Thursday, October 20, 2022

 

9. திருக்குர்ஆனில் முகத்தஆத்/ஃபவாத்தி (مقطعات)/ (فواتح) என்றால் என்ன?

பதில்: திருக்குர்ஆனில் சில சூராக்களின் ஆரம்பத்தில் இருக்கும் தனித் தனியான, மனித அறிவுக்கு எட்டாத எழுத்துக்கள் தான் முகத்தஆத். தெய்வீக இரகசியம் கொண்ட இந்த எழுத்துக் களின் பொருளை  அல்லாஹ் தான் அறிவான். "கத்தாஆஹ்" என்றால் 'வெட்டுதல்' 'சுருக்குதல்' என்று பொருள். இதனால் இவ்வெழுத்துகளை சுருக்கெழுத்துகள் என்றும் கூறுவர்.

இவ்வெழுத்துக்கள் 29 சூராக்களின் முதல் எழுத்தாக அதாவது தொடக்க எழுத்தாக வருவதால் இவற்றை  'ஃபவாத்திஹ்' என்றும் கூறுவர். 

அச்சு இயந்திரங்கள் வருவதற்கு முன்பு கைகளால் எழுதிய புத்தகங்களில் முதல் பக்கத்திலுள்ள முதல் எழுத்தை விஷேமாக அலங்கரித்தோ இல்லை தங்கத் தகடுகளால் இழைத்தோ வைப்பது வழக்கம். அவற்றை 'ஓளிவீசும் எழுத்துக்கள்' என்று கூறுவர். வல்ல அல்லாஹ் தன் புத்தகத்தில் இந்த ஃபவாத் எழுத்துக்களைக் கொண்டு இருபத்தி-ஒன்பது சூராக்களை அலங்கரித்து குர்ஆனை ஒளிரச் செய்து இருக்கின்றான்.

சேர்த்து எழுதியிருந்தாலும் இவற்றை தனித் தனியாகத் தான் வாசிக்க வேண்டும். இருபத்தி-எட்டு அரபு எழுத்துக்களில்  தனித்து நிற்கும் பதிநான்கு எழுத்துக்கள், ஹுருஃப் முகத்தஆத்ஆக உள்ளன. அவை ஒற்றை எழுத்தாக வோ, இரட்டை எழுத்துக்களாகவோ அல்லது மூன்று, நான்கு எழுத்துக்கள் கூட்டாகவே எழுதப்பட்டு இருக்கும்.


குர்ஆனின் சூராவில் உள்ள முகத்தஆத் எழுத்துக்களின் வகை:

a. மூன்று  சூராக்கள் ஒரே ஒரு எழுத்தை கொண்டுள்ளன:

     சூரா ஸாத்-   [38](ص) ஸாத். (நல்லுபதேசங்களின்)       நினைவுறுத்தலைக்  கொண்ட இக்குர்ஆன் மீது         சத்தியமாக.

     சூரா காஃப்-    [50]( ق) காஃப், கண்ணியமிக்க               இக்குர்ஆன் மீது சத்தியமாக!  எனினும்: அவர்           களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி                       எச்சரிக்கை  செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி         அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்;

     ஆகவே, காஃபிர்கள் கூறுகிறார்கள்: “இது ஓர்             ஆச்சரியமான விஷயமேயாகும்.” 

     சூரா கலம் -  [60] (نநூன்; எழுதுகோல் மீதும்               இன்னும் (அதன் மூலம்)  அவர்கள் எழுதுவதின்           மீதும் சத்தியமாக! உம்முடைய இறைவன்                  அருட்கொடையால், நீர் பைத்தியக்காரர் அல்லர்.

b.  ஒன்பது சூராக்கள் இரண்டு எழுத்துக்களைக் கொண்டுள்ளன:

      தாஹா  - [20]  (طه) தா, ஹா. (நபியே!) நீர்                        துன்பப்படுவதற்காக நாம் இந்த  குர்ஆனை                உம்மீது இறக்கவில்லை. (அல்லாஹ்வுக்கு)                  அஞ்சுவோருக்கு நல்லுபதேசமே அன்றி                        (வேறில்லை).

