Friday, October 21, 2022

 

10. ‘சிராத் மற்றும் அல்-கந்தாரா’ என்றால் என்ன?

பதில்: சிராத் மற்றும் அல்-கந்தாரா என்பது இரண்டு பாலங்கள். விசுவாசிகள் ஜன்னாவுக்குள் நுழைவதற்கு முன்பு இந்த இரண்டு பாலங்களை கடக்க வேண்டியிருக்கும். சிராத் மற்றும் கந்தாரா பாலங்கள் பற்றி திருக்குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை.

மனித குலம் உயிர் பெற்று எழும் மறுமைநாளில், ஒவ்வொரு மனிதனின் நற்செயல்களும் தீயசெயல்களும் தராசில் எடை போடப்படும். பெரும் பாலும் முதல்  கிஸ்ஸ்கள் (பதிலடி/ பழிக்குப்பழி)  பொது கிஸ்ஸ்கள் என்றழைக்கப் படுகின்றன.  மேலும் படைப்புகளுக்கிடையில் அவர்கள் இழைத்த தீங்கிற்கு ஈடாக நல்ல செயல்களை  பரிமாறிக்கொள்வது. இது ஒரு வகையான இழப்பீடாக நடைபெறுகிறது. மேலும் இது அனைத்து படைப்புகள், விசுவாசிகள், காஃபிர்கள், விலங்குகள் போன்றவற்றுடன் நடைபெறும். (ஸஹிஹ் முஸ்லிம், 45/77 ). எவருடைய நற்செயல்கள் கனமாக இருந்தனவோ அவர்கள்  இரண்டு பாலங்களை கடந்து சுவனபதியடைவர்.

சிராத் பாலம்:

ஒரு ஹதீஸில், இப்பாலம் நரகத்தின் மேல் உள்ளது என்றும் இது நெருப்பை விட உஷ்ணமாகவும், வாளை விட கூர்மையாகவும், முடியை விட மெல் லியதாகவும் அமைந்துள்ளது என்று கூறப்படுகின்றது. அல்லாஹ் நம்மையும், நம் குடும்பத்தாரையும் அதை எளிதாக கடக்க அருள் புரிவானாக!

நாங்கள், நபி தோழர்கள், நபி (ﷺ)மிடம், “அல்லாஹ்வின் தூதரே(ﷺ)!   சிராத் பாலம்  என்றால் என்ன? ” என்று கேட்ட போது, அவர் சிராத் பாலத்தை பற்றி பின் வருமாறு கூறுகிறார்: “இது ஒரு வழுக்கும் (பாலம்), அதில் கவ்விகள், (கொக்கிகள் போன்றவை) ஒரு பக்கத்தில் அகலமாகவும், மறு புறம் குறுகலாகவும், வளைந்த முனைகளுடன் முட்களைக் கொண்டதாகவும் இருக்கும். அத்தகைய முட்கள் அஸ்-சதான் விதைகளைப் போலிருக்கும்.

விசுவாசிகளில் சிலர் கண் சிமிட்டும் நேரத்திலும், மின்னல் வேகத்திலும் விரைவாக பாலத்தைக் கடப்பார்கள், இன்னும் சிலர் வலுவான காற்று போல் அல்லது வேகமாக செல்லும் குதிரைகள் மற்றும் பெண் ஒட்டகங்கள் போன்றும் கடப்பார்கள். சிலர் எந்தத் தீங்கும் இல்லாமல் பாதுகாப்பாக கடப்பார்கள்; சிலர் கடக்கும் போது உடலில் கீறல்கள் உண்டாகும், மேலும் சிலர் சிரமப்பட்டு கடக்க முயலும் போது கீழே உள்ள நரகத்தில் (தீயில்) வீழ்வார்கள்.  கடைசி நபர் இழுத்துச் செல்லப்படுவார். ” [ஸஹிஹ் அல் புகாரி, 7439]

