9. ரம்ஜான் கேள்வி-பதில்
لسلام عليكم ورحمة الله وبركاتة
بِسْمِ
ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
9. கதீஜா (ரஜி) அம்மையார் அவர்களுக்கு அல்லாஹீதாலா எவ்வாறு இவ்வுலகில் கெளரவித்தார்?
பதில்: அல்லாஹீதாலா கதீஜா (ரஜி) அம்மையாருக்கு ஜிப்ரீல் (அலை) மூலம் ஸலாம் கூறியனுப்பினார்.
அபு ஹீரைரா (ரஜி) கூறினார்: (ஒரு முறை) நபி ﷺ அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு அல்லது உணவு அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்களிடம் வந்தவுடன் அவருக்கு அவரின் இறைவனின் தரப்பிலிருந்தும் என் தரப்பிலிருந்தும் ஸலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாளிகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.
சராசரியான நம்பிக்கை கொண்ட பெண்மணி யாராவது இதனை கேட்டால் ஆச்சரியமாகி என்ன சொல்வதென்று தெரியாமல், பின் தெளிந்து "அலைக்கும் வஸ்ஸலாம்" என்று கூறியிருப்பர். ஆனால் அல்லாஹ்விடம் ஆழமான புரிதலும், உறுதியான நம்பிக்கையும் கொண்ட கதீஜா (ரஜி) நாயகி மற்றவர்களுக்கு கூறுவது போல் "அலைக்கும் வஸ்ஸலாம்" என்று கூறாமல் "அல்லாஹ்வே சாந்தியானவன்" என்று பதிலளித்தார். ஏனெனில் அவன் தான் நமக்கெல்லாம் சாந்தியும், பாதுகாப்பும் அளிப்பவன். ஜிப்ரில் (அலை) அவர்களை நேரில் காண முடியாததால் அவருக்கு வெறும் "ஸலாம்" கூறினார். மேலும் தன் அன்பு வாழ்க்கை துணைவரான நபி பெருமானார் ﷺ அவர்களுக்கு முறையான முழுமையான “ஸலாம்” கூறினார்.
الحمدلله
No comments:
Post a Comment