      அந் நமல் - طس) [27] ) தா, ஸீன். இவை குர்ஆனு            டைய தெளிவான வேதத்துடைய - வசனங்                  களாகும். (இது) முஃமின்களுக்கு நேர்வழி                    காட்டியாக வும்  நன்மாராயமாகவும்                            இருக்கிறது.

       யாஸீன்  - يس )  [36]) யா, ஸீன். ஞானம் நிரம்பிய         இக்குர்ஆன் மீது  சத்தியமாக! நிச்சயமாக, நீர்           (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.

 4.  ஆறு சூராக்களில் (حم):

        கா'ஃபிர் - [40] (حم) ஹா, மீம். (யாவரையும்)                    மிகைத்தோனும், மிக அறிந்தோனுமாகிய                  அல்லாஹ்விடமிருந்து இறக்கியருளப் பட்டதே          இவ்வேதம்.    

        ஃபுஸ்ஸிலத் - [41](حمஹா, மீம். அளவற்ற                      அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்                  திலிருந்து இறக்கியருளப் பட்டது;

        அஜ் ஜுக்ருஃப் - [43](حمஹா, மீம். விளக்கமான          இவ்வேதத்தின் மீது சத்தியமாக. நீங்கள்                      அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி            மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்                 கிறோம்.

        அத் துகா'ன் - [44] (حم) ஹா, மீம். தெளிவான                  இவ்வேதத்தின் மீது சத்தியமாக! நிச்சயமாக,            நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே                        இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்)                  அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்            றோம்.

        அல் ஜாதியா - [45] (حم) ஹா, மீம். இவ்வேதம்,                யாவரையும் மிகைத்தோனும் ஞானம்                          மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே                    இறக்கியருளப்பட்டது.

       அல்அஹகாப் - [46] (حم) ஹா, மீம். இவ்வேதம்,               யாவரையும் மிகைத்தோனும் ஞானம்                           மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே                   இறக்கியருளப்பட்டது.

c.  பதின்மூன்று   சூராக்களில் மூன்று                             எழுத்துக்கள் உள்ளன:

     1.ஆறு  சூராக்களில் (الم):

         அல் பகறா -  [2] (الم) அலிஃப், லாம், மீம். இது,                 (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில்                       எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியு               டையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.

        ஆல இம்ரான் - [3] (المஅலிஃப், லாம், மீம்.                      அல்லாஹ் வனைத்தவிர  (வணக்கத்திற்கு              ரிய)  நாயன் வேறில்லை; அவன் நித்திய                      ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.

        அன் கபூத் - [29] (الم) அலிஃப், லாம், மீம்.                          “நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்”                   என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள்                         சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள்               என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்                     களா?

          அர் ரூம் - [30] (المஅலிஃப், லாம், மீம். ரோம்                  தோல்வியடைந்து விட்டது. அருகிலுள்ள                      பூமியில்; ஆனால் அவர்கள் (ரோமர்கள்)                       தங்கள் தோல்விக்குப்பின் விரைவில்                            வெற்றியடைவார்கள்.

          லுக்மான் - [31] (الم) அலிஃப், லாம், மீம். இவை                ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்க                        ளாகும். (இது) நன்மை செய்வோருக்கு நேர்                  வழி காட்டியாகவும்  ரஹ்மத்தாகவும்                            இருக்கிறது.

          அல்ஸஜ்தா - [32] (الم) அலிஃப், லாம், மீம்.                        அகிலங்களின் இறைவனிடம்  இருந்து                          அருளப்பட்டுள்ளது - இவ்வேதம் என்பதில்                    சந்தேகமில்லை.

     2. ஐந்து சூராக்களில் ( الر):

        யூனுஸ் - [10] (الر) அலிஃப், லாம், றா. இவை                    ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.

        ஹூத் - [11] (الر) அலிஃப், லாம், றா. (இது)                       வேதமாகும்; இதன் வசனங்கள் (பல்வேறு                   அத்தாட்சிகளால்) உறுதியாக்கப்பட்டு                         பின்னர் தெளிவாக  விவரிக்கப்பட்டுள்ளன-               மேலும், (இவை யாவற்றையும்) நன்கறிபவ                 னும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)                       வனிடம் இருந்து(வந்து)ள்ளன.