 அபு ஹுரைரா (ரஜி)வின் மற்றொரு நீண்ட ஹதீஸில் இது பற்றி  மேலும் விவரிக்கப்பட்டுள்ளது.  நபி தோழர்கள் "நபி (ﷺ)அவர்கள் தீர்ப்பு நாளில் அல்லாஹ்வைக் காண்பார்களா! என்று  கேட்ட போது, பின்னர் அல்லாஹ் மீண்டும் அவர்களிடம் வந்து, 'நான் உங்கள் இறைவன்' என்று கூறுவார். 'நீ எங்கள் இறைவன்' என்று மக்கள் கூறுவார்கள். அல்லாஹ் அவர்களை அழைப்பான், அஸ்-சிராத் பாலம் நரகத்தின் குறுக்கே போடப்படும், நான் (முஹம்மது) அப்போஸ்தலர்களில் முதன்மையானவனாக என்னை பின்பற்றியவர்களுடன் கடப்பேன். மற்ற அப்போஸ்தலர்கள்  'அல்லாஹ்வே! எங்களை காப்பாற்றுங்கள்! அல்லாஹ்வே! எங்களை காப்பாற் றுங்கள்! ' என்று கூறிக் கொண்டே கடப்பார்கள். அப்பாலத்தில் சதானின் முட்கள் போன்ற கொக்கிகள் இருக்கும். சதானின் முட்களைப் பார்த்திருக்கிறீர்களா? ” என கேட்க அவர்கள், “ஆம்” என்றார்கள். அவர் கூறினார், “இந்த கொக்கிகள் சதானின் முட்கள் போலிருக்கும். ஆனால் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் அவற்றின் செயலைப் பற்றி தெரியாது. இவை மக்களை அவர்களின் செயல்களின் படி சிக்க வைக்கும்; அவர்களில் சிலர் நரகத்தில் விழுந்து என்றென்றும் அதில் தஙகி  விடுவார்கள். மற்றவர்கள் இந்த முட்களால் சிறிய துண்டுகளாக கிழிக்கப்படுவார்கள்‌. ஆனால் நரகத்தில் விழமாட்டார்கள்." [ஸஹிஹ் அல் புகாரி, புத்தகம் 10, ஹதீஸ் 201].

அல்- கந்தாரா:

இரண்டாவது பாலம் - அரபு மொழியில் அல்-கந்தாரா (القنطرة)  என்று அழைக் கப்படுகிறது. அல்-கந்தாரா என்பது சுவர்க்கத்திற்கும், நரகத்திற்கும் இடையே உள்ள வளைந்த சிறிய பாலம். விசுவாசிகள் 'சிராத்' பாலத்தை கடந்த பிறகு ஜன்னாவுக்குள் நுழைவதற்கு முன்பு இந்த இரண்டாவது பாலத்தை கடக்க வேண்டியிருக்கும்.  நபி(ﷺ) கூறியதாக அபு சயீத் அல் - குத்ரீ (ரஜி) தெரிவிக் கிறார், “விசுவாசிகள் நரக நெருப்பைக் கடக்கும் போது, அவர்கள் சொர்க்கத் தில் நுழைவதற்கு முன்பு ஒரு சிறிய வளைந்த பாலத்தில் (கந்தாரா) நிறுத்தப்படுவார்கள், அவர்கள் பரிசுத்தப்படும் வரை அவர்களுக்கிடையேயான அநீதிகளுக்கு பழிவாங்கப்பட வேண்டும். (பின்னர்) அவர்கள் ஜன்னாவுக்குள் நுழைய அனுமதிக்கப் படுவார்கள். ஆகவே, யாருடைய கைகளில் என் ஆத்மா இருக்கிறதோ அவரால்,  அவர்கள் ஜன்னாவிலுள்ள தங்கள் வீடுகளுக்குச் செல்லும் வழியை அறிந்து கொள்வார்கள், துனியாவிலுள்ள தங்கள் வீடுகளுக்கு அவர்கள் செல்லும் வழிகளை அவர்கள் அறிவதைப் போல்.” [ஸஹீஹ் அல் புகாரி, 6535]

இங்கு தான் தீர்ப்பு  நாளில் இரண்டாவது  கிஸ்ஸ்கள் (பதிலடி/ பழிக்குப்பழி) நடைபெறுகிறது. இரண்டாவது  கிஸ்ஸ்கள் பெரும்பாலும் ஒரு சிறப்பு கிஸ்ஸஸ்கள் என அழைக்கப்படுகின்றன, ஏனெனில் இது விசுவாசிகளுக்கு இடையில் மட்டுமே உள்ளது, குறிப்பாக சொர்க்கத்திற்கு செல்வதற்கு முன்பு. "விசுவாசிகள் அல்-சிராத்தை கடந்தபின் அல்கந்தாரா பாலத்தில் தடுத்து வைக்கப்படுவார்கள் என்பது அல்-ஸஹீயினில் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் குரோதங்களை தன் நற்செயல்கள் கொடுத்து  தீர்த்துக் கொள்வார்கள். இதனால் அவர்கள் சுத்திகரிக்கப் பட்டு,  சொர்க்கத்தில் நுழைய அனுமதி வழங்கப்படும்.

