11. கீழ்
கண்டவர்களில் யார் அல்லாஹ்வை கண்ணால் நேரில் பார்த்தவர்:
1. இப்ராஹிம்
கலீலுல்லாஹ்.
2. மூஸா
கலீமுல்லாஹ்
3. முஹம்மதுர்
ரசூலுல்லாஹ்
4. ஈஸா
ரூஹுல்லாஹ்
5. யாருமில்லை
பதில்:
5. யாருமில்லை
நாம்
எல்லோரும் நம் வாழ்க்கையில் ஒரு தடவையோ அல்லது பல தடவையோ அல்லாஹ்
இருப்பதை உணர்ந்துள்ளோம். ஆனால் யாரும் அவனை காண முடியாது. அல்லாஹ்வே சூரா அல்
அன்ஆம் வசனம் 103 இல், "பார்வைகள்
அவனை அடைய முடியாது. ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகயும் (சூழ்ந்து) அடைகிறான்."
(6:103)
அல்லாஹ் மூஸா (அலை) மை தூர் மலையிலிருந்து அழைத்து பேசிய பொழுது, அவர் அல்லாஹ்வை காண விரும்பினார். அவர் கூறினார் "என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அல்லாஹ், "மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!" என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், "(இறைவா!) நீ மிகவும் பரிசத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர் களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்" என்று கூறினார்." (7:154).
நம்
இறை தூதர் நபி ﷺ அவர்களிடம், தாங்கள்
இரவு பயணம் மேற் கொண்ட போது அல்லாஹ்வை கண்டீரா? என்று
ஒருவர் கேட்க, அவர் கூறினார், "நான் ஒளியை கண்டேன். அவர் போர்வை ஒளி. நான் எப்படி அவரை காண முடியும்?"
அல்லாஹ்வே தன் ஒளியைப்பற்றி சூரா நூரில் கூறுகையில்: "அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) அவன் (ஏற்படுத்தும்) ஒளிக்கு உவமை விளக்கு வைக்கப்பட்டுள்ள மாடம் போன்றதாகும். அவ்விளக்கு ஒரு கண்ணாடி(க் குவி) யில் இருக்கிறது அக் கண்ணாடி ஒளிவீசம் நட்சத்திரத் தைப் போன்றதாகும். அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தி(ன் எண்ணெயி)னால் எறிக்கப் படுகிறது. அது கீழ்த் திசையை சேர்ந்தது மன்று மேல் திசையை சேர்ந்ததுமன்று. அதனை நெருப்புத் தீண்டா விடினும், அதன் எண்ணெய் ஒளி வீச முற்படும், (இவை எல்லாம் சேர்ந்து) ஒளிக்கு மேல் ஒளியாகும். அல்லாஹ் தான் நாடியவரை தன்னுடைய ஒளி (என்னும் சத்தியப் பாதை)யின் பால் நடத்திச் செல்கிறான். மனிதர்களுக்கு இத்தகைய உவமைகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் யாவற்றையும் நன்கு அறிபவன்." (24:35).
குர்ஆனின்
மற்றொரு இடத்திலும் அல்லாஹ்வின் ஒளியைப் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.
"மேலும், பூமி தன் இறைவனுடைய ஒளியைக் கொண்டு
பிரகாசிக்கும்" (39:69).
சுவர்க்கவாசிகள்
அல்லாஹ்வை அவர்கள் அருகில் காண்பார்கள். இதை சூரா கியாமாவில் அல்லாஹ்
குறிப்பிடுகின்றான். "அந்நாளில் சில முகங்கள் (மகிழ்ச் சியால்) செழுமையாக
இருக்கும். தம்முடைய இறைவனளவில் நோக் கியவையாக இருக்கும்." (75:22-23).
அல்லாஹ்வின்
ஒளி நம்மை நம் வாழ்நாள் முழுவதும் வழிகாட்டட்டும். ஆமீன்!
No comments:
Post a Comment