Thursday, October 20, 2022

8. சித்ரத்-துல்-முன்தஹா (سِـدْرَة الْـمُـنْـتَـهَى) என்றால் என்ன         

பதில்: "ஸித்ரா" என்றால் இலந்தை மரம். "முன்தஹா" என்றால் விளிம்பு. விளிம்பில் அமைந்துள்ள இலந்தை மரம்.

குர்ஆனில் இது பற்றி கூறுகையில், "ஸித்ரத்-துல்-முன்தஹா என்னும் (வான எல்லையிலுள்ள) இலந்தை மரத்தருகே." (53:14) என்று குறிப்பிடு கின்றது.

இம் மரம் ஏழாவது வானத்தில் அமைந்துள் ளது."அதன் சமீபத்தில் தான் ஜன்னத்துல் மஃவா என்னும் சுவர்க்கம் இருக்கிறது." (53:14)

வானத்திலிருந்து கீழே இறங்குபவர்கள் இங்கு நிறுத்தப்படுவார்கள். அது போலவே பூமியிலிருந்து மேலே ஏறுபவர்களும் இங்கே நிறுத்தப்படுவார்கள். வானவர்கள், ஏன் ஜிப்ரீல் (அலை) கூட இவ்விடத்தி லிருந்து மேலே செல்ல முடியாது. ஆனால் அல்லாஹ் தன் அருளால் நம் திருத்தூதர் (ﷺ) மட்டும் அதற்கும் மேலே சென்று அல்லாஹ்வின் மாபெரும் அத்தாட்சிகளைக் காண விஷேசமாக வானுல கத்திற்கு அனுப்பப்பட்டார். அதை அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான், "திடமாக, அவர் தம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் மிகப் பெரியதைக் கண்டார்." (53:18)

அருள் பாலிக்கப்பட்ட இம் மரமானது நாம் கற்பனை செய்து பார்ப்பதை விட அப்பாற் பட்டதாக, பல வண்ணங்களால் அழகாக ஜொலித்துக் கொண்டிருப்பதாக நபி பெருமனார் (ﷺ) கூறியுள்ளார்.

மேலும் அவர்: 'அதன் இலைகள் யானைகளின் காதுகள் போலிருந்தன. அதன் பழங்கள் (யமனில் உள்ள) 'ஹஜர்' என்னுமிடத்தின் (உற்பத்திப் பொருளான மண்) கூஜாக்கள் போல் இருந்தன. அம்மரத்தை சுற்றி பொன்னாலான வண்ணத்து பூச்சிகள் பறந்து அந்த இடத்தை மேலும் ஜொலிக்க வைத்து உள்ளன. அதன் ஒவ்வொரு இலையிலும் ஒர் வானவர் அமர்ந்து ஏக வல்லோன் ஆகிய அல்லாஹ் سبحانه وتعالىٰ வின் புகழ் பாடி அவ்விடத்தை புனிதமாக்கிக் கொண்டு இருக்கின்றன.

 அப்துல்லாஹ் பின் மசூத் கூறியதாக இமாம் அஹமத் இதை பதிவு செய்துள் ளார்: மிஹ்ராஜ் என்ற வானுலக பயணத்தின் போது ஜிப்ரீல் (அலை) நபி பெருமானாரை இம்மரத்தின் அருகே கொண்டு சென்றார். அவர் ஜிப்ரீல் (அலை) முழு உருவத்தை அங்கு கண்டார்." குர்ஆனும் இதையே, "அன்றியும், நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் ஜிப்ரீல் (அலை) இறங்கக் கண்டார்." (அந் நஜ்ம், 53:13).

இலந்தை மரம் இன்னும் இரு வேறு இடங்களில் குர்ஆனில் குறிப்பிடப்பட் டுள்ளது: "இன்னும் வலப்புறத்தார்கள் - வலப்புறத்தார்கள் யார்? (என்பதை அறிவீர்களா?) (அவர்கள்) முள்ளில்லாத இலந்தை மரத்தின் கீழும்" (அல் வாக்கியா, 56:27 & 28) ஆனால் இந்த இலந்தை மரம் முள் இல்லாமலும் அதன் பழங்கள் உயர்ந்த தரமுடையதாக இருக்கும். மேலும் ஸபா சூராவில் 16 -வது வசனத்திலும் இலந்தை மரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                           

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...