 

முஸ்ததரக் அல்-ஹக்கீ-மில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஹதீஸ் உள்ளது: "நபி (ﷺ) அவர்கள் உம்மத்திலிருந்து இரு ஆண்கள் அல்லாஹ்  عز و جل முன் நிற்பார்கள். ஒரு மனிதன் கூறுவான், “இந்த மனிதன் எனக்கு எதிராக செயல் புரிந்தான். ஆகையால், அவனுடைய நற்செயல்களிலிருந்து எனக்கு சிறிது அளிப்பீராக என்று கேட்பான்.” அல்லாஹ் அவனிடம், “சொர்க்கத்தில் உள்ள இந்த பெரிய அரணமனையை  காண்கிறீர்களா?” என்று கேட்பார். அந்த மனிதன் அரண்மனையைப் பார்ப்பான், அல்லாஹுதாலா அவனிடம், “இன்று உன் சகோதரனை மன்னித்தால் அது உனக்கு சொந்தமானது” என்று கூறுவான். அந்த மனிதன் அவனை மன்னிப்பான். இந்த ஹதீஸின் முடிவில் ரசூலுல்லாஹ் (ﷺ)  கூறினார்: “அல்லாஹ்விடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள், உங்களிடையே சீர்திருத்தமும் சமரசமும் செய்யுங்கள், உண்மையில் அல்லாஹ் விசுவாசிகள் இடையே நியாயத்தீர்ப்பு நாளில் சமரசம் செய்வான். ”

அல்லாஹ் سبحانه وتعالى முஸ்லீம்களின் இடையே  குரோதங்கள் மற்றும் மனக்கசப்புகளை தீர்த்து வைக்கும் பாலம். இதனால் அவர்கள் பகைமை மறந்து சுவர்க்கத்தில் ஒன்றாக இருப்பார்கள். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்: "மேலும், அவர்களுடைய நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கி விடுவோம்; (எல்லோரும்) சகோதரர்களாக ஒருவ ரையொருவர்முன்னோக்கி அரியாசனங்களில் (ஆனந்தமாக) அமர்ந்தி ருப்பார்கள்." (15:47).

ஒரு மனிதனின் நற்காரியங்கள் அதிக இருக்கும் போது அவற்றை மற்றவர் களுக்கு கொடுக்கலாம். அவை இல்லாவிட்டால் திவாலாகி சுவர்க்கத்தின் வாசலில் நிற்க வேண்டிவரும். ஆகையால் போதுமான நற்காரியங்களை உங்கள் வாழ்நாளிலேயே சேமியுங்கள். உங்களுக்கு அநீதி இழைத்தவர்களை மன்னியுங்கள்! மற்றவர்களுக்கு அநீதி இழைக்காதீர்கள்! இல்லாவிடில் உங்கள் நற்காரியங்களின் பலன் உங்களுக்கு உதவாமல் போகலாம்.

நினைத்து பாருங்கள்! சிராத் பாலத்தை கடந்த பிறகு, சுவர்க்கத்தின் கதவுக ளுக்கு முன்னே நின்று கொண்டு, அதில் நுழைய முடியாமல், தன் நல்ல காரியங்களை எல்லாம் இழந்து நிற்கும் விசுவாசிகளின் நிலை எப்படி இருக்கும் என்று.

கந்தாரா பாலத்தை வெற்றிகரமாக கடக்க உங்கள் வாழ்நாளில்  கீழே கொடுக்கப்பட்டவற்றை கடைபிடியுங்கள்:

  நற்காரியங்களை அதிகப்படுத்துங்கள்

  கெட்ட காரியங்கள் செய்வதை தவிருங்கள்

  எவரையும் (முஸ்லிம்களை, காஃபிர்களை, மற்றும் விலங்குகளை) 

கஷ்டப்படுத்த/அநீதி இழைக்க வேண்டாம். ஏனெனில் அதனால் உங்கள்

நற்காரியங்களின் பலனைகளை அதற்கு இணையாக இழக்க நேரிடும். 

மற்றவர்களுக்கு அநீதி இழைக்காதீர்கள்! அப்படி அநீதி இழைத்துவிட்டால் அவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்! அல்லது அல்லாஹ்விடம் மன்னிப்பு கேளுங்கள்! அல்லது நற்காரியங்களை செய்யுங்கள். அது நீங்கள் செய்த அநீதி- நீக்கும். உங்களுக்கு அநீதி இழைத்தவர்களை மன்னியுங்கள்!

சுலைமான் (அலை) பிரார்த்தித்ததைப் போல் பிரார்த்திக்கவும். "என்னை உனக்கு பிடித்தமான நற்காரியங்களை செய்யும்படி தூண்டுவாயாக!"

உங்களுடைய நற்காரியங்கள் வீணாகாமல் பாதுகாக்கும்படி வல்ல அல்லாஹ்விடம் கேளுங்கள்!

    ஆமீன்! அல்லாஹ் இதைப்பற்றி  நன்கறிந்தவன்!

                எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே!

No comments:

Post a Comment

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...