14. உங்களுக்கு தெரியுமா ஸாபிகூன்கள் [سٰبِقُوۡنَ]
[முந்தியவர்கள்] யார் என்று?
السلام عليكم ورحمة
الله وبركاتة
بِسْمِ ٱللَّٰهِ
ٱلرَّحْمَٰنِٱلرَّحِيمِ
ஸாபிகூன்கள் [سٰبِقُوۡنَ] [முந்தியவர்கள்] யார் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் சுபஹானஹீதாலா விளக்கியுள்ளான்:
நிச்சயமாக, எவர்கள் தம் இறைவனிடம் அஞ்சுபவர்களாக இருக்கிறார்களோ அவர்களும் (23:57)
இன்னும் எவர்கள் தம் இறைவனுடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களும் (23:58).
இன்னும் எவர்கள் தம் இறைவனுக்கு (எதையும்) இணையாக்காதிருக் கிறார்களோ அவர்களும் (23:59)
இன்னும் எவர்கள் தம் இறைவனிடம் தாங்கள் திரும்பிச் செல்ல வேண்டியவர்கள் என்று அஞ்சும் நெஞ்சத்தினராய் தங்களால் இயன்ற மட்டும் (அல்லாஹ்வின் பாதையில்) கொடுக்கிறார்களோ அவர்களும்- (23:60)
இ(த்தகைய)வர்கள் தாம் நன்மைகளின் பக்கம் விரைகின்றனர்; இன்னும் அவற்றை (நிறைவேற்றி வைப்பதில்) முந்துபவர்களாகவும் இருப்பார்கள். (23:61)
அல்லாஹ் சுபஹானஹீதாலா ஸாபிகூன்களுக்கு மறுமையில் எப்படி வெகுமதி கொடுப்பான் என்று பாருங்கள்:
நம்பிக்கையில்) முந்தியவர்கள் (மறுமையிலும்) முந்தியவர்களே! [56:10].
இவர்கள் (இறைவனுக்கு) அண்மையிலாக்கப்பட்டவர்கள். [56:11]
இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலை களில் இருப்பர். [56:12]ۙ
முதலாமவரில் ஒரு பெருங் கூட்டத்தினரும்
[56:13]
பின்னவர்களில், ஒரு
சொற்பத்தொகையினரும் (56:14).
(பொன்னிழைகளால்) ஆக்கப் பெற்ற கட்டில் களின் மீது, [56:15]
ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்திருப்பார்கள். [56:16]
நிலையான இளமையுடைய இளைஞர்கள் (இவர்கள் பணிக்காகச்) சுற்றிக் கொண்டே இருப்பார்கள். [56:17]
தெளிந்த பானங்களால் நிறம்பிய கிண்ணங் களையும், கெண்டிகளையும், குவளைகளையும் கொண்டு (அவர்களிடம் சுற்றி வருவார்கள்). (56:18)
(அதை) அவர்கள் பருகுவதினால் தலை நோய்க்கா ளாக மாட்டார்கள்; மதிமயங்கவுமாட்டார்கள். {56:19]
இன்னும் அவர்கள் தெரிந்தெடுக்கும் கனி
வகை களையும் [56:20]
விரும்பும் பட்சிகளின் மாமிசத்தையும் (கொண்டு அவ்விளைஞர்கள் வருவார்கள்).(56:21).
(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். [56:22]
மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் அவர்கள் (இருப்பார்கள்).[56:23]
(இவையாவும்) சுவர்க்க வாசிகள் (இம்மையில் செய்து கொண்டிருந்த) செயல்களுக்கு கூலி யாகும். [56:24]
அங்கு இவர்கள் வீணானதையும், பாவமுண்டாக்கு
வதையும் (கொண்ட பேச்சுகளைச்) செவியுற மாட்டார்கள். [56:25]
ஸலாம், ஸலாம்” என்னும் சொல்லையே (செவி யுறுவார்கள்) [56:26].
பிரார்த்தனை:
யா அல்லாஹ்! எங்களை அத்தகைய
ஸாபிகூன் களோடு சேர்த்து கொள்.
الحمدلله