பிற்கும் அவரை நாடி வந்தனர்.

ஒரு நாள் மூஸா (அலை) மக்கள் அயர்ந்து (தூக்கத் தில் பராமுகமாக)  இருந்த போது, நகரத்தில் நுழைந்தார். அங்கு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்; ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொ ருவன் அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான். மூஸா (அலை) அவனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா (அலை)); "இது ஷைத்தா னுடைய வேலை. நிச்சயமாக அவன் வழி கெடுக்கக் கூடிய பகிரங்கமான விரோதியாவான்" என்று கூறினார் (28:15) .

தன் இறைவனை அழைத்து, மூஸா (அலை)   தான் செய்த அந்த எதிர் பாராத  காரியத்திற்காக மன்னிப்பு கோரினார். "என் இறைவா!  நிச்சயமாக நான் என் ஆத்மாவுக்கே அநியாயம் செய்து விட்டேன்; ஆகவே, நீ என்னை மன்னிப்பாயாக!" என்று பிரார்த்தித்தார். அப்போது அல்லாஹ் அவரை மன்னித்தான். நிச்சயமாக, அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபை மிக்கவனாகவும் இருக்கின்றான்."

மேலும் அவர், "என் இறைவா! என் மீது நீ அருள் புரிந்ததன் காரணமாக,  நான் இனி ஒரு போதும் குற்றவாளிகளுக்கு உதவி செய்பவனாக இருக்க மாட்டேன்" என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார். (28:16 &17).

அக்காலத்தில் மிஸர் என்று அழைக்கப்பட்ட எகிப்தில், கொலை செய்தவற்கு தண்டனை – மரணம். எனவே (தமக்கு என்ன நடக்குமோ என்று மறுநாள்) காலையில் பயத்துடன் கவனித்துக் கொண்டு நகரத்தில் சென்ற போது, முன் தினம் அவரிடம் உதவி கோரியவன்  மீண்டும் அவரை (உதவிக்காக) கூச்சலிட்டு அழைத்தான்.  அதற்கு, மூஸா (அலை)   "நிச்சயமாக நீ பகிரங்கமான கலகக் காரனாக இருக்கிறாய்' என்று அவனிடம் கூறினார்.

பின்னர்,  மூஸா (அலை)   தம்மிருவருக்கும் பகைவனாக இருந்தவனைப் பிடிக்க, நாடியபோது, அவர் இனத்தான் தன்னையே அவர் பிடிக்க (வரு கிறார்) என்று எண்ணி, "மூஸாவே!  நேற்று ஒரு  மனிதனை நீர் கொலை செய்தது போல், என்னை யும் கொலை செய்ய நாடுகிறீரா? இப்பூமியில் அக்கிரமம் செய்பவராகவே இருக்க நீர் நாடுகிறீர். மேலும், இணக்கம் ஏற்படுத்துவோரில்  (ஒருவராக)  இருக்க நீர் நாடவில்லை" என்று கூறினான். (28:18 & 19).

அச்சமயத்தில், நகரத்தின் ஒரு கோடியிலிருந்து  மனிதர் ஒருவர் ஓடி வந்து, "மூஸாவே!  நிச்சயமாக இந்நகர்ப் பிரமுகர்கள் ஒன்று கூடி உம்மைக் கொன்று விட வேண்டுமென ஆலோசனை செய்கி றார்கள்; ஆகவே நீர் (இங்கிருந்து) நிச்சயமாக வெளியேறி விடுவீராக! நான் உம் நன்மையை நாடுபவர்களில் ஒருவனாவேன்” என்று கூறினார். (28:20).

ஆகையால் மூஸா (அலை)  பயத்துடனும், கவன மாகவும் அ(ந் நகரத்)தை விட்டுக் கிளம்பி விட்டார்; "என் இறைவா! இந்த அக்கிரமக்கார சமூகத்தாரை விட்டும் நீ என்னைக் காப்பாற்றுவாயாக" என்று பிரார்த்தித்தார்.

பயணத்திற்கான எந்தவித ஏற்பாடும் செய்யமால் மாற்று உடை கூட இல்லாமல் வெகு தூரத்தில்  இருக்கும் மத்யன் நாட்டின்  பக்கம் சென்ற போது, 'என் இறைவன் என்னை நேரான பதையில் செலுத்தக் கூடும்' என்று முழுநம்பிக்கையுடன் சென்றார்.

அல்லாஹ் அடிக்கடி திருக்குர்ஆனில் தன் பாவங்களை மன்னிக்க பிரார்த்திக்கும் படியும்,  அவனது அருட் கொடைகளுக்கு நன்றி செலுத்தும்படியும், அவன் மேல் திடமான நம்பிக்கை வைக்கவும்  நினைவூட்டுகின்றான்.

الحمدلله

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...