       யூஸுஃப் - [12] ( الر) அலிஃப், லாம், றா. இவை               தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும்.             நீங்கள் விளங்கிக்கொள்வதற்காக,                               இதனைஅரபி மொழியிலான குர்ஆனாக                     நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்.

       இப்ராஹிம் - [14] (الر) அலிஃப், லாம், றா.                         (நபியே!  இது) வேதமாகும்; மனிதர்களை                     அவர்களுடைய இறைவனின் அனுமதியைக்             கொண்டு இருள்களிலிருந்து வெளியேற்றிப்               பிரகாசத்தின் பால் நீர் கொண்டுவருவதற்காக         இ(வ் வேதத்)தை நாமே உம்மீது இறக்கி                       யிருக்கின்றோம்; புகழுக்குரியவனும்,                           வல்லமை மிக்கோனுமாகிய (அல்லாஹ்வின்)             பாதையில் (அவர்களை நீர் கொண்டு                           வருவீராக!).

       அல் ஹிஜ்ர் - [15] ( الر) அலிஃப், லாம், றா.                         (நபியே!) இவை வேதத்தினுடையவும்                             தெளிவான திருக்குர்ஆனுடையவுமான                       வசனங்களாகவும். தாங்களும்  முஸ்லிம்களாக         இருந்திருக்க வேண்டுமே, என்று காஃபிர்கள்               (மறுமையில் பெரிதும்) ஆசைப்படுவார்கள்.

       இதில் நான்கு சூராக்கள் நபியின் பெயர்களை           பெற்று இருக்கின்றன.

     3. இரண்டு  சூராக்களில்  (طسم):

      அஷ்ஷூஅரா  [26] தா, ஸீம், மீம். இவை,                      தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.                    (நபியே!) அவர்கள் (அல்லாஹ்வை) விசுவாசம்            கொள்பவர்களாக  இல்லாததின் காரணமாக            (துக்கத்தால்) உம்மை நீரே அழித்துக்கொள்வீர்          போலும்!  

     அல் கஸஸ் - [28] தா, ஸீம்,மீம். இவை                             தெளிவான வேதத்தின் வசனங்களாகும்.                     நம்பிக்கை கொள்ளும் மக்களுக்காக  நாம்                 மூஸாவுடையவும்  ஃபிர்அவ்னுடையவும்                       வரலாற்றிலிருந்து உண்மையைக் கொண்டு,             ஓதிக் காண்பிக்கின்றோம்.

d. இரண்டு  சூராக்களில் நான்கு எழுத்துக்கள் உள்ளன:

    அல் அராஃப் [7]  (المص) அலிஃப், லாம், மீம், ஸாத்.          (நபியே!) இதன் மூலம் நீர் எச்சரிக்கை                          செய்வதற்காகவும் முஃமின்களுக்கு நல்லுப                தேசமாகவும் உமக்கு அருளப்பட்ட வேதமாகும்          (இது). எனவே இதனால் உமது உள்ளத்தில் எந்த        தயக்கமும் ஏற்பட வேண்டாம்.

     அல் ரஅத். [13] (المر) அலிஃப், லாம், மீம், றா.                   இவை வேதத்தின் வசனங்களாகும். மேலும்               (நபியே!) உம் மீது, உம் இறைவனிடமிருந்து                 அருளப்பட்டுள்ள இது உண்மையாகும் -                       எனினும் மனிதர்களில் பெரும்பாலோர்                       (இதனை) நம்புவதில்லை.

e.  இரண்டு  சூராக்களில் ஐந்து எழுத்துக்கள் உள்ளன:

      மர்யம் [19]  كهيعص)) காஃப், ஹா, யா, ஐன், ஸாத்.          (நபியே! இது) உம்முடைய  இறைவன் தன்                  அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய                      ரஹ்மத்தைப்  பற்றியதாகும்.

