Saturday, May 31, 2025

 

3. காபா வணக்கத்திற்கென கட்டப்பட்ட முதல் வீடு 

السلام عليكم ورحمة الله وبركاتة

ِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே!) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்; அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை.” [3:95].

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக மக்காவில் உள்ளது தான்; அது பாக்கியம் மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. (3:96)

அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது; மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கின்றான். (3:97)

الحمدلله

 

 

 

3. Kabah, the first House of worship

السلام عليكم ورحمة الله وبركاتة

ِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

Say, "Allāh has told the truth. So follow the religion of Ibraham (AS), inclining toward truth; and he was not of the mushrikeen." [3:96]

The first House [of worship] to be established for people was the one at Mecca. It is a blessed place; a source of guidance for all people; [3:96]

In it are clear signs [such as] the standing place of Ibrahim (AS). And whoever enters it [i.e., the Ḥaram] shall be safe. And [due] to Allāh from the people is a pilgrimage to the House - for whoever is able to find thereto a way. But whoever disbelieves [i.e., refuses] - then indeed, Allāh is free from need of the worlds. [3:97]

الحمدلله

 

Friday, May 30, 2025

  

2. இப்ராஹிம் (அலை) மற்றும் இஸ்மாயில் (அலை) காபாவை கட்டி என்ன பிரார்த்தித்தார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

السلام عليكم ورحمة الله وبركاتة 

 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

                  2. ஹஜ் பற்றிய வசனங்கள்

(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்; அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்; நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக (த் தலைவராக) ஆக்குகிறேன்” என்று அவன் கூறினான்;  அதற்கு இப்ராஹீம் (அலை) “என் சந்ததியினரிலுமா?” எனக் கேட்டார்; என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான். (2:124)

(இதையும் எண்ணிப் பாருங்கள்; “கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்; இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்” (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் “என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்” என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம். (2:125)

(இன்னும் நினைவு கூறுங்கள்:) இப்ராஹீம்: “இறைவா! இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக! இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங் களையும் கொண்டு உணவளிப்பாயாக” என்று கூறினார்;  அதற்கு இறைவன் கூறினான்: “(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்; பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன் - அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.”  (2:126)

இப்ராஹீம் (அலை) மும், இஸ்மாயீல் (அலை) மும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, “எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினார்கள்) (2:127)

எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம் களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக;  எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோவும் இருக்கின்றாய்.” (2:128)

எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து; அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து; அவர்களைத் தூய்மைப் படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனுமாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (2:129)

இப்ராஹீம் (அலை)முடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார். (2:130)

இன்னும், அவரிடம் அவருடைய இறைவன் “(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்” என்று சொன்னபோது அவர், “அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்” என்று கூறினார். (2:131)

இதையே இப்ராஹீம் (அலை) தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.” (2:132)              

الحمدلله

 

2. Do you know what supplications are made by  Ibrahim (AS) and Ismail (AS) after building Kabah?

السلام عليكم ورحمة الله وبركاتة 

 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ

                       2. Quranic verses about Hajj

Answer:

When Ibrahim (AS)’s Lord tested him with certain commandments, which he fulfilled, He said, ‘I will make you a leader of people.’ Ibrahim (AS) asked, ‘And will You make leaders from my descendants too?’ Allah answered, ‘My pledge does not hold for those who do evil.’ [2:124]

And [mention] when We made the House [i.e., the Kaʿbah] a place of return for the people and [a place of] security. And take, [O believers], from the standing place of Ibrahim (AS)  a place of prayer. [2:125]

And We charged Ibrahim (AS) and Ismail (AS), [saying], "Purify My House for those who perform ṭawāf and those who are staying [there] for worship and those who bow and prostrate [in prayer]." [2:125]

IbrahIm (AS) said, ‘My Lord, make this land secure and provide with produce those of its people who believe in Allah and the Last Day.’ Allah said, ‘As for those who disbelieve, I will grant them enjoyment for a short while and then subject them to the torment of the Fire- an evil destination.’ [2:126]

As Ibrahim (AS) and Ismail (AS) built up the foundations of the House [they prayed], ‘Our Lord, accept [this] from us. You are the All Hearing, the All Knowing. [2:127]

Our Lord, make us devoted to You; make our descendants into a community devoted to You. Show us how to worship and accept our repentance, for You are the Ever Relenting, the Most Merciful. [2:128]

Our Lord, and send among them a messenger from themselves who will recite to them Your verses and teach them the Book and wisdom and purify them. Indeed, You are the Exalted in Might,1 the Wise." [2:129]

Who but a fool would forsake the religion of Abraham? We have chosen him in this world and he will rank among the righteous in the Hereafter. [2:130]

When his Lord said to him, "Submit," he said, "I have submitted [in Islām] to the Lord of the worlds." [2:131]

And Abraham instructed his sons [to do the same] and [so did] Jacob, [saying], "O my sons, indeed Allāh has chosen for you this religion, so do not die except while you are Muslims." [2:132]

الحمدلله

 

Thursday, May 29, 2025

 

1. Ibrahim (AS) sacrifices to Allahuthala as per His command, his son Ismail (AS). Do you know what Quran says about it?

السلام عليكم ورحمة الله وبركاتة     

ﺑِﺴْـــــــﻢِﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍلرَّﺣِﻴﻢ

                  1. Quranic verses about Hajj

Answer:

[37:99] He (Ibrahim [AS]) said, "Indeed, I will go to [where I am ordered by] my Lord; He will guide me.

[37:100] "My Lord, grant me [a child] from among the righteous."

[37:101] So We gave him the good news that he would have a patient son.

[37:102] And when he reached with him [the age of] exertion, he said, "O my son, indeed I have seen in a dream that I [must] sacrifice you, so see what you think." He said, "O my father, do as you are commanded. You will find me, if Allāh wills, of the steadfast."

[37:103] When they had both submitted to God, and he had laid his son down on the side of his face,

[37:104] We called to him, "O Ibrahim (AS),

[37:105] You have fulfilled the vision." Indeed, We thus reward the doers of good.

[37:106] Indeed, this was the clear trial.

[37:107] And We ransomed him with a great sacrifice,

[37:108] And We left for him [favorable mention] among later generations:

[37:109] "Peace upon Ibraham (AS)."

[37:110] This is how We reward those who do good.

[37:111] Indeed, he was of Our believing servants.

الحمدلله


 

1. இப்ராஹீம் (அலை) தன் மகன் இஸ்மாயில் (அலை) மை அல்லாஹ்வின் கட்டளைப் படி பலியிடுதல் பற்றி திருக்குர்ஆன் கூறியது என்னவென்று தெரியுமா?

السلام عليكم ورحمة الله وبركاتة     

ﺑِﺴْـــــــﻢِﷲِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍلرَّﺣِﻴﻢ

                    1. ஹஜ் பற்றிய வசனங்கள்

பதில்:

(37:99) மேலும், அவர் கூறினார்: “நிச்சயமாக நாம் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்.”

(37:100) “என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).

(37:101) எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.

(37:102) பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”

(37:103) ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது;

(37:104) நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.

(37:105) “திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.

(37:106) “நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”

(37:107) ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.

(37:108) இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்:

(37:109) “இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக"!

(37:110) இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம்.

(37:111) நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.

الحمدلله

 

                                                          அஷூரா நாள்   السلام عليكم ورحمة الله وبركاتة بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱل...