52. "இறைவா! இந்தப்பட்டணத்தைப் பாதுகாப் பான இடமாக ஆக்கி வைப் பாயாக! இதில்
வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல
வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக" யார் இந்த துவாவை ஓதினார்கள்? அப்பட்டணத்தின் பெயர் என்ன?
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
பதில்: இப்ராஹீம் (அலை). பட்டணத்தின் பெயர் மக்கா.
“(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பாக்கியம் மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.” (3:96). அறிஞர்கள் இந்த வசனத்திற்கு பல விதமான விளக்கங்களை அளித்துள்ளனர். அல்லாஹ் வானங்கள் பூமியை படைத்த போதே அந்த இடத்தை புனித பூமியாக் கினான் என்றும் கூறப்படுகிறது. ஆதம் (அலை) முதன் முதலில் அவ்வீட்டை கட்டினார் என்றும், வெகு காலத்திற்கு பின் அது தரை மட்டமாகி விட்டது என்றும் கூறப்படுகிறது. அல்லாஹ் அவ்விடத்தை பிறகு இப்ராஹிம் (அலை) மிற்கும் அறிவித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்ராஹிம் (அலை) மக்களை அல்லாஹ்வின் பால் அழைத்துக்கொண்டிருந்த போது, அல்லாஹ் அவரை தன் புண்ணிய பூமியான மக்காவிற்கு அழைத்துச் சென்றான். (21:71). அப்போது அது நீர் அற்ற பாலைவனமாக இருந்தது.
அல்
புகாரி பதிவு செய்த இப்னு அப்பாஸ் கூறிய ஹதீஸின் சாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
“இப்ராஹிம் தன் துணைவியான ஹாஜரை, பால்குடி பருவத்திலிருந்த தன் மகன்
இஸ்மாயில் (அலை) முடன் இப்போதுள்ள மக்கா
பள்ளத்தாக் கில், ஆள் அரவமற்ற, நீர்
மற்றும் உயிரினங்களற்ற பாலைவனத்தில்
அல்லாஹ்வின் கட்டளைப்படி விட்டு விட்டு சென்றார்.
சிறிது
தூரம் சென்ற பின் மிக்க வருத்தத்தோடு நின்று அவர்களுக்காக பிரார்த்தித்தார்:
"எங்கள் இறைவனே! நிச்சயமாக நான் என் சந்ததியாரிலி ருந்தும், சங்கையான உன் வீட்டின் (காபாவின்) அருகே விவசாயமில்லாத (இப்)பள்ளத்தாக்கில், - தொழுகையை அவர்கள் நிலை
நிறுத்தாட்டுவதற் காகக் குடியேற்றியிருக்கின்றேன்; எங்கள்
இறைவனே! எனவே மக்களில் ஒரு தொகை யினரின்
இதயங்களை அவர்கள் பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும்
பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக!" (14:37)
என்று.
தன்னிடமிருந்த தண்ணீர் தீர்ந்த பிறகு, ஹாஜர்
நீர் தேடி ஸஃபா மலைக்கும், மர்வா மலைக்கும், அழும் குழந்தையை விட்டுவிட்டு, மிகுந்த
கஷ்டத்துடன், நீர் தேடி ஏழு முறை ஓடினார். கருணை
மிக்க அல்லாஹ் ஜிப்ரீல் (அலை) மை உதவிக்கு
அனுப்பினான். அவர் தரையைத் தட்டவே ஜம் ஜம் நீர்
வெளியே பாய்ந்தது. அந்நீரை கொண்டு தாகம் தணித்துக் கொண்டார் ஹாஜிரா. உடனே
ஜம் ஜம் நீர் ஓடி வீணாகமல் இருக்க மண்ணில் கிணறு போல அமைத்தார். நபி ﷺ அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் குறிப்பிட்டுள்ளார், "இஸ்மாயில் (அலை) மின் தாய் அந்நீரை தடுத்திராவிட்டால் அது பூமியின்
மேல் பாய்ந்து ஓடிக்கொண்டு இருந்தி ருக்கும்" என்று.
ஜிப்ரீல் (அலை)
ஹாஜர் அவர்களை நோக்கி, "இங்கு தனியே
விடப்பட் டிருப்பதற்கு கவலை கொள்ள வேண்டாம். இந்த குழந்தையும் அவர் தந்தையும்
சேர்ந்து இங்கு அல்லாஹ்வின் வீட்டை கட்டுவார்கள். எந்த மனிதர்களையும் அல்லாஹ்
தனியாக விடுவதில்லை" என்று நன்மாராயம் கூறினார்.
அல்லாஹ்
ஜம் ஜம் நீர் அருளிய சிறிது தினங்களில் பறவைகள் அங்கு வர ஆரம்பித்தன. பறவையை கண்ட
அவ்வழியே சென்ற ஒட்டக வணிக கூட்டம் அங்கு நீர் இருக்கக்கூடும் என்று அறிந்து அங்கு
வந்தனர். ஹாஜரிடம் நீர் வாங்கி
அருந்தினர். அவர்களும் அங்கேயே சிறிது
காலம் தங்கினர். பின் அடிக்கடி வந்துக் கொண்டிருந்தனர்.
அல்லாஹ் இப்ராஹிம் (அலை) மை புனித இல்ல மான காபாவை கட்ட கட்டளையிட்டார். இஸ்மாயில் (அலை) கற்களை கொண்டு வரவும் இப்ராஹிம் (அலை) அதை வைத்து அஸ்திவாரத்தை அமைத்தார். அவர்கள் இருவரும் சிறிது சிறிதாக அதை உயர்த்திய போது, "எங்கள் இறைவனே எங்களிடமிருந்து (இப்பணியை) ! ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே யாவற்றையும் அறிபவனாகவும் கேட்பவனாகவும் இருக்கின்றாய்" என்று கூறினர். (2:127).
அவ்வீட்டை உயர்த்திய பிறகு இப்ராஹிம் (அலை) இந்த துவாவை ஓதினார். "இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார் களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங் களையும் கொண்டு உணவளிப்பாயாக" என்று கூறினார். (2:126) விவசாயமில்லாத வெட்ட வெளியான பள்ளத்தாக்கில் வாழ்க்கை வாழ்வது மிகவும் கடினமான ஒன்று. இதை அறிந்த இப்ராஹிம் (அலை) தன்னைப் படைத்தவனும் தன்னை நல்ல விதமாக காத்தருளும் இறைவனிடம் அங்கு தங்கியிருப்பவர்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் பழங்கள் தந்தருள இவ்வாறு பிரார்த்தித்தார். அதற்கு இறைவன் பதில் அளித்தான்; "ஆம்! யார் நம்பிக்கை கொள்ளவில் லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுப வத்தை அளிப்பேன். பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன். அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே" (2:126).
அல்லாஹ்
இப்ராஹிம் (அலை) மின் இந்த துவாவை அங்கீகரித்து காபா என்னும் வீட்டை நாம் மக்கள்
ஒதுங்கும் இடமாகவும் பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம். இன்னும், இப்ராஹிம் (அலை) நின்ற இடத்தை தொழும் இடமாக “மகாமு இப்ராஹீமை” ஆக்கினோம். இன்னும், 'என்
வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்ப வர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத்
தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்' என்று
இப்ராஹீம் (அலை) மிடமிருந்தும், இஸ்மாயீல்
(அலை) மிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.(2:125).
அல்லாஹ் அவர்களுடைய துவாவை அங்கீகரித்து சூரா ஃகஸஸ் அத்தியாயத்தில் 57-வது வசனத்தில் கூறியுள்ளான்: "நாம் அவர்களைச் சங்கையான இடத்தில் பாதுகாப்பாக வசிக்கும்படி வைக்க வில்லையா? அவ்விடத்தில் ஒவ்வொரு வகைக் கனிவர்க்கமும் நம்மிடமிருந்துள்ள உணவாகக் கொண்டுவரப்படுகிறது எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதை அறிய மாட்டார்கள்.” என்று. ((28:57. மேலும் "எவர் அதில் நுழைகிறாரோ அவர் அச்சம் தீர்ந்தவராகப் பாதுகாப்பும் பெறுகிறார்" என்றும் கூறியுள்ளான். (3:97). "அன்றியும் (மக்கா வை) சூழவுள்ள மனிதர்கள் (பகைவர்களால்) இறாய்ஞ்சிச் செல்லப்படும் நிலையில் (இதை) நாம் பாதுகாப்பான புனிதத் தலமாக ஆக்கியிருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (29:67) என்றும் கூறியுள்ளான்!
ஆம்! இவ்வுலகமே இப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிறது அல்லாஹ் தன் நண்பரான (ஃகலீல்) இப்ராஹீம் (அலை) மின் இந்த துவாவை அங்கீகரித்து மக்காவை பாதுகாப்பான இடமாக வைத்து, ஆண்டு முழுவதும் உலகத்தின் பல வகையான பழங்களை அங்கு கிடைக்கும்படி ஏற்பாடு செய்துள்ளான். இது புனித பூமிற்கு அல்லாஹ் காட்டும் பரிவும் கருணையும் அருள் வளமுமே ஆகும். (29:27)
அல்லாஹ்
முஸ்லிம்களை முஹம்மது ﷺ
மூலமாக நேர்வழியில் செலுத்தி இப்ராஹீம் (அலை)மின்
மார்க்கத்தை நிலை நிறுத்தும் படி செய்துள்ளான் (6:161). மனிதர்களிடைய சிறந்த முன்னோடியாக
திகழ்ந்த இப்ராஹிம் (அலை) போல் நாமும் பிரார்த்தித்து நம் பிரார்த்தித்தனையின்
பயனை அடைவோமாக!
உங்கள்
இறைவன் கூறுகிறான்; "என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்;
நான் உங்(கள் பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கின்றேன்" (40:60)
என்று.
الحمدلله
No comments:
Post a Comment