      அஷ்ஷுரா [42] حمعسق)) ஹா, மீம். ஐன், ஸீன்,                  காஃப். (நபியே!) இது போன்றே   அல்லாஹ்                  உமக்கும், உமக்கு முன் இருந்தவர்(களாகிய              நபிமார்)களுக்கும் வஹீ அறிவிக்கின்                            றான்;  அவனே (யாவரையும்) மிகைத்தவன்;             ஞானம்  மிக்கோன்.

முகத்தஆத் எழுத்துக்களைப் பற்றி அறிஞர்கள்  கூறிய சில கருத்துக்களைக் காண்போம்:

 அபு பக்கர் (ரஜி) கூறினார்: ' ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஒரு இரகசியம் இருக்கும். திருக்குர்ஆனின் எல்லா இரகசியங்களும்  அத்தியாயத்தின் தொடக்க எழுத்துக்களில் அமைந்துள்ளது." இப்னு அப்பாஸ் (ரஜி) கூறுகிறார்: "அறிஞர்கள் முகத்தஆத் எழுத்துக்களின் அர்த்தங்களை கண்டு பிடிக்க முடியவில்லை." அஷ்- ஷாபி கூறுகிறார்: "அவை அல்லாஹ்வின் இரகசியம். அதனை அறிய முற்படாதீர்கள்."

தற்போதைய  சில அறிஞர்களின் கருத்துக்களை காண்போம்:

    ★ அவை அல்லாஹ்வின் திருநாமங்களை உணர்த்துவதற்காக இருக்கலாம்.

    அவை அல்லாஹ்வின் பண்புகளை சுருக்கிக்கூறும் சுருக்கெழுத்துக்களாக இருக்கலாம.

    அவை அச்சூராவின் சாரத்தை உணர்த்தும் அடையாளங்களாக  இருக்கலாம்.

    அவ்வெழுத்துக்களுக்கும் சூராவில் உள்ள வசனங்களுக்கும் ஒரு வித தொடர்பு இருக்கலாம்.

    அவ்வெழுத்துக்கள் அல்லாஹ்வும் நபி (ﷺ)மும் பகிர்ந்துக் கொள்ளும்  சமிக்கைகளாகவும் இருக்கலாம்.

    அவை முதஷாபிஹான (சரியாக புரிந்து கொள்ளமுடியாத) வசனங்களாக இருக்கலாம்.

    அல்லாஹ் இந்த எழுத்துக்களால் அடுத்துள்ள வசனங்களை ஆணையிடுகின்ற மாதிரியும், சபதம் எடுப்பது போலவும் இருக்கலாம்.

    பின் வரும் வசனங்களுக்கு, முன்எச்சரிக்கை செய்வதற்காகவும் அமைந்திருக்கலாம்.

    அல்லது பின் வரும் வசனங்களை நாம் வாசிக்கும்போதோ கேட்கும் போதோ நம் கவனததை ஈர்ப்பதற்காக  இருக்கலாம்.

    இவை மனித அறிவுக்கு எட்டாத தெய்வீக அடையாளச் சொற்களாகவோ  அல்லது குறியீடுகளாகவோ இருக்கலாம்.

    திருக்குர்ஆன் அரபுகளுக்கும், பின் வரும் சமுதாயத்தினற்கும், வல்ல  அல்லாஹ்வினால் இறக்கப்பட்ட ஒன்று என்று  வெளிப்படையான   சான்றாக சவாலாக உள்ளன  இவ்வெழுத்துக்கள்.

குர்ஆனின் தனித்துவத்தை அறிவிக்கும் வகையிலும், அதை இறக்கி  வைத்த ஆசிரியரின் தெய்வீகத் தன்மையை பறை சாற்றும் வகையிலும்  இவெழுத்துக்கள் அமைந்துள்ளன.

இவ்வெழுத்துக்கள் எண் மதிப்போடு (அப்ஜத் எண்) இருப்பதால் பதிவு

  செய்வதற்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக: 

     (ا) ன் மதிப்பு ஒன்று (ل) ன் மதிப்பு முப்பது (م) ன் மதிப்பு 40. ஆகையால் (الم உடைய மதிப்பெண் 71. இது போலவே "பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான்   நிர்ரஹீம்"- ன் மதிப்பு 786.


      உண்மையை அல்லாஹ் தான் நன்கறிவான்!

 

 

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...