22. கீழே கொடுக்கப்பட்ட உணவுகளில் ஒரே ஓரு உணவு மட்டும் ஆகுமானது. அது
எது?
1) பன்றியின் இறைச்சி,
2) இரத்தம்,
3) தானாகச் செத்தது,
4) அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது
கூறப்பட்டு அறுக்கப்பட்டது,
5) பிஸ்மில்லா சொல்லாமல் அறுத்தது,
6) பிஸ்மில்லாஹ் சொல்லி ஏவிய வேட்டையாடும் பறவைகளால் பிடிக்கப்பட்ட விலங்குகள்,
7) கழுத்து நெறித்துச் செத்தது,
8) கீழே விழுந்து செத்தது,
9) கொடுரமாக அடிப்பட்டு செத்தது,
10) கொம்பால் முட்டப் செத்தது,
11) விலங்குகள் கடித்தவை,
12) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில்
அறுக்கப்பட்டவை.
பதில்:
✓ 6)
பிஸ்மில்லாஹ் சொல்லி ஏவிய வேட்டையாடும்
பறவைகளால் பிடிக்கப்பட்ட விலங்குகள்.
“(தானாகச்)
செத்தது, இரத்தம், பன்றியின்
இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது
கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து
நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால்
முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித் (துச் செத்) தவையும் உங்கள் மீது
ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்)
எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி)
அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம்
செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு
விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்.” (5:3)
"(நபியே!)
அவர்கள் (உண்பதற்குத்) தங்களுக்கு ஹலாலான (அனுமதிக்கப்பட்ட) வை எவை என்று உம்மிடம்
கேட்கிறார்கள்; நீர் கூறும்: உங்களுக்கு ஹலாலானவை,
சுத்தமான நல்ல பொருள்களும், அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி,
பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை
வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள்; எனினும்
நீங்கள் (வேட்டைக்கு விடும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறி விடுங்கள்;
அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகவும் விரைவானவன்." (5:4)
No comments:
Post a Comment